கொரோனா அச்சம்.. கொள்ளையர்கள் வதந்தி.. மகாராஷ்டிராவில் அடித்து கொல்லப்பட்ட 3 பேர்.. பகீர்!
மகாராஷ்டிராவில் கொரோனா தொடர்பாகவும் ஊரடங்கு தொடர்பாகவும் பரவி வரும் பல்வேறு வதந்திகள் காரணமாக பல்ஹார் மாவட்டத்தில் மூன்று பேர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா தொடர்பாகவும் ஊரடங்கு தொடர்பாகவும் பரவி வரும் பல்வேறு வதந்திகள் காரணமாக பல்ஹார் மாவட்டத்தில் மூன்று பேர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் மகாராஷ்டிராவின் கண்டியவல்லி பகுதியை சேர்ந்த இந்து மத சாமியார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிராவில் உள்ள பல்ஹார் மாவட்டத்தில் ஜவஹர் என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த பகுதி வழியாக போர்ட் கார் ஒன்றில் மும்பையை சேர்ந்த மூன்று பேர் சென்று இருக்கிறார்கள்.
கடந்த வியாழக்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. இவர்கள் பல்ஹார் மாவட்டத்தில் சில்வாசா பகுதியில் நடந்த துக்க நிகழ்வு ஒன்றுக்காக அந்த வழியாக சென்றுள்ளனர்.

திடீர் தாக்குதல்
இந்த நிலையில் ஜவஹர் பகுதியில் உள்ள கடக்சின்னசாலே கிராமத்தில் இவர்கள் காரை நிறுத்தும் போது இவர்களை அப்பகுதி மக்கள் காரை சுற்றி வளைத்து உள்ளனர். அந்த காரில் இருந்த நபர்களை அந்த ஊர் மக்கள் சுற்றி வளைத்து தாக்கியுள்ளனர். காரணமே இல்லாமல் அவர்களை தாக்கியுள்ளனர். அந்த பகுதியை சேர்ந்த பழங்குடி மக்கள் சுற்றி வளைத்து கற்களை கொண்டும் , குச்சிகளை கொண்டும் அந்த காரில் இருந்தவர்களை தாக்கி உள்ளனர்.

பலியானார்கள்
இன்னும் சிலர் நேரடியாக வந்து கைகளால் அந்த மூன்று பேரை மிக மோசமாக தாக்கியுள்ளனர். இந்த மோசமான தாக்குதலில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்த நிலையில் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்த போலீஸ் சம்பவம் அறிந்து அந்த இடத்திற்கு வந்தனர். ஆனால் சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரையும் அங்கு கோபத்தில் இருந்த மக்கள் மோசமாக தாக்கியுள்ளனர்.

காரணம் என்ன?
அதன்பின் அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு கலவரம் கட்டுப்படுத்தப்பட்டது. அந்த காரில் வந்த மூன்று
பேரையும் கொள்ளையர்கள் என்று நினைத்துக் கொண்டு தாக்கியதாக மக்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். கொரோனா தொடர்பாக அங்கு நிறைய வதந்திகள் பரவி வருகிறது. கொள்ளையர்கள் இரவு நேரத்தில் வந்து கொள்ளையடிக்கிறார்கள். லாக் டவுனை பயன்படுத்தி கொள்ளையடிக்கிறார்கள்.

வதந்திதான் காரணம்
இன்னும் சிலர் கொரோனாவை பரப்புகிறார்கள் என்று வதந்திகள் பரவி உள்ளது. இதனால் அன்று காரில் வந்த மூன்று பேரையும் கொள்ளையர்கள் என்று நினைத்து மக்கள் தாக்கி கொலை செய்துள்ளனர். ஆனால் இந்த மூன்று பேரும் சாதுக்கள் என்றும் கண்டியவல்லி பகுதியை சேர்ந்த இந்து மத சாமியார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக 100 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். அதோடு பால்கர் கும்பல் கொலை சம்பவம் தொடர்பாக உயர் மட்ட விசாரணைக்கு மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications