தேசியவாத காங்கிரஸ் அமைச்சர் மீது போலீஸ் குற்றச்சாட்டு: விசாரணை நடத்த சரத்பவார் அறிவுறுத்தல்!
மும்பை: மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரசை சேர்ந்த உள்துறை அமைச்சர் அணில் தேஷ்முக் மீது காவல்துறை அதிகாரி பரம்வீர் சிங்குற்றச்சாட்டுகளை வாரி இறைத்தார்.
பரம் பிர் சிங் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து மும்பை முன்னாள் உயர் போலீஸ்காரர், ஜூலியோ ரிபேரோ தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று சரத்பவார் கூறினார்.

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா-காங்கிரஸ்- தேசிய வாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் மும்பை போலீஸ் கமிஷனர் பதவியில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி பரம்வீர் சிங் ,தேசியவாத காங்கிரசை சேர்ந்த உள்துறை அமைச்சர் அணில் தேஷ்முக் மீது குற்றச்சாட்டுகளை வாரி இறைத்தார்.
மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு பரம்வீர் சிங் எழுதிய கடிதத்தில், 'மகாராஷ்டிரத்தில் காவல்துறை அதிகாரிகள் மாதந்தோறும் ரூ.100 கோடி வசூலிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அணில் தேஷ்முக் உத்தவிட்டார்'' என்று குற்றம் சுமத்தினர் பரம்வீர் சிங். இந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அணில் தேஷ்முக்கை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியான பாஜக வலியுறுத்தி உள்ளது.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அனில் தேஷ்முக் மீதான இந்த குற்றச்சாட்டுகளின் நேரம் குறித்து ஆராய வேண்டும். பரம் பிர் சிங் இடமாற்றம் செய்யப்பட்ட பின்னர் இப்போது ஏன்? இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் கூறியுள்ளார்.
100 கோடி வசூலிக்குமாறு உள்துறை அமைச்சகம் போலீசாருக்கு அறிவுறுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. உண்மையான பணம் பரிவர்த்தனை குறித்து எந்த தகவலும் இல்லை. எந்தவொரு பணமும் உள்துறை அமைச்சர் அல்லது அவரது ஊழியர்களுக்கு மாற்றப்படுவதில்லை. . பரம் பிர் சிங் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து மும்பை முன்னாள் உயர் போலீஸ்காரர், ஜூலியோ ரிபேரோ தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று சரத்பவார் கூறினார்.












Click it and Unblock the Notifications