Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டவ்-தே புயல்.. 273 பேருடன் மும்பை கடலில் மூழ்கிய ஓஎன்ஜிசி கப்பல்.. 127 பேர் மாயம்.. தேடுதல் வேட்டை

Subscribe to Oneindia Tamil

மும்பை: டவ் தே புயல் காரணமாக மும்பை கடலில் அடித்து செல்லப்பட்ட ஓஎன்ஜிடி கப்பலில் இருந்த 127 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

அரபிக்கடலில் உருவாகி அதிதீவிர புயலாக மாறிய டவ் தே இன்று அதிகாலை குஜராத்தில் கரையை கடந்தது. இந்த புயல் காரணமாக மகாராஷ்டிராவில் உள்ள கடலோர மாவட்டங்கள், மும்பை ஆகிய பகுதிகள் பெரிய அளவில் சேதங்களை சந்தித்துள்ளன.

இதில் நேற்று மும்பை கடலில் நிறுத்தப்பட்டு இருந்த பார்ஜ் வகை ஓஎன்ஜிசி கப்பல் கடலில் அடித்து செல்லப்பட்டது. 150+ கிமீ வேகத்தில் வீசிய புயல் காற்று காரணமாக இந்த கப்பல் நேற்று கடலில் அடித்து செல்லப்பட்டு, பின் நீரில் மூழ்கியது.

ஏன்

ஏன்

பார்ஜ் வகை கப்பல்கள் அகன்ற நீண்ட கப்பல்கள் ஆகும். கடலில் கட்டுமானம், எண்ணெய் எடுப்பது உள்ளிட்ட பணிகளுக்கு இந்த கப்பல்கள் பயன்படுத்தப்படும். ஓஎன்ஜிசி சார்பாக மும்பையில் பார்ஜ் 305 என்ற கப்பல் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த பார்ஜ் 305 கப்பல் நேற்று டவ் தே புயல் வீசிய பாதையில் நிறுத்தப்பட்டு இருந்த காரணத்தால் வேகமாக வீசிய காற்றில் கடலில் அடித்து செல்லப்பட்டது.

நங்கூரம்

நங்கூரம்

புயல் காரணமாக இதன் நங்கூரம் நீங்கிய நிலையில், கடலில் கட்டுப்பாடு இல்லாமல் இந்த பார்ஜ் 305 கப்பல் மிதந்து சென்று இருக்கிறது. பாம்பே ஹை கடல் பகுதியில் இருந்து 175 கிமீ தூரம் சென்ற பின் இந்த கப்பல் நீரில் மூழ்கியது. இந்த கப்பலில் மொத்தம் 273 பேர் இருந்துள்ளனர். இதில் 145 பேர் இதில் மீட்கப்பட்ட நிலையில் மீதம் உள்ள 127 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தீவிரம்

தீவிரம்

இந்திய கடற்படை மூலம் தற்போது பி -8ஐ விமானம் இதற்காக மீட்பு பணிகளை செய்து வருகிறது. அதேபோல் இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் கொச்சி, ஐஎன்எஸ் கொல்கத்தா ஆகிய கப்பல்களும் மீட்பு பணிகளில் ஈடுப்ப்ட்டு வருகிறது. இந்த பார்ஜ் 305 கப்பலில் இருந்தவர்கள் ஏற்கனவே உயிர்காக்கும் ஜாக்கெட் அணிந்து இருந்ததால், இவர்கள் கடலில் பல இடங்களில் மிதந்து கொண்டு இருக்க வாய்ப்புள்ளது.

கடற்படை

கடற்படை

அதேபோல் கடற்படை மூலம் இங்கு பல இடங்களில் சிறிய சிறிய மீட்பு படகுகள் களமிறக்கப்பட்டு மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. நேற்று இரவு முழுக்க மீட்பு பணிகள் நடந்த நிலையில் இன்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அஹில்யா, ஓசன் எனர்ஜி போன்ற தனியார் கப்பல்களும் மீட்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றன. ஒன்ஜிசி சார்பாக பார்ஜ் 305 கப்பல் மும்பை கடற்பகுதியில் பணிகளை மேற்கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

எப்படி

எப்படி

இதுபோக மும்பை கடற்பகுதியில் மேலும் மூன்று மீட்பு ஆபரேஷன்கள் நடந்து வருகின்றன. 'Gal Constructor' என்ற இன்னொரு கப்பலும் புயல் காரணமாக திசை மாறி சென்றுள்ளது. அதேபோல் மும்பை கடலில் அமைக்கப்பட்டு இருந்த சாகர் எண்ணெய் எடுக்கும் மையம், பார்ஜ் எஸ்எஸ்-3 கப்பல் இரண்டும் மும்பையில் புயல் காரணமாக கடலில் திசை மாறி சென்றுள்ளதால், அவற்றை மீட்கும் பணியும் நடந்து வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+