நாகாலாந்தில் 39- 49 இடங்களில் பாஜக வெல்லும் .. காங்கிரஸ் 0..Times Now-ETG Research எக்ஸிட் போல்
நாகாலாந்த் மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என Times Now-ETG Research நிறுவனம் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.
மும்பை: நாகலாந்து மாநிலத்தில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் 39 முதல் 49 இடங்களில் வென்று பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என Times Now-ETG Research நிறுவனம் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலமான, நாகாலாந்து மாநிலத்தில் சட்டசபைகளின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் ஓய்ந்த நிலையில் திங்கட்கிழமை காலையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
நாகலாந்தில் இன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. மாநிலத்தில் அமைதியான வாக்குப்பதிவை உறுதி செய்வதற்காக ஏராளமான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு இருந்தனர்.
அங்குள்ள அகுலுடோ தொகுதியில் பாஜக வேட்பாளர் கஜேடோ கினிமி போட்டியின்றி தேர்வானார். வாக்குப்பதிவு தொடங்கியது முதலே பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.

நாகாலாந்தில் 82 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த இரண்டு மாநில தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 4.30 மணியளவில் நிறைவுபெற்றது.
இதனிடையே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன. நாகலாந்து மாநிலத்தில் பாஜக மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என Times Now-ETG Research எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்துள்ளன.
நாகலாந்து மாநிலத்தில் பாஜக 39 முதல் 49 இடங்களில் வென்று ஆட்சியை தக்க வைக்கும் என Times Now-ETG Research எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்துள்ளன.

என்பிஎப் கட்சி 4 முதல் 8 இடங்களில் வெல்லும் எனவும் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என தெரிவித்துள்ளது. நாகாலாந்தில் இன்றைய தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் மார்ச் 2ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications