நவி மும்பை செல்ல ஜஸ்ட் 20 நிமிஷம் போதும்.. சிட்டாட்டம் பறக்கலாமே.. அசத்தும் அடல் சேது பாலம்
சென்னை: நாட்டின் மிக நீளமான அடல் சேது பாலம் திறக்கப்பட்டதால் மும்பையிலிருந்து நவி மும்பைக்கு வெறும் 20 நிமிடங்களில் செல்லலாம்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த 2016ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த பாலம் ரூ 17,840 கோடி செலவில் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் நீளம் 21.8 கிலோமீட்டர் ஆகும்.

இந்த பாலத்தின் 16.5 கிலோ மீட்டர் தூரம் கடலில்தான் இருக்கிறது. இதன் மூலம் இந்தியாவின் மிக நீண்ட பாலம், மிக நீண்ட கடல் பாலம் என்ற பெருமைகளை பெற்றுள்ளது. அடல் பிகாரி வாஜ்பாய் சேவாரி- நவ சேவா அடல் சேது என பெயரிடப்பட்டது.
இந்த நீண்ட பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த பாலத்தின் மூலம் மும்பையிலிருந்து நவி மும்பைக்கு செல்லும் நேரம் 2 மணி நேரத்திலிருந்து வெறும் 20 நிமிடங்களாக குறைகிறது. மும்பை சர்வதேச விமான நிலையம் மற்றும் நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தை இது இணைக்கும்.
Delighted to inaugurate Atal Setu, a significant step forward in enhancing the ‘Ease of Living’ for our citizens. This bridge promises to reduce travel time and boost connectivity, making daily commutes smoother. pic.twitter.com/B77PSiGhMK
— Narendra Modi (@narendramodi) January 12, 2024
இந்த பாலம் 6 வழிச்சாலையாக அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டுள்ள அந்த பாலத்தின் வீடியோவில் பிரம்மாண்டம் தெரிகிறது. இந்த பாலத்தில் இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், டிராக்டர்கள் உள்ளிட்ட மெதுவாக செல்லும் வாகனங்களுக்கு அனுமதி கிடையாது. அதிகபட்ச வேக வரம்பு மணிக்கு 100 கி.மீ. ஆகும்.

கார்கள் ஒரு முறை பயணிக்க ரூ 250 கட்டணமாக செலுத்த வேண்டும். ரிட்டர்ன் பயணித்திற்கும் சேர்த்து ரூ 500க்கு பதில் ரூ 375 கட்டணம் செலுத்த வேண்டும். மினி பஸ்களாக இருந்தால் ரூ 400, டிரெய்லர் லாரிகளுக்கு ரூ 1500 வசூல் செய்யப்படுகிறது. இந்த பாலத்தில் வேகத்தடையும் உள்ளது. இதனால் விபத்துகள் நடைபெறாமல் பாதுகாக்கும்.
Atal Setu 🌉, uniting Mumbai and Navi Mumbai, a visionary feat crafted in 7 years. Engineering brilliance under PM Shri @narendramodi Ji's leadership. #AtalSetu #अटल_सेतु pic.twitter.com/usMG2pR3Sy
— Nitin Gadkari (@nitin_gadkari) January 12, 2024
அது போல் பாலத்தில் ஏறும் போதும் சரி இறங்கும் போதும் சரி மணிக்கு 40 கி.மீ. வேகத்தில்தான் பயணிக்க வேண்டும். மும்பையிலிருந்து நவி மும்பைக்கு செல்லும் பயண நேரத்தை குறைக்கவே இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளதால் இங்கு வேகம் குறைவாக செல்லும் பைக்குகள், ஆட்டோக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications