முதியவர்களை அப்படியே விட்டுவிட முடியாது.. மாற்று வழிகளை யோசியுங்கள்... மும்பை ஹைகோர்ட் காட்டம்

Subscribe to Oneindia Tamil

மும்பை: வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி செலுத்தும் முறையை அனுமதிக்காதது ஏன் எனக் கேள்வி எழுப்பிய மும்பை உயர் நீதிமன்றம், முதியவர்களுக்கு இதுபோல தடுப்பூசி செலுத்துவது குறித்து பரிசீலனை செய்யும்படி வலியுறுத்தியது.

இந்தியாவில் தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறுகிறது. அனைவரும் கொரோனா தடுப்பூசி மையங்களுக்குச் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற நடைமுறை உள்ளது.

இந்நிலையில், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் படுத்த படுக்கையாக உள்ளவர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போட அனுமதிக்கக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Cant Leave The Old To Die says Bombay High Court On Home Vaccination

இதற்கு பதிலளித்த மத்திய அரசு, தடுப்பூசி அதிகளவில் வீணாக வாய்ப்பு உள்ளது, தடுப்பூசி மாசுடைய உள்ள வாய்ப்பு, தடுப்பூசி செலுத்திய பிறகு நோயாளிகளைக் கவனிக்க முடியாமல் போகும் ஆகிய காரணங்களாலே வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி போடுவது சாத்தியமில்லை என்று தெரிவித்தது.

இந்தக் காரணங்களைக் கேட்டு அதிருப்தியடைந்த நீதிபதிகள், இதற்கு ஒரு தீர்வு இருக்க வேண்டும். வயதானவர்களை அரசு அப்படியே விட்டுவிட முடியாது. இது இரண்டு மோசமான விஷயங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது போன்றது. ஆம்புலன்சில் ஐ.சி.யு வசதி உள்ளது, எனவே, அதில் நிச்சயமாக ஒரு தடுப்பூசிகளை வைக்க குளிர்சாதனப் பெட்டியை வைக்க முடியும்.

குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் இருவரும் சுயமாகச் செயல்படக்கூடிய நிலையில் இல்லாதவர்கள். எனவே நாம் தான் அவர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும். வயதானவர்களை அப்படியே உயிரிழக்க விட்டுவிட முடியாது. மத்திய அரசு மீண்டும் வல்லுநர்களிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.

இஸ்ரேல் போன்ற நாடுகளில் பெரும்பாலானோருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது. அமெரிக்காவிலும் காரில் இருந்தபடியே அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. நாமும் நம்மை முன்னேற்றிக் கொள்ள வேண்டும் என்றனர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+