Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சரத்பவாருக்கு பேரிடி.. தேசியவாத காங்கிரஸ் அஜித்பவாருக்கே சொந்தம்.. தேர்தல் ஆணையம் அதிரடி

Subscribe to Oneindia Tamil

மும்பை: அஜித்பவாரை தேசியவாத காங்கிரஸ் தலைவராக அங்கீகரித்தது தேர்தல் ஆணையம். மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சின்னமான கடிகாரத்தை அஜித்பவாருக்கே வழங்கி தேர்தல் ஆணையம் அறிவித்தது.

நாட்டின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர் சரத் பவார். காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலம் இருந்த சரத் பவார் பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். மகாராஷ்டிராவில் முக்கிய கட்சியாக இருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குள் கடந்த ஆண்டு உள்கட்சி மோதல் வெடித்தது.

Big set back For Sharad Pawar Ajit Pawars Faction Is Real NCP says Election Commission

சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார், கட்சியில் குழப்பதை ஏற்படுத்தி உடைத்தார். மேலும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிர அரசில் இணைந்து துணை முதல்வரானார். இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு சரத்பவாரும் அஜித் பவாரும் உரிமை கொண்டாடி வந்தனர். இருதரப்பிலும் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் கட்சி மற்றும் சின்னம் ஆகியவற்றை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்தனர்.

அஜித்பவாருக்கு தான் சொந்தம்: இந்த மனுக்களை விசாரித்த தேர்தல் ஆணையம், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சின்னத்தை அஜித்பவாருக்கு ஒதுக்கியுள்ளது. அஜித்பவாருக்கே அதிக ஆதரவு நிர்வாகிகள் இருப்பதால் அவருக்கே கடிகாரம் சின்னம் ஒதுக்கப்படுவதாகவும் சரத்பவார் தனக்கு விருப்பமான பெயரை தேர்வு செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

அஜித் பவார் கருத்து: தேர்தல் ஆணைய அறிவிப்பு குறித்து அஜித்பவார் கூறுகையில், "இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். எங்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு உள்ளது. அதற்காக தேர்தல் ஆணையத்துக்கு நன்றி தெரிவிக்கிறோம்" என்றார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் என மகாவிகாஸ் அகாடி கூட்டணி பலமானதாக இருந்தது. சிவசேனா கட்சி 2 ஆக உடைந்த நிலையில், அந்த கட்சியின் பெயரும், சின்னமும் பாஜக கூட்டணியில் உள்ள ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு சென்றது. இந்தநிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் பாஜக கூட்டணிக்கு சென்ற அஜித்பவார் வசம் சென்றுள்ளது.

கடைசி நம்பிக்கை உச்ச நீதிமன்றம்தான்: லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் சரத்பவார் தனி சின்னத்தில் போட்டியிடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இது சரத்பவார் மட்டுமின்றி இந்தியா கூட்டணிக்கும் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனிடையே, தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்வோம் என்று சரத்பவார் தரப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சரத் பவார் அணியை சேர்ந்த சந்திரகாந்த் பாட்டீல் கூறுகையில், "உச்ச நீதிமன்றம் தான் எங்கள் கடைசி நம்பிக்கையாக உள்ளது. தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்கும் என நாங்கள் நம்புகிறோம். சரத் பவாருக்கு ஆதரவாக உறுதியாக இருப்போம்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+