இனி எப்படி டார்ச்சர் பண்ணுவீங்க..உங்க வேலை வேண்டாம்! கம்பெனி முன் குத்தாட்டம்..மேனேஜர் முறைக்கிறாரே!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஊதிய உயர்வு தராததோடு அதிக அழுத்தம் கொடுத்ததால் பணியில் இருந்து விலகிய ஊழியர் மேனேஜரின் கண் முன்னே டோல் அடித்து உற்சாக நடனமாடி வேலையை விட்டுச் சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
உலகளாவிய பொருளாதார நெருக்கடி காரணமாக பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணியில் இருந்து அதிரடியாக நீக்கி வருகின்றன. இது ஒரு பக்கம் என்றால் பல நிறுவனங்கள் தங்கள் திறமையான ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என பல்வேறு சலுகைகளை வாரி வழங்குகின்றன.

அதே நேரத்தில் நாளுக்கு நாள் பெருகிவரும் வேலை வாய்ப்புகள், ஊதிய உயர்வு போன்ற காரணங்களால் பல ஊழியர்கள் தங்கள் பணியாற்றும் நிறுவனங்களை மாற்றி வருகின்றனர்.
ராஜினாமா: ஒரு சிலர் பனி அழுத்தம் மற்றும் ஊதிய உயர்வு கொடுக்காதது ஆகிய பிரச்சினைகளைக்காக நிறுவனங்களை மாற்றி வருகின்றனர். இந்த நிலையில் நீண்ட காலமாக தனக்கு ஊதிய உயர்வு வழங்காத நிறுவனத்தை விட்டு ஊழியர் ஒருவர் வெளியேறி இருக்கிறார். வெளியேறியது மட்டுமல்லாமல் தனது கடைசி நாளை டோல் அடித்து உற்சாகமாக நடனமாடிய காட்சிகள் தான் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கொண்டாட்டம்: புனேவில் உள்ள பிரபல நிறுவனத்தில் விற்பனை அதிகாரியாக பணியாற்றிய அனிகேத் ரந்தீர் என்பவர் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா செய்தது மட்டுமல்லாமல் கடைசி நாளைக் கொண்டாடும் வகையில் தனது அலுவலகத்தின் முன் தனது நாசிக் டோல் கலைஞர்களை அழைத்து வந்து மேலம் அடித்து நடனமாடியுள்ளார். மேலும் தனது நண்பர்களையும் அழைத்து வந்து நடனமாட வைத்துள்ளார்.
மேலாளருக்கு அழைப்பு: நிறுவனத்தின் முன் அவர் நடனமாடியது மட்டுமல்லாமல் தன்னுடன் சேர்ந்து நடனமாடுமாறு தனது அலுவலக மேலாளரையும் அழைத்தார். ஆனாலும் அதனை கோபத்துடன் பார்த்துக் கொண்டிருந்த மேலாளர் முறைத்தவாறு அங்கு இருந்து சென்றார். சிறிது நேரத்தில் அனிகேத் மேலாளரையும், அவரது நிறுவனத்தையும் திட்டி விட்டு அங்கிருந்து சென்றார்
என்ன காரணம்?: இந்த நிலையில் அனிகேத் 3 வருடங்களாக நேரம் காலம் பார்க்காமல் உழைத்த போதும் தான் நிறைய சிரமங்களை சந்தித்ததாகவும், சம்பள உயர்வு இல்லாமல் மூன்று வருடங்கள் அந்த நிறுவனத்தில் பணிபுரிவதாகவும் கூறினார். மேலும் தனது நிறுவனத்தின் உரிமையாளரால் அவமரியாதை செய்யப்பட்டதாகவும், நிறுவனத்தில் தான் பணியாற்ற போது அனுபவித்த ஆரோக்கியமற்ற சூழல் காரணமாகவே தற்போது நடனமாடி தனது உற்சாகத்தை வெளிப்படுத்தியதாக கூறியுள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications