அடேங்கப்பா.. மக்களே நல்லா பாருங்க, இதான் லிஸ்ட்.. அக்டோபர் மாதம் 21 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை
மும்பை: அடேங்கப்பா.. அக்டோபர் மாதம் மொத்தம் 21 நாட்கள் வங்கிகள் செயல்படாது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. சில மாநிலங்களில் விடுமுறை எண்ணிக்கையில் சற்று மாற்றங்கள் இருக்கலாம். ஆனால் நாடு முழுமைக்குமான கணக்கு இதுதான்.
எனவே வங்கி பணிகள், பண பரிவர்த்தனை உள்ளிட்டவற்றில் ஆன்லைன் தவிர்த்த பிற பணிகளில் இடையூறுகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.
அக்டோபர் மாதத்திற்கான விடுமுறை நாட்களின் பட்டியலை, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதை கூட்டி கழித்து பார்த்தால் 21 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது எனத் தெரிகிறது.
இந்த விடுமுறை பட்டியலில் மாநில வாரியான பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் உள்ளன. எனவே வாடிக்கையாளர்கள் இடையூறுகளை தவிர்க்கும் பொருட்டு முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ள ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

விடுமுறை நாட்கள் விவரம்
அக்டோபர் 1 - வங்கிக் கணக்குகளின் அரை ஆண்டு நிறைவு
அக்டோபர் 2 - காந்தி ஜெயந்தி
அக்டோபர் 3 - ஞாயிறு
அக்டோபர் 6 - மஹாளய அமாவாசை. கர்நாடகா, மேற்கு வங்கம், திரிபுராவில் விடுமுறை
அக்டோபர் 7 - லைனிங்தோ சனமஹி. திரிபுரா, மேற்கு வங்கம், மணிப்பூர் பகுதியில் விடுமுறை
அக்டோபர் 9 - இரண்டாவது சனிக்கிழமை
அக்டோபர் 10 - ஞாயிறு

விஜயதசமி
அக்டோபர் 12 - மஹா சப்தமி திரிபுரா, கர்நாடகா, மேற்கு வங்கத்தில் விடுமுறை
அக்டோபர் 13 - மஹா அஷ்டமி திரிபுரா, ஒடிசா, சிக்கிம், அசாம், மணிப்பூர், மேற்கு வங்கம், பீஹார், ஜார்க்கண்ட்.
அக்டோபர் 14 - துர்கா பூஜை/தசரா (மகா நவமி)/ஆயுத பூஜை - தமிழகம், கர்நாடகா, திரிபுரா, கேரளா, அசாம், உத்தர பிரதேசம், பீகார், ஜார்கண்ட், இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் விடுமுறை
அக்டோபர் 15 - துர்கா பூஜை/தசரா/விஜய தசமி இமாச்சல பிரதேசம் மற்றும் மணிப்பூர் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை

மிலாடி நபி
அக்டோபர் 16 - துர்கா பூஜை (சிக்கிம்-கேங்டாக் பகுதியில் விடுமுறை)
அக்டோபர் 17 - ஞாயிறு (வார விடுமுறை)
அக்டோபர் 18 - கதி பிஹு. அசாமில் விடுமுறை
அக்டோபர் 19 - மிலாடி நபி
அக்டோபர் 20 - மகரிஷி வால்மீகி பிறந்த நாள். திரிபுரா, கர்நாடகா, ஹரியானா, மேற்கு வங்கம், இமாச்சல பிரதேசம் பகுதிகளில் விடுமுறை.
அக்டோபர் 22- மிலாடிநபியை தொடர்ந்து வரும் வெள்ளி, ஜம்மு - காஷ்மீரில் விடுமுறை

வார விடுமுறைகள்
அக்டோபர் 23 - 4 வது சனிக்கிழமை
அக்டோபர் 24 - ஞாயிறு (வாரவிடுமுறை)
அக்டோபர் 26 -அக்செஷன் டே, ஜம்மு - காஷ்மீர்
அக்டோபர் 31 - ஞாயிறு (வார விடுமுறை) இவ்வாறு 21 நாட்கள் விடுமுறை நாட்களாக வருகின்றன. ஒரு விஷயத்தை கவனித்துப் பார்த்தால், அக்டோபர் மாதம் தமிழகத்தில் வார விடுமுறை நாட்கள் தவிர்த்து 4 நாட்கள் மட்டுமே பண்டிகை கால விடுமுறை நாட்களாகும். ஆனால் மொத்தமாக பார்த்தால் 21 நாட்கள் விடுமுறை நாட்களாக உள்ளன. பிற மாநிலங்கள் இதில் முக்கிய பங்காற்றுகின்றன. எனவே தமிழகத்தில் வங்கிப் பணிகளில் பெரிய பாதிப்பு இருக்காது.












Click it and Unblock the Notifications