Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடடே இப்படி ஒரு இடமா! இதுவரை கேள்விப்படவே இல்லையே.. ஆனந்த் மகிந்திராவையே மெய்சிலிர்க்க வைத்த ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

மும்பை: ஆனந்த் மகிந்திரா தனது தொழிற்சாலைக்கு அருகிலேயே இருந்த மலைச்சிகரம் ஒன்றை பற்றி முதல் முறையாக கேள்வி பட்டதாக கூறியிருப்பதோடு.. கண்டிப்பாக இத்தகைய இடங்களுக்கு நாம் செல்ல வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

பிரபல தொழில் அதிபர் ஆனந்த் மகிந்திரா. வாகன உற்பத்தி முதல் டெக் கம்பெனிகள் வரை இந்தியாவில் தொழில் சாம்ராஜ்ஜியங்களை நடத்தி வரும் மகிந்திரா & மகேந்திரா குழுமத்தின் தலைவராக ஆனந்த மகிந்திரா இருக்கிறார். உலக அளவில் முன்னணியில் வகிக்கும் நிறுவனங்களின் தலைவராக இருந்தாலும் ஆனந்த் மகிந்திரா சமூக வலைத்தளங்களிலும் படு ஆக்டிவாக இயங்கக் கூடியவர்.

Anand Mahindra mesmerised by a beauty of Mt Kalsubai in Maharashtra

குறிப்பாக எக்ஸ் தளத்தில் தனக்கு பிடித்த துணுக்குகள், தன்னம்பிக்கை கதைகள், எளிய பின்னணியில் இருந்து சாதித்த நபர்கள் குறித்த விவரங்கள் என தான் கண்டு, கேட்டு வியந்த விஷயங்கள் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார். ஆனந்த் மகிந்திராவின் ட்விட்கள் பலவும் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது வைரல் ஹிட் அடிக்கும்.

ஆனந்த் மகிந்திராவை எக்ஸ் தளத்தில் 1 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில்தான், மகாராஷ்ட்டிரா மாநிலத்தில் உள்ள கல்சுபை சிகரத்தின் வீடியோவை பகிர்ந்து இருக்கும் ஆனந்த் மகிந்திரா.. அதன் அழகை பார்த்து மெய்மறந்து ரசித்ததோடு, அது தொடர்பாக ஒரு ட்வீட் பதிவும் பதிவிட்டுள்ளார். ஆனந்த் மகிந்திரா கூறியிருப்பதாவது:-

இது கல்சுபை மலைச்சிகரம்.. மகாராஷ்டிரா மாநிலத்தில் இகாத்புரி அருகே எங்களின் என்ஜின் தொழிற்சாலை அருகே அமைந்துள்ளது. இகாத்புரிக்கு நான் பலமுறை வந்துள்ளேன். ஆனால், இந்த இடம் பற்றியோ அதன் ரம்மியான அழகை பற்றியோ ஒருபோதும் கேள்வி பட்டது இல்லை. கண்டிப்பாக இதை ரசிப்பதற்காக நம் வாழ்வில் நேரம் ஒதுக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களையும், நூற்றுக்கணக்கான கமெண்டுகளையும் சில மணி நேரங்களிலேயெ பெற்றுவிட்டது. ஆனந்த் மகிந்திராவின் இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் ஒருவர் கூறுகையில், இந்த இடம் அருமையாக உள்ளது. நமக்கு அருகாமையிலேயே இப்படி பல இடங்கள் இருக்கின்றன.

இந்த இடம் மகாராஷ்டிராவில் தான் இருக்கிறதா என்று என்னால் நம்பவே முடியவில்லேயே" என்று பதிவிட்டுள்ளார். கோடை விடுமுறைக்கு செல்ல இதுவே சரியான இடமாக இருக்கும் என நெட்டிசன் ஒருவர் கூறியுள்ளார். அதேபோல நெட்டிசன்கள் பலரும் கல்சுபையின் இயற்கை அழகை ரசித்து அங்கு செல்ல வேண்டும் என்ற விருப்பத்தை பகிர்ந்து வருகிறார்கள்.

மகாராஷ்டிராவில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா இடங்களில் ஒன்றாக கல்சுபை உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த இடம் மகாராஷ்டிராவில் உள்ள மிக உயரமான சிகரமாக உள்ளது. அகமத்நகர் மாவட்டத்தில் உள்ள அகோல் தாலுகாவில் இந்த இடம் உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 5,400 அடி உயரத்தில் அமைந்து இருக்கும் இந்த இடம் மகாராஷ்டிராவின் எவரெஸ்ட் என்றும் அழைக்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+