அதிகாரப்பூர்வ விளையாட்டாக 'தஹி ஹண்டி'.. கோவிந்தாக்களுக்கு அரசு வேலை.. மகாராஷ்டிரா முதல்வர் அறிவிப்பு
மும்பை: மகாராஷ்டிராவில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, முதல்வர் ஏக்னாத் ஷிண்டே, தஹி ஹண்டியை அதிகாரப்பூர்வ விளையாட்டாகவும், அதில் ஈடுபடும் கோவிந்தாக்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
Recommended Video
நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
இதில், மிகவும் முக்கியமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு உற்சாகமாக கொண்டாடப்படும்.

மனித பிரமிடு அமைத்து..
கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு இடங்களில் சுமார் 20 அடி உயரத்தில் கட்டப்படும் தயிர் பானையை இளைஞர்கள், மனித பிரமிடு அமைத்து அடிக்கும் விளையாட்டு கோலகலமாக கொண்டாடப்படும். மிக பிரமாண்டமாக் கொண்டாடப்படும் இந்த விழாவில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத்தொகையும் அதிகளவில் வழங்கப்படும். இதேபோல் இந்த சுமார் 30 அடி உயரத்திற்கு மனித பிரமிடு அமைக்கும் நேரத்தில் சிலருக்கு காயம் ஏற்படுவதோடு, ஒரு சிலர் உயிரிழக்கும் நிகழ்வும் ஏற்படும்.

தஹி ஹண்டி போட்டிக்கு ஏற்பாடு
இளைஞர்களின் இந்த சாகச விளையாட்டு கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக களையிழந்தது. ஆனால், நடப்பு ஆண்டு தொற்று பரவல் குறைந்து இருப்பதால், பழைய உற்சாகத்துடன் தஹி ஹண்டி கொண்டாடப்பட உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் மாநகராட்சி தேர்தல் நடைபெற உள்ளதால், இளைஞர்களை கவர பல இடங்களில் அரசியல் கட்சிகள் சார்பிலும் இந்த தஹி ஹண்டி போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

ரூ. 10 லட்சம் இழப்பீடு
இந்த நிலையில், தஹி ஹண்டியை மாநில அரசின் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு போட்டிகளில் இணைக்கப்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். இதன் மூலம் தஹி ஹண்டியில் ஈடுபடும் கோவிந்தாக்கள் (வீரர்கள்) க்கு விளையாட்டு பிரிவுக்கான இட ஒதுக்கீட்டில் அரசு வேலையில் முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. மனித பிரமிடு அமைக்கும் போது தவறி விழுந்து உயிரிழக்க நேரிட்டால், கோவிந்தாக்களின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு அளிக்கப்படும் எனவும், ஊனம் ஏற்பட்டால் ரூ. 7 லட்சம் நிவாரணம், படுகாயம் அடைந்தால் ரூ. 5 லட்சம் நிவாரணமாக அளிக்கப்படும் என்று ஏக்நாத் ஷிண்டே அறித்துள்ளார்.

அடிக்கடி நடத்த வேண்டும்
மகாராஷ்டிர அரசின் இந்த அறிவிப்புக்கு தஹி ஹண்டி விளையாட்டு தொடர்பான மும்பையை சேர்ந்த அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. மேலும், தங்களின் நீண்ட நாள் கோரிக்கை இது எனவும் கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று மட்டும் கொண்டாப்படுவதற்கு பதிலாக இந்த சாகச விளையாட்டை அடிக்கடி நடத்த வேண்டும். புரோ கபடி லீக் போன்று அதிக அளவில் இந்த விளையாட்டை நடத்த வேண்டும். எப்போதுதான், கோவிந்தாக்கள் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட முடியும். ஆண்டுமுழுவதும் ஆரோக்கியமான போட்டியாக இருக்கும் என்று தெரிவித்தது.

20 அடிக்கும் மேலான உயரத்தில்..
தஹி ஹண்டி சாகசத்தில் ஈடுபடும் கோவிந்தாக்கள் அடிக்கடி கீழே விழுந்து அடிபட்டுக்கொள்வதால், சுப்ரீம் கோர்ட் இந்த போட்டிக்கான சில விதிகளையும் வகுத்தது. அதன்படி, 20 அடிக்கும் மேலான உயரத்தில் தயிர் பானையை தொங்க விடக்கூடாது என்று உத்தரவிட்டது. அதேபோல், 14 வயதுக்கு கீழான சிறுவர்கள் இதில் பங்கேற்க கூடாது என்று மும்பை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது












Click it and Unblock the Notifications