மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆதரவு கடிதத்தை சரிபார்க்காமல் ரகசிய பதவிப்பிரமாணம் ஏன்- காங்கிரஸ் தனித்து பேட்டி

Google Oneindia Tamil News

Recommended Video

    In early morning twist | தேவேந்திர பட்னவீஸ் முதல்வரானார் !

    மும்பை: ஆதரவு கடிதத்தை சரிபார்க்காமல் அவசரமாக யாருக்கும் தெரியாமல் ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தது ஏன் என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

    மகாராஷ்டிரா அரசியலில் இன்று காலை நடந்த திடீர் திருப்பத்தை அடுத்து என்சிபி தலைவர் சரத்பவாரும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.

    அப்போது அந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொள்ளவில்லை. இது குறித்து கேள்வி எழுப்பிய போது சரத்பவார் கூறுகையில் காங்கிரஸ் கட்சியினர் இங்கு வருவதாக இருந்தது. ஆனால் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுவதால் அவர்கள் வரவில்லை என்றார்.

    ஜனநாயகத்தின் மீதான சர்ஜிகல் ஸ்டிரைக் இது.. கட்சிகளை உடைக்கிறது பாஜக.. உத்தவ் தாக்கரே பாய்ச்சல் ஜனநாயகத்தின் மீதான சர்ஜிகல் ஸ்டிரைக் இது.. கட்சிகளை உடைக்கிறது பாஜக.. உத்தவ் தாக்கரே பாய்ச்சல்

    கருப்பு நாள்

    கருப்பு நாள்

    ஆனால் மும்பையில் காங்கிரஸ் தலைவர்கள் அகமது படேல், மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் தனியாக பேட்டி அளித்தனர். அப்போது காங்கிரஸின் அகமது படேல் கூறுகையில் மகாராஷ்டிர வரலாற்றில் இது கருப்பு நாள்.

    கூட்டணி

    கூட்டணி

    ஆதரவு கடிதத்தை சரி பார்க்காமல் ஏன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தனர்? பாஜகவின் இந்த செயலை நாங்கள் கண்டிக்கிறோம். எந்த வகையிலும் கூட்டணியை காங்கிரஸ் தாமதப்படுத்தவில்லை.

    தோற்கடிப்போம்

    தோற்கடிப்போம்

    எங்கோ ஏதோ தவறு நடக்கிறது. இதை விட ஒரு கேவலமான செயல் இருக்க முடியாது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 2 பேர் வெளியூர் சென்றுள்ளனர். மற்றவர்கள் எங்களுடன்தான் உள்ளனர். பாஜகவை நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்கடிப்போம். அரசியல் ரீதியாக சட்டரீதியாக போராடுவோம் என்றார்.

    சிவசேனா

    சிவசேனா

    என்சிபி, சிவசேனா தலைவர்களுடன் பேட்டி அளிக்காமல் தனித்து பேட்டி அளிப்பது ஏன் என்ற கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பினர். அப்போது அகமது படேல் கூறுகையில் காங்கிரஸ்- சிவசேனா- என்சிபி ஆகிய 3 கட்சியினரிடையே எந்தவித குழப்பமும் இல்லை என்றார்.

    English summary
    Congress in Mumbai says that How Governor did Oath ceremony with out cross checking letter of support properly.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X