மும்பை ஏர்போர்ட்டில் பதறிய பயணிகள்.. ரன்வேயில் ஒரே நேரத்தில் 2 விமானங்கள்.. என்னாச்சு? பரவும் வீடியோ
மும்பை: மும்பை விமான நிலையத்தில் ஒரே ஓடு பாதையில் 2 விமானங்கள் இயக்கப்பட்ட சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை.
மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி விமான நிலையம் நாட்டிலேயே 2-வது பரபரப்பான விமான நிலையம் ஆகும். நாட்டின் நிதி தலைநகரம் என்று அழைக்கப்படும் மும்பையில் விமான நிலையத்தில் எப்போதும் பயணிகள் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும்.

இந்த விமான நிலையத்தில் இருந்து வெளிநாடு, உள்நாடு என தினமும் நூற்றுக்கணக்கான விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில்தான் மும்பை விமான நிலையத்தில் ஒரே ஓடு பாதையில் இரண்டு விமானங்கள் இயக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒரு விமானம் டேக் ஆப் ஆகவும் மற்றொரு விமானம் தரையிறங்கியது. சில மீட்டர் தூரத்தில் இரண்டு விமானங்களும் அடுத்தடுத்து சென்றன.
இந்த நிகழ்வை பார்த்த பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். ஒரே நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு விமானங்கள் வந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் இண்டிகோ விமானம் ஒன்று ஓடுபாதையில் தரையிறங்க, அதே ஓடு பாதையில் சிறிது இடைவெளியில் ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டு செல்கிறது.
அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை. ஒரே ஓடுதளத்தில் அடுத்தடுத்து இரண்டு விமானங்கள் இயக்கப்பட்டது குறித்து விசாரணைக்கு விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டு உள்ளது. மேலும் விமான போக்குவரத்து கட்டுபாட்டு பிரிவு கண்காணிப்பு கோபுர பணியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து விமான போக்குவரத்து இயக்குனரக அதிகாரி கூறியதாவது: இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே விமான போக்குவரத்து கட்டுபாட்டு பிரிவு பணியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்றார்.
இண்டிகோ நிறுவனம் இச்சம்பவம் தொடர்பாக கூறுகையில், கடந்த 8-ந் தேதி இந்தூரில் இருந்து வந்த இண்டிகோ விமானம் விமான போக்குவரத்து கட்டுபாட்டு அறையின் அனுமதி பெற்ற பிறகு தான் மும்பை ஏர்போர்ட்டில் லேண்டிங் ஆனது. ஏடிசி அதிகாரியின் அனுமதியை பெற்றே விமானத்தை விமானி தரையிறக்கினார். பயணிகளின் பாதுகாப்பிற்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்" என்றார். .
ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், "AI657 என்ற ஏர் இந்தியா விமானம் மும்பையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு புறப்பட்டு சென்றது. விமான போக்குவரத்து கட்டுப்பாடு அறையின் கிடைத்த பிறகே விமானம் டேக் ஆப் ஆனது. எனினும், இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications