Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

28 வருடமாக கட்டி காத்த சாம்ராஜ்ஜியம்.. ஆர்எஸ்எஸ் - பாஜக கோட்டையில் வென்ற காங்.. உறைந்து போன ஷிண்டே

இந்த தேர்தல் தோல்வி அங்கு ஷிண்டே - பாஜக தரப்பிற்கு எச்சரிக்கை மணியாக பார்க்கப்படுகிறது.

Subscribe to Oneindia Tamil

மும்பை: புனேவில் கஸ்பா பெத் தொகுதியில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தல் அம்மாநில அரசியலை உலுக்கி உள்ளது.

மகாராஷ்டிராவில் கடந்த சட்டசபை தேர்தலுக்கு பின் முதல்வர் பதவியை கொடுக்கவில்லை என்று கூறி உத்தவ் தாக்கரே பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்தார். பல கால நண்பர்கள் பிரிந்து எதிரியானார்கள்.

கொரோனாவை சிறப்பாக எதிர்கொண்டு உத்தவ் தாக்கரே நல்ல பெயர் எடுத்திருந்த நிலையில் அவருக்கு நெருக்கமான ஏக்நாத் ஷிண்டேவே ஆட்சிக்கு எதிராக திரும்பி, பெரும்பான்மை எம்எல்ஏக்களுடன் சேர்ந்து ஆட்சியை காலி செய்தார்.

கட்சி

கட்சி

ஆட்சி கவிழ்ந்ததோடு, ஷிண்டே தலைமையில் பாஜகவுடன் கூட்டணி வைத்த ஆபரேஷன் கமலாவை வெற்றிபெற வைத்து அங்கு ஆட்சியை பிடித்தார். அதோடு கட்சியையும் உடைத்தார். இதனால் மகாராஷ்டிராவில் சிவசேனா உத்தவ் தாக்கரே அணி, சிவசேனா ஷிண்டே அணி என்ற இரண்டு அணிகள் உருவாகின. இந்த நிலையில்தான் சிவசேனாவின் கட்சியும், சின்னமும் ஷிண்டே அணிக்கு தேர்தல் ஆணையம் மூலம் ஒதுக்கப்பட்டது. இது , உத்தவ் தாக்கரே தரப்பை பெரிய அளவில் வருத்தத்திற்கும், அதிர்ச்சிக்கும் உள்ளாக்கி உள்ளது. நீங்கள் வேண்டுமானால் இப்போது எம்எல்ஏக்களை, வில் அம்பு சின்னத்தை வைத்து இருக்கலாம்.. ஆனால் அந்த அம்பை உருவாக்கிய.. பல கோடி தொண்டர்களை உருவாக்கிய பால் தாக்கரேவின் புதல்வன் நான்.. அவரின் தொண்டர்கள் என்னிடம் உள்ளார்கள் என்று உத்தவ் தாக்கரேவும் சமீபத்தில் சூளுரைத்து இருந்தார்.

தேர்தல்

தேர்தல்

அதோடு துரோகிகளுக்கு வரக்கூடிய தேர்தல்களில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றும் உத்தவ் தாக்கரே கூறி இருந்தார். அப்படி ஒரு சம்பவம்தான் புனேவில் நடந்து உள்ளது. புனேவில் இருக்கும் கப்ஸா பெத் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் அங்கே உத்தவ் அணி - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ரவிந்தர் வென்றுள்ளார். இந்த வெற்றி என்பது சாதாரணமான வெற்றி கிடையாது. கடந்த 28 வருடங்களாக இந்த இடம் ஆர்எஸ்எஸ் மிக வலிமையாக இருக்க கூடிய இடம். 28 வருடங்களாக தொடர்ந்து பாஜக எம்எல்ஏக்கள் வென்று வந்த இடம் இது. பாஜகவை அசைக்கவே முடியாது என்று பலரும் நினைக்கும் கோட்டை இது.

கோட்டை

கோட்டை

அந்த கோட்டையில்தான் காங்கிரஸ் கூட்டணி துளையை போட்டு உள்ளே சென்று கொடியை நாட்டி உள்ளது. அதுவும் சாதாரண துளை கிடையாது. மொத்தமாக சுவரையே உடைத்து உள்ளது. ஏன் என்றால்.. இங்கே 53.00 சதவிகித வாக்குகளை காங்கிரஸ் கூட்டணி வென்றுள்ளது. இங்கே வலிமையாக இருக்கும் பாஜகவே இவ்வளவு வாக்குகளை பெற்றது இல்லை. காங்கிரஸ் வேட்பாளர் ரவீந்தர் 73194 வாக்குகள் பெற பாஜக வேட்பாளர் ஹேமந்த் 62244 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்து உள்ளார். அங்கே ஆளும் கட்சியாக ஷிண்டேவின் சிவசேனா + பாஜக இணைந்து போட்டியிட்டு பாஜக வேட்பாளர் தோல்வி அடைந்து உள்ளார்.

சிவசேனா

சிவசேனா

கிட்டத்தட்ட சிவசேனா மோதலுக்கு மக்கள் கொடுத்த பாடமாக இந்த தேர்தல் முடிவு பார்க்கப்படுகிறது. இந்த தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த முக்தா திலக் சமீபத்தில் மரணம் அடைந்தார். லோக்மான்ய திலக் என்ற பிரபல அரசியல் தலைவரின் மருமகள் ஆவார் இவர். இவரின் மரணத்திற்கு பின் அவரின் குடும்ப நிர்வாகிக்கு இடம் கொடுக்காததே இந்த தோல்விக்கு காரணம். அதற்கு முன் இந்த தொகுதியில் கிரிஷ் என்பவர் பாஜக சார்பாக 1995, 1999, 2004, 2009 மற்றும் 2014 தேர்தல்களில் வென்றார். தற்போது அவர் எம்பி ஆகிவிட்ட நிலையில் இந்த முறை பாஜக சார்பாக ஹேமந்த் நிற்க வைக்கப்பட்டார். இவர்தான் பாஜகவின் கோட்டையில் தோல்வியை தழுவி உள்ளார். இவரின் தோல்வி அங்கு ஷிண்டே - பாஜக தரப்பிற்கு எச்சரிக்கை மணியாக பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+