ஒழியாத கொரோனா உலக அளவில் 50,36,22,554 பேர் பாதிப்பு - 45,39,70,330 பேர் மீண்டனர்
உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 50,36,22,554 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 45,39,70,330 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் உலகம் முழுவதும் 62,19,857 பேர் உயிரிழந்துள்ளனர்
மும்பை: உலகம் முழுவதும் கொரோனாவால் 50,36,22,554 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றில் இருந்து உலகம் முழுவதும் 45,39,70,330 பேர் மீண்டுள்ளனர். 62,19,857 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் மருத்துவமனைகளில் 4,34,32,367 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சீனாவின் வூகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கொரோனாவில் இருந்து மீண்டு வரும் நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால் அங்கு லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளில் கொரோனா டெல்டா, டெல்டா ப்ளஸ் அதிக அளவில் மக்களின் உயிரை காவு வாங்கியது. ஓமிக்ரான் வைரஸ் பரவல் வேகம் அதிகமாக இருந்தாலும் அதிக அளவில் உயிர் பலி ஏற்படவில்லை. தற்போது கொரோனா இந்தியாவில் கட்டுப்படுத்தப்பட்டாலும் வெளி நாடுகளில் புதிய வகை கொரோனா பரவி வருகிறது. எக்ஸ் இ வகை புதிய கொரோனா பரவத் தொடங்கியுள்ளது.
உலகம் முழுவதும் ஒரே நாளில் 6,96,858 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் மொத்தம் 50,36,22,554 பேர் உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 7,80,757 பேர் மீண்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து மொத்தம் 45,39,70,330 பேர் குணமடைந்துள்ளனர்.
உலகம் முழுவதும் ஒரே நாளில் 2,238 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் மொத்தம் 62,19,857 பேர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளனர்.
பிரான்ஸ் நாட்டில் 1,25,394 பேர் புதிதாக ஒரே நாளில் கொரேனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜெர்மனியில் 88,188 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்கொரியாவில் ஒரே நாளில் 1,25,808 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜப்பான் நாட்டில் 55,282 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 723 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,21,776 பேராக அதிகரித்துள்ளது. 190 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
ஓமிக்ரான் வைரஸ் மட்டுமே கடைசி கொரோனா இல்லை என்றும் கொரோனாவில் இருந்து தப்பிக்க தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. ஜூன் மாதத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்றும், 4வது அலை உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications