நோட் பண்ணிக்கோங்க மக்களே.. வங்கிகளுக்கு அடுத்த மாதம் மட்டும் இத்தனை நாட்கள் விடுமுறையா?

Subscribe to Oneindia Tamil

மும்பை: நாட்டில் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளுக்கு வரும் செப்டம்பர் மாதத்தில் மட்டும் மொத்தம் 16 நாட்கள் விடுமுறை வருகிறது. ஞாயிற்றுக்கிழமை மற்றும் 2-வது சனிக்கிழமைகளையும் சேர்த்து செப்டம்பர் மாதம் 16 நாட்கள் விடுமுறை வருகிறது.

இந்தியாவில் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை விடப்படுகின்றன. அதுபோக மாதத்தின் 2-வது சனிக்கிழமை மற்றும் 4வது சனிக்கிழமைகளில் விடுமுறை விடப்படுகிறது. இதை மாற்றி நான்கு சனிக்கிழமைகளிலும் விடுமுறை விடப்பட வேண்டும் என்பது வங்கி ஊழியர்களின் கோரிக்கையாக உள்ளது.

banks in India will remain closed for sixteen days in September 2023

இது குறித்து பரிசீலனை நடப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்த வழக்கமான விடுமுறையை தவிர்த்து தேசிய விடுமுறை மற்றும் அந்தந்த மாநிலங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகளுக்கு ஏற்ப வங்கிகளுக்கு விடுமுறை விடப்படுகின்றன. இந்த நிலையில் வரும் செப்டம்பர் மாதத்தில் மட்டும் வங்கிகளுக்கு 16 நாட்கள் விடுமுறை வருகிறது. அதன் விவரம் வருமாறு:-

செப்டம்பர் 3 - ஞாயிற்றுக்கிழமை
செப்டம்பர் 6 - ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி
செப்டம்பர் 7 - கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அகமதாபாத், சண்டிகர், டேராடூன், காங்டாக், தெலுங்கானா, ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், லக்னோ, ராய்ப்பூர், ராஞ்சி, ஷில்லாங், சிம்லா மற்றும் ஸ்ரீநகரில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. பிற பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு இது பொருந்தாது.

செப்டம்பர் 9 - இரண்டாவது சனிக்கிழமை
செப்டம்பர் 10- ஞாயிற்றுக்கிழமை
செப்டம்பர் 17-ஞாயிற்றுக்கிழமை
செப்டம்பர் 18- விநாயகர் சதுர்த்தி
செப்டம்பர் 19, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அகமதாபாத் உள்ளிட்ட வடமாநிலங்களில் விடுமுறை அளிக்கப்படுகிறது.

செப்டம்பர் 20- விநாயகர் சதுர்த்தி கொச்சி மற்றும் புவனேஸ்வரில் விடுமுறை
செப்டம்பர் 22- ஸ்ரீ நாராயண குரு சமாதி தினம் கொச்சி, பனாஜி, திருவனந்தபுரத்தில் விடுமுறை
செப்டம்பர் 23- நான்காவது சனிக்கிழமை என நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களையும் சேர்த்து மொத்தம் 16 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது.

தற்போது பண பரிவர்த்தனைக்காக வங்கிகளுக்கு செல்ல வேண்டியது இல்லை. பெரும்பாலும் யுபிஐ, நெட் பேங்கிங் மூலமாகவும் பணபரிமாற்றம் செய்து கொள்ளலாம். ரொக்கமாக பணத்தையும் ஏடிஎம்மில் எடுத்துக்கொள்ளலாம். இதனால், வாடிக்கையாளர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றாலும் வங்கிகளில் செக் பரிவர்த்தனை உள்பட சிலவற்றிற்கு வங்கிகளுக்கே செல்ல வேண்டியிருப்பதால் வாடிக்கையாளர்களுக்கு சற்று சிரமம் ஏற்படும். எனவே இதற்கேற்றபடி திட்டமிட்டு கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+