Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரமாண்டம்.. அம்பானியின் மகன் நிச்சயதார்த்தம்.. மோதிரம் வழங்கிய செல்ல பிராணி ‛நாய்’.. க்யூட் வீடியோ

Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்தியாவின் முன்னணி தொழிலதிபரும், கோடீஸ்வரருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமண நிச்சயத்தார்த்த விழா மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நிச்சயத்தார்த்த மோதிரத்தை அம்பானி வீட்டில் உள்ள செல்ல பிராணியான நாய் கொண்டு வந்து கொடுத்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதுதொடர்பான வீடியோ இணையதளத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்தியாவின் உள்ள முக்கிய தொழில்அதிபர்களில் முக்கியமானவர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் அதிபரான இவரது மனைவி பெயர் நீடா அம்பானி. இந்த தம்பதிக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

இந்நிலையில் தான் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி மற்றும் மகள் இஷா அம்பானி ஆகியோருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்டது. இளைய மகன் ஆனந்த் அம்பானி மட்டும் திருமணத்துக்காக காத்திருந்தார்.

இளைய மகன் நிச்சயத்தார்த்தம்

இளைய மகன் நிச்சயத்தார்த்தம்

இந்நிலையில் தான் ஆனந்த் அம்பானிக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. என்கோர் ஹெல்த்கேர் சிஇஓவாக உள்ள விரேன் மெர்ச்சன்ட் மற்றும் ஷைலா மெர்ச்சன்ட் தம்பதியின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுடன், ஆனந்த் அம்பானிக்கு திருமணம் செய்து வைக்க இருவீட்டாரும் முடிவு செய்தனர். அதன்படி நேற்று மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் பிரமாண்ட பங்களாவான ஆண்ட்லியாவில் திருமண நிச்சயதார்த்த விழா கோலாகலமாக நடைபெற்றது.

மோதிரம் மாற்றிய ஜோடி

மோதிரம் மாற்றிய ஜோடி

இந்த வேளையில் ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோர் மோதிரம் மாற்றி கொண்டு குடும்பத்தினரிடம் ஆசீர்வாதம் பெற்றனர். பொதுவாக நிச்சயத்தார்த்த மோதிரத்தை மணமக்களின் பெற்றோர் அல்லது இருவரின் குடும்பத்தில் மூத்தவராக இருக்கும் நபர்கள் எடுத்து வழங்குவார்கள். ஆனால் இந்த நிச்சயத்தார்த்த விழா சற்று வித்தியாசமாக அமைந்தது.

மோதிரம் கொண்டு வந்த செல்லபிராணி

மோதிரம் கொண்டு வந்த செல்லபிராணி

அதாவது நிச்சயத்தார்த்த மோதிரத்தை அம்பானியின் வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்டு வரும் நாய் எடுத்து வந்து ஆனந்த் அம்பானியிடம் வழங்கியது. இதற்காக நாய்க்கு சிறப்பு ஆடை வழங்கப்பட்டு இருந்ததோடு அதன் மீது நிச்சயத்தார்த்த மோதிரம் பாக்சில் வைக்கப்பட்டு இருந்தது. அதனை எடுத்து திருமண ஜோடிகள் மாற்றி நிச்சயம் செய்து கொண்டனர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி உள்ளது. இதனை பலரும் ேஷர் செய்து வருகின்றனர். இந்த விழாவில் அம்பானியின் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக மேடையில் நடனமாடினர். இந்த வீடியோவும் தற்போது வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

நெருக்கமானவர்கள் மட்டுமே..

நெருக்கமானவர்கள் மட்டுமே..

இந்த நிச்சயத்தார்த்த விழாவில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். விழாவில் திருமணத்துக்கான லக்கின பத்திரிகை வாசிக்கப்பட்டது. திருமணம் தேதி தொடர்பான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஆனந்த் அம்பானி ரிலையன்ஸ் குழுமத்தின் எனர்ஜி சார்ந்த வணிகங்களை தலைமை தாங்கி நடத்தி வருகிறார். ராதிகா மெர்சன்ட் என்கோர் ஹெல்த்கேர் குழுமத்தின் இயக்குனராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+