Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருமணம் செய்வதாக கூறி பெண் டாக்டருடன் உல்லாசம்? ஐ.பி.எஸ். அதிகாரி மீது பாய்ந்த வழக்கு

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் காவல் நிலையத்தில் 28 வயதாகும் பெண் டாக்டர் ஒருவர், ஐபிஎஸ் அதிகாரி தர்ஷன் துகாட் மீது புகார் அளித்துள்ளார். தன்னை திருமணம் செய்வதாக கூறி அத்துமீறி ஏமாற்றியதாக கூறியுள்ளார். இந்த புகாரின் பேரில் ஐ.பி.எஸ். அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. திருமணம் செய்வதாக கூறி தர்ஷன் துகாட், பெண் டாக்டரை பல இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசம் அனுபவித்து ஏமாற்றியதாக குற்றம்சாட்டப்பட்டு இருக்கிறது.

காதலிக்கும் போது ஆணும் பெண்ணும் சேர்ந்து சுற்றுகிறார்கள்.ஒரு கட்டத்தில் செட்டாகாது, சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று யாராவது ஒருவர் காதலை முறித்துக் கொள்கிறார்கள். இதை தாங்க முடியாத பெண்கள் புகார் அளிக்கிறார்கள். அதேபோல் பெரிய அதிகாரியாக ஆகும் முன்போ அல்லது நல்ல பணக்கார சம்பந்தம் கிடைக்கும் வரையிலோ பழகும் சிலர், சாதியை காரணம் காட்டியும், அந்தஸ்து, பணத்தை காட்டி கைவிடுவதும் நடக்கிறது.

Case filed against IPS officer who had fun with female doctor in Maharashtra claiming to be engaged

அதேநேரம் சிலர் சேர்ந்து சுற்றும் வரை சுற்றிவிட்டு திருமணம் கைகூட வில்லை என்ற உடன், பலாத்கார வழக்கு தொடர்வதும் நடக்கிறது. உண்மையில் ஏமாறுபவர்களும் இருக்கிறார்கள்.. பொய்யாக புகார் அளித்து பணம் பறிக்கும் நோக்கில் ஏமாற்றுபவர்களும் இருக்கிறார்கள். சிக்கலான இந்த விவகாரம் அடிக்கடி பல்வேறு பகுதிகளில் நடக்கிறது. மகாராஷ்டிராவில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் இமாம் வாடா காவல் நிலையத்தில் 28 வயது பெண் டாக்டர் ஒருவர் யவத்மாலை சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி தர்ஷன் துகாட் (வயது 30) என்பவர் மீது புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார். அந்த புகாரில், திருமணம் செய்வதாக கூறி ஐ.பி.எஸ் அதிகாரி தர்ஷன் துகாட் தன்னிடம் அடிக்கடி அத்துமீறியதுடன் தற்போது ஏமாற்றிவிட்டதாக கூறியுள்ளார்.

இளம் பெண் டாக்டருக்கு, கடந்த 2022-ம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் தர்ஷன் துகாட் அறிமுகம் ஆனதாக கூறப்படுகிறது. அப்போது பெண் டாக்டர் எம்.பி.பி.எஸ் படித்து வந்தார். தர்ஷன் துகாட் யு.பி.எஸ்.இ. தேர்வுக்கு தயாராகி இருந்துள்ளார். இதனிடையே முதலில் 2 பேரும் சமூகவலைதளம் மூலமாக பழகினார்களாம். அதன்பிறகு செல்போன் எண்களை பரிமாறி உறவை வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது.. இதற்கிடையே 2 பேருக்கும் இடையே நெருக்கம் அதிகமானது. இந்த நிலையில் திருமணம் செய்வதாக கூறி தர்ஷன் துகாட், பெண் டாக்டரை பல இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசம் அனுபவித்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.

இதற்கிடையே தர்ஷன் துகாட் யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்று ஐ.பி.எஸ். அதிகாரி ஆனார். அதன்பிறகு அவர் பெண் டாக்டருடன் பேசுவதை தவிர்த்துவிட்டதாக கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் அவர் பெண் டாக்டரை சாதியை காரணமாக கூறி திருமணம் செய்ய முடியாது என மறுத்துவிட்டாராம். ஐ.பி.எஸ். அதிகாரியின் குடும்பத்தினரும் பெண் டாக்டருக்கு சரியான பதிலை கூறவில்லை என கூறப்படுகிறது.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த பெண் டாக்டர், ஐ.பி.எஸ். அதிகாரி தர்ஷன் துகாட் மீது போலீசில் புகார் அளித்தார். பெண் டாக்டர் அளித்த புகாரின்பேரில் போலீசார் ஐ.பி.எஸ். அதிகாரி மீது பலாத்கார வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+