Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உடை மாற்றும் அறையில் கேமரா.. ஆசைக்கு இணங்க மறுத்ததால் ஆத்திரம்.. மாடல் அழகியின் கொலையில் பரபர தகவல்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    பிரபல மாடலை கொன்று புதைத்த நபரை 2 மணி நேரத்தில் பிடித்த போலீஸ்- வீடியோ

    மும்பை: ஆசைக்கு இணங்க மறுத்ததால் மாடல் அழகி மான்ஷியை கொன்றேன் என கல்லூரி மாணவர் மீண்டும் பரபரப்பு வாக்குமூலத்தை அளித்துள்ளார்.

    ராஜஸ்தானைச் சேர்ந்தவர் மான்ஷி தீக்சித் (20). இவர் மாடல் அழகியாக இருந்தார். இதற்காக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் மும்பை வந்த இவர் சினிமாவில் சிறு வேடங்களிலும் நடித்துள்ளார்.

    இவர் கொலை செய்யப்பட்டு மலாடு என்ற பகுதியில் மாங்க்ரோவ் காடுகளில் ஒரு சூட்கேஸில் முகம் உள்பட உடல் முழுவதும் காயங்களுடன் மான்ஷியின் உடல் கைப்பற்றப்பட்டது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் மாடல் அழகியை கல்லூரி மாணவர் முசாமில் சையத் (19) கொலை செய்தது தெரியவந்தது.

    [மாடல் அழகி கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. முரண்பாடான வாக்குமூலத்தை அளித்த கல்லூரி மாணவர் ]

    ஸ்டூல்

    ஸ்டூல்

    அந்தேரியில் இருந்த சையத்தை போலீஸார் கைது செய்தனர். மான்ஷி கொலைக்கான காரணத்தை அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது அவர் கூறுகையில் மான்ஷியை எனது வீட்டுக்கு வரவழைத்தேன். முதலில் செக்ஸ் உறவுக்கு மறுத்தார். அப்போது ஏற்பட்ட தகராறில் அவரது தலையில் ஸ்டூலால் தாக்கினேன்.

    [மிரட்டி மிரட்டியே.. படு பாதக கள்ளக்காதலன்.. 16 வயதிலேயே பாழான பிஞ்சு ]

    செக்ஸ் உறவு

    செக்ஸ் உறவு

    பின்னர் அவர் மயங்கியதால் பயந்தேன். அவர் மீது தண்ணீர் தெளித்தேன். அவர் காயங்களுடன் எழுந்து நடக்க ஆரம்பித்தார். பின்னர் எனது தாய் வந்துவிட்டால் பிரச்சினையாகிவிடும் என்பதால் உடனே அவரது கழுத்தை கயிற்றால் இறுக்கி, கொலை செய்து கால் டாக்ஸியில் சடலத்தை கொண்டு சென்று வீசினேன் என்று வாக்குமூலம் அளித்தார்.

    பேஸ்புக்

    பேஸ்புக்

    பின்னர் அது கொலைக்கான காரணம் இல்லை என தனது வாக்குமூலத்தை மறுத்துள்ளார். இந்நிலையில் போலீஸார் மீண்டும் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் மீண்டும் ஒரு வாக்குமூலத்தை அளித்தார். அதில் நான் புகைப்பட நிபுணர் என கூறி மாடல் அழகியிடம் பேஸ்புக்கில் அறிமுகம் ஆனேன்.

    மான்ஷி

    மான்ஷி

    நல்ல புகைப்படங்கள் இருந்தால் பெரிய அளவில் சினிமா வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் அதற்காக மாடல் அழகிக்கு இலவசமாக போட்டோக்கள் எடுத்து தருவதாகவும் கூறினேன். இதை நம்பிய மான்ஷி சம்பவத்தினத்தன்று என் வீட்டுக்கு வந்தார்.

    உறவுக்கு அழைத்தேன்

    உறவுக்கு அழைத்தேன்

    அப்போது அவரை ஒரு அறைக்கு அனுப்பி உடை மாற்றிக் கொள்ளுமாறு கூறினேன். அறையில் நான் வைத்திருந்த ரகசிய கேமராவை கண்டுபிடித்துவிட்டார். இதையடுத்து என்னிடம் சண்டையிட்டார். அப்போது நான் புகைப்பட கலைஞன் இல்லை. என்னுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள் என்று கூறி அவருக்கு தொல்லை கொடுத்தேன்.

    கொன்றேன்

    கொன்றேன்

    இதற்கு மறுப்பு தெரிவித்த அவர் என் மீது போலீஸில் புகார் அளிப்பதாக கூறினார். இதனால் பயந்த நான் அவர் தலையில் ஸ்டூல் போட்டு கொலை செய்தேன் என்று சையத் வாக்குமூலம் அளித்துள்ளார். கைதான கல்லூரி மாணவர் சையத்தின் போலீஸ் காவல் இன்றுடன் நிறைவடைகிறது. அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+