"ஆபாச வீடியோ"வில் திடீர்னு தோன்றிய மனைவி.. ஐயோ, அதென்ன "மச்சம்".. உறைந்து போன கணவர்.. செம ட்விஸ்ட்
ஆபாச வீடியோவில் இருப்பது மனைவியா என்று அதிர்ந்துவிட்டார் இளைஞர்
மும்பை: ஆபாச விடியோவில் உள்ளது தன்னுடைய மனைவியா? என்று அதிர்ந்து போன கணவர் போலீசுக்கு சென்ற சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது..
சில மாதங்களுக்கு முன்பு பெங்களூருவில் ஒரு சம்பவம் நடந்தது.. காதர்பாஷா என்பவர் முபீனா என்ற மனைவியுடன் வசித்து வந்தார். இந்த தம்பதிக்கு கல்யாணமாகி 15 வருடங்கள் ஆகின்றன. 5 குழந்தைகள் இருக்கிறார்கள்.
காதர் பாஷாவுக்கு செல்போனில் ஆபாச படங்கள் பார்ப்பது வழக்கமாக இருந்திருக்கிறது.. சவாரி இல்லாதபோதெல்லாம் ஆபாச வீடியோக்களை பார்த்து வந்துள்ளார்..

அச்சு அசலாய்
அப்படி ஒருநாள் ஆபாச வீடியோ பார்த்து கொண்டிருந்தபோது, அதில் இருந்த பெண், அச்சு அசல் தன்னுடைய மனைவியை போலவே இருந்துள்ளதை கண்டு அதிர்ந்து போயுள்ளார்.. இதனால் உடனடியாக வீட்டுக்கு வந்த காதர்பாஷா, மனைவியிடம் அந்த வீடியோவை காட்டி, இதில் இருப்பது நீயா? என்று கேட்டு தகராறு செய்துள்ளார்... சரமாரியாக அடித்து தாக்கினார்.. ஒருகட்டத்தில் கோபம் அதிகமாகி, கத்தியை எடுத்து வந்து மனைவியை குத்தி கொன்றுவிட்டார்.. 5 குழந்தைகள் முன்பேயே இந்த பயங்கரம் நடந்தது.. ஆனால், அந்த ஆபாச வீடியோவில் இருந்தது காதர் பாஷாவின் மனைவியே கிடையாது.!!!

வெப்சைட்கள்
நேற்றுகூட ஒரு சம்பவம் நடந்தது.. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் கார் பகுதியை சேர்ந்தவர் அந்த இளைஞர்.. 31 வயதாகிறது.. இவர் ஒருநாள், மசாஜ் சேவைகள் குறித்து செல்போனில் பார்த்து கொண்டிருந்தார்... மசாஜ் சேவைகள் எப்படி இருக்கின்றன என்று அந்த வெப்சைட்களை ஜாலியாக பார்த்து கொண்டிருந்தார்... அப்போது மசாஜ் செய்யும் பெண்களின் போட்டோக்கள், ஒரு வெப்சைட்டில் இருந்தன... உடனே அந்த போட்டோக்களை ஒவ்வொன்றாக பார்த்து கொண்டு வந்தபோது, திடீரென அதில் தன்னுடைய மனைவி போட்டோ இருப்பதை பார்த்து அதிர்ந்து போனார்..

மசாஜ் பார்லர்
மனைவி மட்டுமல்ல, தன்னுடைய தங்கையின் போட்டோவும் அதில் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த இளைஞர், உடனடியாக அந்த வெப்சைட் நிறுவனத்தை இளைஞர் தொடர்பு கொண்டு, தனக்கு மசாஜ் செய்ய வேண்டும் என்று சொன்னார்.. எதிர்முனையில் பேசிய பெண்ணும், கார் நகரில் உள்ள ஹோட்டலில் வந்து தன்னை சந்திக்குமாறு சொன்னார்.. அந்த ஹோட்டலுக்கு போலீசுடன் சென்ற இளைஞர், வெப்சைட்டில் இருந்த சகோதரி, மனைவியின் போட்டோக்கள் குறித்து கேட்டார்.. ஆனால், அந்த பெண் நைசாக நழுவ பார்த்தார்.. உடனே போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர்.

ரேஷ்மா
அந்த வெப்சைட்டின் பெயர் எஸ்கார்ட்.. இந்த பெண்ணின் பெயர் ரேஷ்மா.. ஃபேஸ்புக், ட்விட்டர்களில் யாராவது அழகான பெண்கள் போட்டோக்கள் இருந்தால், இந்த வெப்சைட்டில் அப்லோடு செய்துவிடுவாராம் ரேஷ்மா.. இளைஞரின் சகோதரியும், மனைவியும், அவர்களது ஃபேஸ்புக், ட்விட்டர்களில், தங்கள் போட்டோக்களை வைத்திருந்திருக்கிறார்கள்.. அவைகளை எடுத்துதான், ரேஷ்மா இந்த வேலையை செய்துள்ளார்.. கடைசியில் அவரை போலீசார் கைது செய்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள். இன்னொரு சம்பவமும் பெங்களூருவில் நடந்துள்ளது.

ரேஷ்மாவா
சொந்த பேஸ்புக் அக்கவுண்ட்டில் அழகான பெண்களின் போட்டோக்களை எடுத்து, எஸ்கார்ட் வெப்சைட்களில் பதிவேற்றி உள்ளனர்.. அதை பார்த்துதான், இளைஞர் அதிர்ச்சி அடைந்து எங்களிடம் போலீசில் புகார் தந்தார்.. குற்றம்சாட்டப்பட்ட அந்த பெண்ணின் பெயர் ரேஷ்மா யாதவ்.. அவரை கைது செய்துள்ளோம்.. சோஷியல் மீடியாவில் உள்ள அழகான பெண்களின் போட்டோக்களை தேடிப்பிடித்து, எஸ்கார்ட் வலைத்தளங்களில் அப்லோடு செய்பவர் இந்த ரேஷ்மா.

கர்ப்பவதி
இளம் தம்பதி அவர்கள்.. 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.. தம்பதிக்கு ஒரு குழந்தையும் உள்ளது. அந்த இளைஞர் தனியார் ஆன்-லைன் வர்த்த நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.. மனைவி 2வது முறையாக கர்ப்பமாக இருக்கிறார்.. இளைஞருக்கு ஆபாசபடம் பார்க்கும் பழக்கம் இருப்பதாக தெரிகிறது.. அப்படித்தான், கடந்த மாதம் இணையத்தில் ஒரு ஆபாசபடம் பார்த்துள்ளார்.. அந்த படத்தில் இடம் பெற்றிருந்த பெண்ணின் உடலில் இருந்த மச்சங்கள், அவருடைய மனைவியின் உடலில் உள்ள மச்சங்கள் போல் ஒரே மாதிரி இருந்துள்ளன.. அதை பார்த்து அதிர்ந்து போன இளைஞர், மனைவியிடமே அதை பற்றி கேட்டார்.

ஆபாச படங்கள்
ஆபாச படத்தில் இருப்பது நீயா? என்று கேட்கவும் அதற்கு மனைவி மறுத்தார்... தான் எந்த ஆபாசபடங்களிலும் நடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.. ஆனாலும், இளைஞருக்கு கோபமும், சந்தேகம் அதிகமாகி தகராறு செய்துள்ளார்.. அப்போதும் ஆத்திரம் தீராமல், எச்ஏஎல் போலீசில் சென்று மனைவி மீது புகார் செய்தார். போலீசாருக்கு என்ன பிரச்சனை என்பது புரிந்துவிட்டது.. அதனால், இளைஞருக்கு ஆலோசனை வழங்க வேண்டி பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் வனிதா சகாயவாணி ஆலோசனை மையத்துக்கு அவரை அனுப்பி வைத்தனர்.

மச்சம்
இளைஞருக்கு, அந்த அமைப்பினர் ஆலோசனையும் வழங்கினர். ஆனால், அங்கே சென்றும்கூட, இளைஞருக்கு மனைவி மீதான சந்தேகம் தீரவில்லை.. இதனால், மனநல டாக்டரை பார்க்கும்படி இளைஞருக்கு ஆலோசனை மையத்தினர் அட்வைஸ் தந்தார்கள்.. ஆனால், இதற்கு இளைஞர் மறுப்பு தெரிவித்துள்ளார்... நடப்பதை எல்லாம் பார்த்து வெறுத்துபோன அந்த பெண், கணவனுடன் சேர்ந்து வாழ பிடிக்காமல் ஆந்திராவில் உள்ள தன்னுடைய அம்மா வீட்டுக்கே சென்றுவிட்டார்.. போலீசாருக்கோ இந்த பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்ற குழப்பம் ஏற்பட்டது.. இதுகுறித்து வனிதா சகாயவாணி அமைப்பின் ஆலோசகரே செய்தியாளர்களிடம் சொன்னதாவது:

மச்சங்கள்
"இளைஞர் எங்களிடம் புகார் தந்தார்.. சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் அந்த ஆபாச வீடியோ ஆய்வு செய்யப்பட்டது. அந்த வீடியோவில் இருப்பது, இவர் மனைவி இல்லை என்பது உறுதியானது... ஆனாலும் நாங்கள் எவ்வளவோ சொல்லியும் அதை ஏற்க மறுக்கிறார்.. வீடியோவில் தோன்றிய பெண்ணின் உடலில் இருந்த மச்சங்களால் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இளைஞருக்கு அதிகமாக ஆபாச வீடியோ பார்க்கும் பழக்கம் உள்ளது.. ஒவ்வொரு ஆபாச வீடியோவில் தோன்றும் பெண்களையும் தன்னுடைய மனைவியுடன் ஒப்பிட்டு பார்ப்பதால் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது. இதனால், நிமான்ஸ் ஆஸ்பத்திரிக்கு சென்று மனநல டாக்டரை பார்க்க அவருக்கு ஆலோசனை சொல்லி உள்ளோம்" என்றார்..

மச்சம்
ஆனால், எச்.ஏ.எல். போலீசார், வீடியோவில் உள்ளது மனைவி இல்லை என்பதை இளைஞருக்கு எடுத்து சொல்லியும் அதை அவர் ஏற்க மறுத்துள்ளார்.. அதேபோல, கவுன்சிலிங்கிலும் முழுமையான ஒத்துழைப்பை இளைஞர் தரவில்லையாம்.. வனிதா சகாயவாணி ஆலோசனை மையத்தினர் நீண்ட நேரம் அவரிடம் இதுகுறித்து விளக்கியும், அவருடைய கவனம் முழுவதும், அந்த ஆபாச படம் மீதே இருந்துள்ளது.. அதனால்தான், மனநல மருத்துவரிடம் செல்லும்படி சொல்லி உள்ளனர்.. இப்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், மனைவி கண்ணீர் வடித்து வருகிறாராம்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications