ஒரே நாளில் 9000+ பாதிப்பு.. மகாராஷ்டிராவில் மீண்டும் உயரும் கொரோனா கேஸ்கள்.. 3ம் அலை தொடக்கமா?
மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா கேஸ்கள் மீண்டும் உயர தொடங்கி உள்ளன.
இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு முடிவிற்கு வந்துள்ள நிலையில், எப்போது வேண்டுமானாலும் 3ம் அலை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா மூன்றாம் அலை இன்னும் 2-4 வாரங்களில் ஏற்படலாம் என்று அம்மாநில அரசின் டாஸ்க் போர்ஸ் எச்சரித்தது.

அதிலும் இந்தியாவில் மகாராஷ்டிராவில்தான் கேஸ்கள் எப்போதும் அதிகமாக பதிவாகும் என்பதால் அங்கு தீவிரமான கண்காணிப்பு பணிகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் மகாராஷ்டிராவில் மூன்றாம் அலை வேகமாக வர வாய்ப்புள்ளதாக அம்மாநில அரசின் டாஸ்க் போர்ஸ் எச்சரித்தது.
இந்த நிலையில்தான் மகாராஷ்டிராவில் கேஸ்கள் உயர தொடங்கி உள்ளன. நேற்று 9000+ கேஸ்கள் பதிவான நிலையில் இன்று 9336 கேஸ்கள் பதிவாகி உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தினசரி கேஸ்கள் 9 ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவாகி வருகிறது.
மகாராஷ்டிராவில் இன்று 123 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். மகாராஷ்டிராவில் 3,378 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர் . மகாராஷ்டிராவில் 1,23,225 பேர் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர்.
மகாராஷ்டிராவில் இதுவரை மொத்தமாக 60,98,177 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை மொத்தமாக 58,48,693 பேர் குணமடைந்து இருக்கிறார்கள். மொத்தமாக இன்று வரை மகாராஷ்டிராவில் 1,23,030 பேர் கொரோனா காரணமாக பலியாகி உல்ளனர்.
மும்பை தாராவில் 24 மணி நேரத்தில் ஒரு கொரோனா கேஸ் கூட பதிவாகவில்லை. மும்பையில் புதிதாக 548 கேஸ்கள் பதிவாகி உள்ளது. மும்பையில் ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 13,334 ஆக உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications