ஆகஸ்ட் 10-ல் ஏக்நாத் ஷிண்டே பதவி அம்போ- அஜித்பவார் புது சிஎம்: கொளுத்தி போட்ட காங்கிரஸ் சவான்!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆகஸ்ட் 10-ந் தேதி தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் பதவி பறிபோகும்; புதிய முதல்வராக தேசியவாத காங்கிரஸின் அதிருப்தி கோஷ்டி தலைவர் அஜித் பவார் பதவியேற்பார் என முன்னாள் முதல்வர் பிரித்விராஜ் சவான் கூறிய கருத்து பெரும் விவாதங்களை கிளப்பிவிட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் அண்மையில் புதிய திருப்பமாக சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) இரண்டாக பிளவுபடுத்தப்பட்டது. தேசியவாத காங்கிரஸில் அஜித்பவார் தலைமையிலான கோஷ்டி, ஆளும் பாஜக அரசில் இணைந்தது. அஜித்பவார் துணை முதல்வரானார்; இதர 8 என்சிபி எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர். அப்போதே முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கோஷ்டி இதை எதிர்த்தது. பின்னர் இலாகா ஒதுக்கீடு விவகாரத்திலும் ஏக்நாத் ஷிண்டே பிரிவு கடுமையான அதிருப்தியை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான பிரித்விராஜ் சவான், ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது ஆத்ரவு எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பாக சபாநாயகர் விரைவில் முடிவு எடுக்க இருக்கிறார். உச்சநீதிமன்றம் இது தொடர்பாக விதித்த 90 நாள் கெடு முடிவடைய உள்ளது. ஆகஸ்ட் 10-ந் தேதி வாக்கில் அனேகமாக ஏக்நாத் ஷிண்டே, அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவர்; அதனால் ஏக்நாத் ஷிண்டே தமது பதவியை பறிகொடுப்பார். அப்போது அஜித்பவார் புதிய முதல்வராவார் என தெரிவித்திருந்தார். பிரித்விராஜ் சவான் இப்படி திடவட்டமாக கூறியது மகாராஷ்டிரா அரசியலில் விவாதமாகி உள்ளது.

பிரித்விராஜ் சவானின் கருத்தை நிராகரித்த துணை முதல்வர் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ், முதல்வர் பதவி குறித்து அஜித்பவாருக்கு எந்த உறுதிமொழியும் தரப்படவில்லை. அஜித்பவாரும் அது தொடர்பாக எந்த நெருக்கடியும் தரவில்லை. காங்கிரஸ் கட்சி வேண்டும் என்றே வதந்திகளை பரப்பிவிடுகிறது. மக்களைக் குழப்புகிற வேலையை காங்கிரஸ் கட்சியினர் மேற்கொள்ளாமல் இருக்க வேண்டும். அப்படி ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் அப்போது எம்.எல்.ஏக்கள் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுப்பார்கள் என்றார்.
பத்த வச்சிட்டியே பரட்டை!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications