அப்பாவை கட்டையால் அடித்து.. கத்தியால் குத்தி கொன்ற மகள்.. 3 நாள் சடலத்துடன் இருந்த கொடுமை!
வளர்ப்பு தந்தையை கொன்ற மகளிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்
மும்பை: ஓவராக செக்ஸ் டார்ச்சர் தந்த வளர்த்த அப்பாவை கட்டையால் அடித்து.. கத்தியால் குத்தி.. 3 நாள் சடலத்துடன் ஒரே ரூமில் இருந்துள்ளார் மகள்.. இதன்பிறகுதான் துண்டு துண்டாக சடலத்தை வெட்டி சூட்கேஸில் அடைத்து பீச்சில் கொண்டு போய் வீசியுள்ளார்.. 16 வயது காதலனுடன் கைது செய்யப்பட்ட இந்த பெண்ணிடம் போலீசாரின் விசாரணையில் மீண்டும் ஒரு திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
மும்பை மாகிம் பீச்சில் போன 4-ம் தேதி, வழக்கம்போல் சிலர் வாக்கிங் சென்று கொண்டிருந்தனர். அப்போது தண்ணீரில் சூட்கேஸ் ஒன்று மிதந்து வந்தது... அதில் ரத்தம் வழிய கால்கள் மட்டும் வெளியே நீட்டிக்கொண்டிருந்ததை பார்த்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் சொன்னார்கள்.
விரைந்து வந்த போலீசார், சூட்கேஸை கைப்பற்றி அதை திறந்து பார்த்தனர். அப்போது அதில் கையோடு இணைந்த தோள்பட்டை பகுதி, ஒரு கால், என ஆணின் மர்ம உறுப்புகள் ஒருபிளாஸ்டிக் பைக்குள் போடப்பட்டு கிடந்தன. உடல் பாகங்களுக்கு மேல் துணிகள் போர்த்தப்பட்டு இருந்தன.

16 வயது காதலன்
அதில் ஒரு ஸ்வெட்டரில் "ஆல்மோஸ் மென்ஸ் வியர்" என்ற டெய்லர் கடையின் பெயரை வைத்து விசாரணை நடந்தது.. கொலை செய்யப்பட்டவர் பெயர் பெனட் என்பதும் வயது 59 என்பதும் தெரியவந்தது. இதுதொடர்பாக வளர்ப்பு மகள் ஆரத்யாவையும், அவரது 16 வயது காதலனையும் போலீசார் கைது செய்தனர்.

பென்னட்
"நாங்கள் காதலிப்பதை அப்பா எதிர்த்தார்.. எச்சரித்தார்.. எனக்கு பாலியல் தொல்லையும் தந்தார்.. அதனால்தான் காதலனுடன் சேர்ந்து போன 26-ம் தேதி அவரை கம்பால் தாக்கியும்.. கத்தியால் குத்தியும் கொலை செய்தோம்" என்று ஆரத்யா சொல்கிறார். உடலை எங்கே போய் போடுவது என்று தெரியாமல், தந்தையின் சடலத்துடன் 3 நாட்கள் ஒரே வீட்டில் இருந்துள்ளார் ஆரத்யா.

சடலம்
இதன்பிறகு 3 நாள் கழித்து சடலத்தை துண்டு துண்டாக வெட்டி ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு... 3 சூட்கேஸ்களில் அடைத்து, மாகிம் பீச்சில் வீசியிருக்கிறார். அது மட்டுமல்ல.. சூட்கேஸில் வைத்து சடலத்தை பீச்சில் போட்டுவிட்டு வீட்டுக்கு வந்த மகள், அப்பாவுக்கு ஒரு மன்னிப்பு கடிதமும் எழுதியுள்ளார். "என்னை மன்னிச்சிடுங்க அப்பா.. நான் ரொம்ப கெட்டவள்.. எனக்கு வாழ்க்கை தந்தும், உங்களை கொலைட்டேன்" என்று எழுதி வைத்திருந்ததை போலீசார் கைப்பற்றினர். இப்போது அந்த 16 வயது காதலனை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளர்.

மைனர் பெண்
இளம்பெண்ணிடம் விசாரணையை மீண்டும் ஆரம்பித்தனர். அப்போதுதான், பெண்ணின் பிறப்பு சான்றிதழ், ஆதார் அட்டையை போலீசார் பரிசோதித்தனர்.. அதன்படி, இந்த பெண்ணுக்கு வெறும் பதினேழரை வயசுதான் ஆகிறதாம்.. 19 வயது என்ற தகவல் பொய் என்பதை கண்டுபிடித்துள்ளனர்.. இந்த தகவல், வழக்கில் மிகப்பெரிய திருப்பத்தை தந்துள்ளது.. அதனால், இந்த பெண்ணின் வயதை கண்டுபிடிக்கும் வேறு சில மருத்துவ ரீதியான பரிசோதனைகளை செய்வதற்கு போலீசார் முடிவு செய்துள்ளனர். அதனால், அதுவரையில் இந்த பெண்ணையும் சிறுவர் சீர்திருத்த காவலில் வைக்க கோர்ட் பரிசீலித்துள்ளது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications