பாப்லோ எஸ்கோபார் வளர்ந்த 80 உயிர்களை காப்பாற்றும் ஆனந்த் அம்பானி செயலால் கொலம்பியா அரசு ஷாக்!
உலகளாவிய வனவிலங்கு பாதுகாப்பு துறையில் வரலாற்றை படைக்கும் வகையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இயக்குநர் ஆனந்த் அம்பானி சிறப்பான திட்டத்தை முன்வைத்துள்ளார். கொலம்பியாவில் உள்ள ஹிப்போக்களை (நீர்யானை) கொல்லும் திட்டத்தை கைவிட்டு, அவற்றை இந்தியாவுக்கு அனுப்புமாறு ஆனந்த் அம்பானி கொலம்பிய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொலம்பியாவின் மக்டலேனா (Magdalena) ஆற்றுப் பகுதியில் தற்போது பெரும் எண்ணிக்கையில் நீர்யானைகள் உள்ளன. இவை முன்பு போதைப்பொருள் கடத்தல் மன்னன் பாப்லோ எஸ்கோபார் வைத்திருந்தவை. அவரது மரணத்துக்குப் பிறகு இந்த ஹிப்போக்கள் காட்டுக்குள் விடப்பட்ட நிலையில் தற்போது எண்ணிக்கை பெருகி, உள்ளூர் மக்களை பாதித்து வருகின்றன.

இதனால் கொலம்பிய அரசு உள்ளூர் மக்களையும், சுற்றுசூழ்நிலையை பாதுகாக்க சுமார் 80 ஹிப்போக்களை கொல்லும் திட்டத்தை தயாரித்துள்ளது. இந்த முடிவு உலக அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பலர் இத்திட்டத்தை மறு ஆய்வு செய்யவும், நீர்யானைகளை கொல்வதை கைவிடவும் கேரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்தச் சூழலில் ஆனந்த் அம்பானி தலையிட்டு கொலம்பிய சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி பிரிவு அமைச்சர் இரீன் வேலெஸ் டோரஸுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஹிப்போக்களை கொல்லும் திட்டத்தை நிறுத்தி வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். மாறாக, அனைத்து ஹிப்போக்களையும் குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள தனது வன்தாரா (Vantara) வனவிலங்கு மீட்பு மற்றும் பாதுகாப்பு மையத்துக்கு அனுப்ப முழு பொறுப்பையும் ஏற்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
வன்தாரா உலகின் மிகப் பெரிய வனவிலங்கு மீட்பு மையங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த மையம் ஹிப்போக்களை அனுப்புவதற்கான அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளதாக ஆனந்த் அம்பானி தெரிவித்துள்ளார். அறிவியல் அடிப்படையிலான திட்டமிடல், கால்நடை மருத்துவ கண்காணிப்பு, பாதுகாப்பான போக்குவரத்து மற்றும் நீண்டகால பராமரிப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளையும் வந்தாரா ஏற்கும். கொலம்பிய அரசின் அனுமதியுடன், சர்வதேச தரநிலைகளின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ஆனந்த் அம்பானி உத்தரவாதம் கொடுத்துள்ளார்.
தற்போது முடிவு கொலம்பிய அரசின் கையில் உள்ளது. ஆனந்த் அம்பானியின் இத்திட்டத்தை ஏற்றுக்கொண்டால், இது உலக அளவில் வனவிலங்கு மேலாண்மைக்கு ஒரு புதிய முன்னுதாரணமாக அமையும். இருப்பினும், போக்குவரத்து, சுற்றுச்சூழல் மற்றும் அரசு சார்ந்த சிக்கல்கள் காரணமாக முடிவு எடுப்பதில் கவனமான ஆய்வு தேவைப்படும்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications