கொரோனாவின் பிடியில் உலக மக்கள்.. 24 மணி நேரத்தில் 3,12,629 பேருக்கு பாதிப்பு
உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 50,50,36,157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 45,54,67,998 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் உலகம் முழுவதும் 62,24,433 பேர் உயிரிழந்துள்ளனர்
மும்பை: உலகம் முழுவதும் கொரோனாவால் 50,50,36,157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றில் இருந்து உலகம் முழுவதும் 45,64,52,848 பேர் மீண்டுள்ளனர். 62,24,433 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் மருத்துவமனைகளில் 4,23,58,876 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சீனாவின் வூகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா உலகம் முழுவதையும் தன் கைப்பிடிக்குள் வைத்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.
கடந்த ஆண்டுகளில் கொரோனா டெல்டா, டெல்டா ப்ளஸ் அதிக அளவில் மக்களின் உயிரை காவு வாங்கியது. ஓமிக்ரான் வைரஸ் பரவல் வேகம் அதிகமாக இருந்தாலும் அதிக அளவில் உயிர் பலி ஏற்படவில்லை. தற்போது கொரோனா இந்தியாவில் கட்டுப்படுத்தப்பட்டாலும் வெளி நாடுகளில் புதிய வகை கொரோனா பரவி வருகிறது.

XE கொரோனா பரவல்
எக்ஸ் இ வகை புதிய கொரோனா பரவத் தொடங்கியுள்ளது.இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கொரோனாவில் இருந்து மீண்டு வரும் நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால் அங்கு லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு சீனாவில் உள்ள ஜிலின் மாகாணத்தில் இரண்டு ஆண்டுகள் இல்லாத அளவுக்கு பல ஆயிரம் பேர் தினந்தோறும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்

உலகம் முழுவதும் கொரோனா தீவிரம்
கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் 3,12,629 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் மொத்தம் 50,50,36,157 பேர் உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 9,35,923 பேர் மீண்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து மொத்தம் 45,64,52,848 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா மரணங்கள்
உலகம் முழுவதும் ஒரே நாளில் 1,238 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் மொத்தம் 62,24,433 பேர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளனர். கொரோனாவில் இருந்து தப்பிக்க ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே என்பதால் உலகின் பல பகுதிகளிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

ஆசியா, ஐரோப்பிய நாடுகளில் கொரோனா
பிரான்ஸ் நாட்டில் 19,810 பேர் புதிதாக ஒரே நாளில் கொரேனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜெர்மனியில் 19,303 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்கொரியாவில் ஒரே நாளில் 47,743 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜப்பான் நாட்டில் 39,899 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இத்தாலி நாட்டில் 18,380 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் பரவல்
இந்தியாவில் ஒரே நாளில் 1,141 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் ஒரே நாளில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,21,996 பேராக அதிகரித்துள்ளது. கேரளா, டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.
Recommended Video

4 அலை தாக்க வாய்ப்பு
ஓமிக்ரான் வைரஸ் மட்டுமே கடைசி கொரோனா இல்லை என்றும் கொரோனாவில் இருந்து தப்பிக்க தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. ஜூன் மாதத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்றும், 4வது அலை உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர்












Click it and Unblock the Notifications