பிரதமரே 14 மணி நேரம் உழைக்கிறாரு.. வாரத்திற்கு 5 நாள் எல்லாம் சரிபடாது.. சொன்னது யாருனு பாருங்க
மும்பை: பிரதமர் நரேந்திர மோடி தினமும் 14 மணி நேரம் உழைக்கிறார், இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் உழைத்தால் என்ன தவறு என இன்போசிஸ் நாராயண மூர்த்திக்கு ஆதரவாக மற்றொரு நிறுவனத்தின் சிஇஓ கருத்து பதிவிட்டுள்ளார்.

தொழிலாளர்கள் நலச்சட்டத்தின் படி ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வேலை, வார ஓய்வு விதிக்கப்பட வேண்டும். இந்த வார ஓய்வானது தொழில்களுக்கேற்ப மாறுபடும். சாப்ட்வேர் கம்பெனிகள், மனித வள மேம்பாட்டு துறை உள்ளிட்டோருக்கு வாரம் இரு நாட்களும் மற்றவர்களுக்கு வாரம் ஒரு நாளும் ஓய்வு நாள் இருக்கும்.
எப்படிப்பார்த்தாலும் வாரத்திற்கு 5 நாட்கள் வேலை இருப்போர் 40 மணி நேரமும் 6 நாட்கள் வேலை இருப்போர் 48 மணி நேரமும் வேலை பார்ப்பதுண்டு. ஆனால் இன்போசிஸ் நிறுவனத்தின் சிஇஓ நாராயண மூர்த்தி ஒரு புத்தம் புதிய கருத்தை தெரிவித்துள்ளார்.
அதாவது உற்பத்தித் திறன் குறைந்த நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. உலக அரங்கில் போட்டியிட வேண்டுமானால் அதற்கேற்ப இந்திய இளைஞர்கள் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும். வாரத்திற்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும். இரண்டாம் உலகப்போருக்கு பிறகு ஜப்பான், ஜெர்மனி ஆகியவற்றில் பணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார்.
இவரை போலவே ஓலா நிறுவனத்தின் சிஇஓவும் 2020 ஆம் ஆண்டு அதிக நேரம் பணியாற்ற வேண்டும் என்ற கருத்தை தெரிவித்திருந்தார். அந்த வகையில் தற்போது நாராயண மூர்த்தியின் கருத்துக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் நாராயணமூர்த்தி ஆதரவாக ஜெ.எஸ்.டபிள்யூ நிறுவனத் தலைவர் சஜ்ஜன் ஜிந்தால் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: நாராயண மூர்த்தியின் கருத்துகளுக்கு முழு மனதுடன் ஆதரவு தெரிவிக்கிறேன். இதை மன அழுத்தமாக பார்க்காமல் அதை அர்ப்பணிப்பாக கருத வேண்டும். 2047 ஆம் ஆண்டுக்குள் நாம் இந்தியாவை பொருளாதாரத்தில் வல்லமைமிக்க சக்தியாக மாற்ற வேண்டும். இதன் மூலம் நாம் அனைவரும் பெருமை கொள்ளலாம்.

நம்மை போல் வளர்ந்து வரும் நாட்டில் வாரத்திற்கு 5 நாட்கள் மட்டும் வேலை என்ற கலாசாரம் உகந்தது இல்லை. நமது பிரதமர் நரேந்திர மோடி தினமும் 12 முதல் 14 மணி நேரம் என வாரத்தின் 7 நாட்களும் உழைக்கிறார், நான் தினமும் 10 முதல் 12 மணி நேரம் உழைக்கிறேன். நாம் செய்யும் வேலை மற்றும் தேசத்தை வளர்ப்பதில் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதற்கு நெட்டிசன்கள் பதிலடி கொடுத்துள்ளனர். ஒருவர் பொது போக்குவரத்தை பயன்படுத்தி, வாரத்திற்கு 70 மணி நேரம் உங்களால் வேலை பார்க்க முடியுமா? தனிப்பட்ட வாழ்க்கையை எப்போது நடத்துவது? அதனை அப்படியே விட்டுவிட வேண்டுமா, பிரதமரின் பெயரை பயன்படுத்தி உங்கள் கருத்துகளை திணிக்காதீர்கள் என தெரிவித்துள்ளார்.
-
"கொரோனா டைம் போல.." ஒரு நொடி யோசித்து பிரதமர் சொன்ன வார்த்தை.. எல்பிஜி சிக்கல் அவ்வளவு மோசமா? -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது












Click it and Unblock the Notifications