மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 8139 கேஸ்கள்.. மொத்த பாதிப்பு 246600 ஆக உயர்வு..10000ஐ தாண்டிய பலி!
மும்பை: மகாராஷ்டிராவில் மொத்த கொரோனா பாதிப்பு 246600 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் 8,139 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 849823 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மண் நேரத்தில் 27219 பேருக்கு இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 543 பேர் பலியாகி உள்ளனர். மொத்தமாக 22687 பேர் இந்தியாவில் பலியாகி உள்ளனர்.

இந்தியாவில் கொரோனா காரணமாக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா மாறியுள்ளது.
மகாராஷ்டிராவில் மொத்த கொரோனா பாதிப்பு 246600 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் தற்போது 99203 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.
இன்று மட்டும் 4360 பேர் மகாராஷ்டிராவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 136985 பேர் மகாராஷ்டிராவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் பலி எண்ணிக்கை 10 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
223 பேர் இன்று மகாராஷ்டிராவில் பலியாகி உள்ளனர். 10116 பேர் இதுவரை மகாராஷ்டிராவில் பலியாகி உள்ளனர். மும்பையில் மட்டும் 90461 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பையில் 23035 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். அங்கு மொத்தமாக 61934 பேர் டிசார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 5205 பேர் மும்பையில் இதுவரையில் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.












Click it and Unblock the Notifications