பெரிய ரிஸ்க் எடுக்கும் காங்கிரஸ்.. 25 ஆண்டுகளில் இப்படி நடந்ததே இல்லை! அதிகபட்ச இடங்களில் போட்டி!
மும்பை: மகாராஷ்டிராவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் கட்சி மொத்தம் 529 இடங்களில் தனித்துப் போட்டியிடுகிறது. மகாராஷ்டிராவில் இவ்வளவு ரிஸ்க் எடுத்து காங்கிரஸ் தனித்துப் போட்டியிட என்ன காரணம்.. இதன் பின்னணி குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.!
மகாராஷ்டிரத் தலைநகர் மும்பையில் அடுத்த மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. பல வடகிழக்கு மாநிலங்களின் பட்ஜெட்டை விடவும் கூட மும்பை மாநகராட்சியின் பட்ஜெட் பெரியது. இதனால் மும்பை உள்ளாட்சித் தேர்தல்கள் எப்போதுமே கவனம் பெறும். அங்கு 2017ல் கடைசியாகத் தேர்தல் நடந்த நிலையில், இப்போது 10 ஆண்டுகளுக்கு பிறகே அங்குத் தேர்தல் நடைபெறுகிறது.

மும்பை தேர்தல்
இதில் என்டிஏ கூட்டணியில் பாஜக மற்றும் ஷிண்டே சிவசேனா கூட்டணி சீட் பகிர்வை இறுதி செய்துவிட்டது. அங்கு மொத்தம் 227 சீட்கள் உள்ள நிலையில், அதிகபட்சமாக பாஜக 137 இடங்களில் போட்டியிடுகின்றன. ஷிண்டே சிவசேனா 90 இடங்களில் போட்டியிடுகின்றன. என்டிஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள இதர கட்சிகளுக்கு வாய்ப்பு இல்லை. இதனால் அஜித் பவாரின் என்சிபி தனித்தே போட்டியிடுகிறது. அவர்கள் சுமார் 60 இடங்களுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளன.
528 சீட்
இந்தியா கூட்டணியில் இதை விடப் பெரிய குழப்பம் இருக்கிறது. வருகின்ற ஜனவரி 15ம் தேதி நடக்கும் இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுகின்றன. மும்பை, தானே, புனே, சத்ரபதி சம்பாஜி நகர் மற்றும் பிம்ப்ரி-சின்ச்வத் மாநகராட்சிகளில் மொத்தம் 528 இடங்களில் காங்கிரஸ் போட்டியிட உள்ளது. 1999ஆம் ஆண்டுக்குப் பிறகு, இத்தனை இடங்களில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவது இதுவே முதல்முறையாகும்
உத்தவ் தாக்கரேயின் சிவசேனா அல்லது சரத் பவாரின் என்சிபி ஆகிய கூட்டணி இல்லாமல் காங்கிரஸ் தனித்தே இத்தேர்தலைச் சந்திக்கிறது. மேலும், நாக்பூர், அகோலா, அமராவதி, சந்திராபூர் ஆகிய இடங்களிலும் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும். இத்துடன், லத்தூரில் உள்ள 70 இடங்களில் 65 இடங்களிலும், நாந்தேடில் உள்ள 81 இடங்களில் 60 இடங்களிலும் காங்கிரஸ் களமிறங்குகிறது. மீதமுள்ள இடங்கள் பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பஹுஜன் அகாடிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
மும்பை மாநகராட்சி
நாட்டின் பணக்கார மாநகராட்சியான ரூ. 74,000 கோடி மதிப்புடைய மும்பையில் மட்டும் காங்கிரஸ் 167 இடங்களில் போட்டியிடுகிறது. தானே நகரில் 101 இடங்களிலும், புனே மற்றும் சத்ரபதி சம்பாஜி நகரில் தலா 100 இடங்களிலும் அக்கட்சி வேட்பாளர்களை நிறுத்துகிறது. பிம்ப்ரி-சின்ச்வத் மாநகராட்சியில் காங்கிரஸ் 60 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இந்தத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் தனித்துப் போட்டியிடும் முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
மும்பை என்பது எப்போதும் சிவசேனாவின் கோட்டையாகவே இருந்துள்ளது. சிவசேனாவை ஷிண்டே உடைக்கும் வரை மும்பை மாநகராட்சி சிவசேனா கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இப்போது கட்சி கட்டுப்பாடு ஷிண்டே வசம் இருக்கும் நிலையில், தனது அடையாளத்தை மீட்கும் கடைசி வாய்ப்பாக உத்தவ் தாக்கரே தரப்பு இந்தத் தேர்தலைப் பார்க்கிறது. இதன் காரணமாகவே உத்தவ் தாக்கரே- ராஜ் தாக்கரே சகோதரர்கள் இணைந்துள்ளனர்.
தனித்து போட்டி ஏன்!
இருப்பினும், ராஜ் தாக்கரே இந்தக் கூட்டணிக்குள் வந்தது காங்கிரஸுக்கு உடன்பாடு இல்லை. மராத்தி இன அடையாளம் மற்றும் மத அரசியலை முன்னெடுக்கும் ராஜ் தாக்கரே உடன் கூட்டணியில் இணைந்து பயணிக்க முடியாது என்று காங்கிரஸ் கூறிவிட்டது. காங்கிரஸைக் கூட்டணியில் தொடர வைக்க ராகுல் காந்தி வரை பேச்சுவார்த்தை நடந்த போதிலும், காங்கிரஸ் ஒப்புக்கொள்ளவில்லை. ராஜ் தாக்கரே இருந்தால் மராத்தி அல்லாதோர் மற்றும் சிறுபான்மையினர் வாக்கு கிடைக்காது என்பதாலேயே காங்கிரஸ் இந்த முடிவை எடுத்தது.
மறுபுறம் சரத் பவாருக்கும் அவரது அண்ணன் மகன் அஜித் பவாருக்கும் இடையே மோதல் இருந்தாலும் அவர்கள் புனே மற்றும் பிம்ப்ரி- சின்ச்வாட் தொகுதியில் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளனர். இதனால் சரத் பவார் உடனும் கூட்டணி அமைக்கக் காங்கிரஸ் விரும்பவில்லை. இதன் காரணமாகவே மாநிலம் முழுக்க அங்கு 538 இடங்களில் தனித்துப் போட்டியிடுகிறது காங்கிரஸ்! இதில் கிடைக்கும் வெற்றி காங்கிரஸுக்கு புத்துணர்ச்சி அளிப்பதாக இருக்க வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியினரின் விருப்பமாக உள்ளது.
-
தமிழக நிர்வாகிகளுக்கு அனுமதியில்லை.. காங்கிரஸ் வேட்பாளர் யார் யார்? மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவு -
TN Election history: முதலும் கடைசியும்.. 2 தேர்தல்கள்.. மருத்துவமனையில் படுத்தபடி ஜெயித்த எம்.ஜி.ஆர் -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
ராகுல் களத்தில் இறங்கியவுடன் காங்கிரஸுக்கு நல்ல செய்தி! கேரளாவில் மாபெரும் வெற்றி உறுதி! புதிய சர்வே -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
பேப்பரை அடித்து திருத்திய ராகுல்.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களை.. இன்னும் தேர்வு செய்யாதது ஏன்? -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்? -
ஒற்றை இலக்க பாஜக.. கேரளாவில் அடித்து தூக்கும் காங்.,. அப்போ கம்யூனிஸ்ட்? புதிய கருத்து கணிப்பு -
அடம்பிடித்து ஈரோடு கிழக்கை கேட்டு வாங்கிய காங்கிரஸ்.. இப்போ எங்க போச்சு! நெட்டிசன்கள் சரமாரி கேள்வி! -
அடிதடி..கோஷ்டி பூசல்! பழைய ஃபார்முக்கு திரும்பிய காங்கிரஸ்! செல்வப் பெருந்தகைக்கு எதிராக திரண்ட டீம் -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின்












Click it and Unblock the Notifications