ராகுலுக்கு பறந்த சம்மன்.. சாவர்க்கரின் பேரனால் வந்த புதிய பிரச்சனை.. புனே நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மும்பை: காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி சாவர்க்கரை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இதனை எதிர்த்து சாவர்க்கரின் பேரன் தொடர்ந்த வழக்கில் புனே நீதிமன்றம் ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பி உள்ளதோடு, அக்டோபர் 23ம் தேதிக்குள் நேரில் ஆஜராகும்படி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இது ராகுல் காந்திக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
பாஜகவினர் கொண்டாடி வரும் சாவர்க்கரை காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

அதேபோல் காங்கிரஸ் கட்சியின் லோக்சபா எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தியும் சாவர்க்கரை விமர்சனம் செய்துள்ளார். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கு செல்லும்போது சாவர்க்கர் பற்றி ராகுல் காந்தி விமர்சனம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
இந்நிலையில் தான் சாவர்க்கரின் பேரன் சத்யாகி சாவர்க்கர், ராகுல் காந்திக்கு எதிராக புனே மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அதில், ‛‛ ராகுல் காந்தியால் தான் சாவர்க்கர் உலகிற்கு அறியப்பட்டு வருகிறார். அதேவேளையில் தொடர்ந்து பல ஆண்டுகளாக அவதூறாக பேசி வருகிறார். ராகுல் காந்தி கடந்த ஆண்டு மார்ச் மாதம் லண்டன் சென்றார். மார்ச் மாதம் 5ம் தேதி ராகுல் காந்தி என் தாத்தா சாவர்க்கர் பற்றி அவதூறான கருத்துகளை பேசினார்.
அப்போது அவர் இந்துத்துவா சித்தாந்தங்கள் பற்றி தரக்குறைவாக பேசினார். பிரிட்டனின் ஓவர்சீஸ் காங்கிரஸ் கூட்டத்தில் சாவர்க்கர் பற்றி அவர் பேசியது உண்மைக்குபுறம்பாக இருந்தது. அதேபோல் அவரது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது. ராகுல் காந்தி வேண்டும் என்றே தவறான நோக்கத்தில் பேசுகிறார். இது எங்களின் குடும்பத்தை காயப்படுத்தி உள்ளது. மனவேதனையை தருகிறது. இந்த விஷயத்தில் ராகுல் காந்தியை சட்டப்படி விசாரிக்க வேண்டும். அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். இழப்பீடு பெற்று தர வேண்டும்’’ என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை விசாரித்த புனே நீதிமன்றம் ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டது. அதுமட்டுமின்றி அக்டோபர் 23ம் தேதிக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் அதிரடியாக தெரிவித்துள்ளது. இதனால் சாவர்க்கரின் பேரனால் ராகுல் காந்திக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
துணை முதல்வரானதும் உதயநிதியின் முதல் கையெழுத்து எது தெரியுமா? முதல் பந்திலேயே சிக்ஸர்.. என்ன அது?
அதேவேளையில் சாவர்க்கர் விஷயத்தில் ராகுல் காந்திக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்புவது இது முதல் முறையல்ல. கடந்த 2022 நவம்பர் மாதம் ஹின்கோலியில் சாவர்க்கர் பற்றி அவதூறான கருத்தை பேசியதாக தனியார் தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் இதற்கு முன்பு நாசிக் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பியது.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
கேப்பில் கால் பதிக்கும் பாஜக! கேரளாவில் இடதுசாரிகள் vs காங்கிரஸ் கடும் போட்டி! புதிய சர்வே முடிவுகள் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன்












Click it and Unblock the Notifications