அரபிக்கடலில் உருவாகும் "தேஜ்".. மும்பையை சுருட்டப்போகும் சூறாவளி புயல்.. ரெட் அலர்ட்.. கவனம்
மும்பை: அரபிக் கடலில் தற்போது உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய கடல் பகுதியில் வெப்பமண்டல புயல் உருவானால் தேஜ் என்று அழைக்கப்படும் என ஏற்கனவே அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளது அதன்படி இந்த புயலுக்கு தேஜ் என பெயரிடப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு: தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு-மத்திய அரபிக்கடல் பகுதியில் திங்கள் கிழமை காலை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என இந்திய வானிலை மையம் கணித்திருந்தது. ஆனால் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து நேற்று காலை அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

சூறாவளி புயல்: இதனை தொடர்ந்து இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு-வடமேற்கு நோக்கி நகரும் என்றும் பின்னர் தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் வானிலை மையம் கூறியிருந்தது. இந்நிலையில் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சூறாவளி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 2 நாட்கள் புயலுக்கான முக்கிய நாட்களாக பார்க்கப்படுவதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
தேஜ் புயல்: இந்த ஆண்டின் தென்மேற்கு பருவமழை காலத்திற்கு பிந்தைய காலத்தில் உருவாகும் முதல் புயல், இந்த தேஜ் புயல் ஆகும். கடந்த 2022 ஆம் ஆண்டு, பருவமழைக்குப் பிந்தைய காலத்தில் அரபிக்கடலில் வெப்பமண்டல புயல் எதுவும் உருவாகவில்லை. ஆனால் அதே நேரத்தில் வங்கக்கடலில் சித்ராங் மற்றும் மாண்டூஸ் என இரண்டு வெப்பமண்டல புயல்கள் உருவானது.
இந்த ஆண்டு அரபிக்கடலில் உருவாகும் சூறாவளி புயலின் ஆரம்ப அறிகுறிகளை வானிலை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த சூறாவளி புயலுக்கு தேஜ் என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது தேஜ் புயல் மும்பையை குறி வைத்து உருவாகி வருகிறது. இந்த புயல் அதிகன மழையை தரக்கூடும் என்பதால் மும்பை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மும்பையை சுருட்டும்: அக்டோபர் 21 ஆம் தேதி தேஜ் புயல் இந்தியாவின் மும்பையைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், தேஜ் புயல் கடுமையான சூறாவளி புயலாக இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கத் தொடங்கும் போது மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகனமழை பெய்யும் என்றும் பலத்த காற்று வீசும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது. மகாராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத் கடலோர பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும் இந்திய வானிலை மையம் வலியுறுத்தியுள்ளது.
மீனவர்கள் கவனம்: தேஜ் புயல் தாக்கம் காரணமாக மகாராஷ்டிர மாநில வானிலையில் மாற்றம் ஏற்படும் என்றும் இந்திய வானிலை வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் மகாராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத் கடலோர பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் பலத்த காற்று வீசும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் இந்திய வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
-
ஏற்கனவே அவிஞ்சு போய் கிடக்கு.. மேற்கொண்டு வெறியைக் கிளப்பும் எல்-நினோ! ஆகஸ்ட் வரை வெயில் தானாம்! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. விடாமல் வெளுக்க போகுது மழை.. வானிலை மையம் எச்சரிக்கை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு?












Click it and Unblock the Notifications