முத்தம் தர நெருங்கிய 2 பேர்.. மும்பை போலீஸ் அதிரடி.. கொரியா பெண் நன்றி.. கப்பலேறிடுச்சு இந்தியா மானம்
கொரியா பெண் யூடியூபர் மும்பை போலீசாருக்கு தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ளார்
மும்பை: தனக்கு பாலியல் தொல்லை தந்த 2 பேரை மும்பை போலீசார் கைது செய்ததற்கு, கொரிய பெண் டியூபர் நன்றியை தெரிவித்து கொண்டுள்ளார்.
தென்கொரியாவை சேர்ந்த பெண் யூடியூபர் மியோசி.. யூடியூப் வீடியோவுக்காக மும்பைக்கு சில நாட்களுக்கு முன்பு வந்திருக்கிறார்.. மும்பை கார் ரோடு பகுதியில் இரவு நேரம், தன் சேனலுக்கு வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார் மியோசி.
இவரது சேனலுக்கு லட்சக்கணக்கான ஃபாலோயர்ஸ்கள் உண்டு.. மும்பையில் அன்றைய தினம் லைவ் வீடியோ போட்டிருந்தால், ஆயிரத்துக்கும் அதிகமானோர் அந்த நிகழ்ச்சியில் அப்போது பங்கேற்றிருந்தனர்.

வண்டிக்கு வா
மியோசி வெளியிட்ட மும்பையின் அழகையும் அந்த வீடியோவில் பார்த்து கொண்டிருந்தனர்.. அந்த நேரம் ஒரு இளைஞர் அங்கே வந்துள்ளார்.. உன் பெயர் என்ன என்று மியோசியிடம் கேட்டுள்ளார்.. பிறகு, திடீரென மியோசியின் கையை பிடித்து இழுத்து, "வண்டிக்கு வா" என்று தவறான நோக்கத்துடன் கூப்பிடுகிறார்.. இதனால் அதிர்ச்சி அடைந்த மியோசி, முடியாது என்று மறுத்துவிட்டு, அங்கிருந்து நகர்ந்து செல்கிறார். ஆனால், அப்போதும் இளைஞர் விடவில்லை.. பைக்கில் தன்னடைய நண்பரை உட்கார வைத்துக் கொண்டு, லிஃப்ட் தரட்டுமா என்று கேட்டார்..

லிஃப்ட்
அதற்கு மியோசி, லிஃப்ட் தேவையில்லை, நான் தங்குமிடம் பக்கத்தில்தான் இருக்கிறது என்று ஆங்கிலத்திலேயே சொன்னார்.. இது தொடர்பான வீடியோவை, மியோசி தன்னுடைய சோஷியல் மீடியாவில் வெளியிட்டிருந்தார்.. அத்துடன் சில செய்திகளையும் அதில் பகிர்ந்திருந்தார்.. நான் ஒரு யூடியூபர்... லைவ் வீடியோக்களை அடிக்கடி அப்லோடு செய்து வருகிறேன்... எத்தனையோ நாடுகளுக்கு டூர் சென்று, அந்த வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறேன்... ஒவ்வொரு நாடுகளில் பின்பற்றப்படும் கலாசாரம், உணவு முறை பற்றி, நானும் பிற நாட்டை சேர்ந்தவர்களும் அறிய வேண்டும் என்பதே என்னுடைய நோக்கமாகும்... அதற்காகத்தான் இந்தியா வந்தேன்..

இடுப்பில் கை
மும்பையில் நான் லைவ் வீடியோ எடுத்துவிட்டு ஹோட்டல் ரூமுக்கு திரும்பி கொண்டிருந்தேன். அப்போது தான் 2 பேர் என்னிடம் வந்தனர். ஒருத்தர், என்னை பார்த்து ஐலவ்யூ என்று கத்தினார்.. நான் முதலில் அதை பெரிதுப்படுத்தவில்லை.. காரணம், லைவ் வீடியோ எடுக்கும்போது இப்படிப்பட்ட சம்பவங்கள் நடப்பது இயல்புதான்... ஆனால், அவர்கள் நோக்கம் வேறாக இருந்தது.. எங்கே போறீங்க என்று கேட்டார்கள்.. ஹோட்டலுக்கு போவதாக சொன்னேன்.. பைக்கில் ஏற சொன்னார்கள்.. நான் மறுத்துவிட்டேன். உடனே என் இடுப்பை பிடித்து பைக்கில் ஏற்ற முயற்சித்தனர்...

முத்தம்
நான் அவர்களை தடுத்த நிலையில் தோளில் கை போட்டு, முத்தம் தர முயன்றார்கள்.. அதையும் தடுத்தேன்.. ஆனால், அந்த நேரங்கள் எனக்கு மிகவும் கடினமானதாக உணர்ந்தேன்... அவர்கள் 2 பேராக இருந்தனர். நான் தனி ஆளாக இருந்தேன். இதனால் அவர்களை தவிர்த்துவிட்டு ஹோட்டலுக்கு வேகமாக நடந்தேன்.. அவர்கள் என் பின்னாடியே வந்தார்கள்.. செல்போன் நம்பர் கேட்டாங்க.. இதனால் போலி நம்பர் ஒன்றை தந்துவிட்டு, வேகமாக வந்துவிட்டேன். இப்படிப்பட்ட பிரச்சனைகளை மற்ற நாடுகளிலும் சந்தித்து இருக்கிறேன். அந்த சமயங்களில் யாரிடம் உதவி பெற வேணே்டும் என்பது தெரியாத நிலை இருந்தது.

போலீஸ் டேக்
ஆனால் இந்தியாவில் அதிர்ஷ்டவசமாக எனக்கு நண்பர்கள் உதவ முன்வந்தனர். மேலும் ட்விட்டரில் வீடியோவை பதிவிட்டு மும்பை போலீசுக்கு டேக் செய்தனர். மும்பை போலீசாரும் விரைவான நடவடிக்கை எடுத்து 2 பேரை கைது செய்துள்ளனர். இது பாராட்டுக்குரியது... உடனடியாக போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நினைக்கவே இல்லை.. ஒருபக்கம் முகமறியா இந்திய நண்பர்களின் உதவி, மற்றொருபக்கம் போலீசார் நடவடிக்கைக்கு என்னுடைய நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.. இந்தியாவை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இன்னும் 3 வாரம் இந்தியாவில் இருக்க போகிறேன்'' என்றார்.

நெருங்கினர்
இந்த பெண் பதிவிட்ட வீடியோ பல்வேறு அதிர்வுகளை இணையத்தில் உண்டுபண்ணியது.. அவர் 2வதாக வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், ஒருவர் என்னை துன்புறுத்தினார். குற்றவாளியுடன் வேறு ஒரு நபரும் இருந்ததால் நான் பிரச்னையைப் பெரிதாக்க விரும்பாமல் இருந்தேன். நான் பொதுமக்களுடன் மிகவும் நெருங்கிப் பழகியதால்தான் இது போன்று நடந்ததாகச் சிலர் சொல்கின்றனர்'' என்று தெரிவித்துள்ளார்..

வீடியோஸ்
அதுமட்டுமல்ல, போலீசுக்கு யாருமே இதை பற்றி எந்த புகாரையும் தரவில்லை.. இந்த வீடியோவை பார்த்த போலீஸாரே, தாங்களே முன்வந்து வழக்கு பதிவுசெய்து, இந்த காரியத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கைது செய்துள்ளனர்.. இதற்கு தான் அந்த பெண் மனமார நன்றி தெரிவித்துள்ளார்.. தற்போது கைதான, மொபீன் சந்த் மொகமத், மொகமத் சஹீப் ஆகியோரிடம் விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications