நான் நடிகன்னா என்னை பாதிக்காதா என்ன? தக்காளியை குறைத்துக் கொண்டேன்.. தர்பார் புகழ் சுனில் ஷெட்டி
மும்பை: தக்காளியின் விலை உயர்வு காரணமாக தக்காளி சாப்பிடுவதை நான் குறைத்துக் கொண்டேன் என நடிகர் சுனில் ஷெட்டி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தக்காளி வரத்து குறைந்துள்ளது. அதனால் விலையும் அதிகரித்துள்ளது.
இதையடுத்து பல இடங்களில் தக்காளி விலை கிலோ ரூ 150 வரை உயர்ந்துள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் கிலோ 10, 20 க்கு உதைப்பட்டுக் கொண்டிருந்த தக்காளி விலை அதிகரித்துள்ளது ஏழை மக்களை வாட்டி வதைத்து வருகிறது. தக்காளி விற்பனை செய்யும் விவசாயிகள் தற்போது லட்சாதிபதியாகி வருகிறார்கள்.

வட மாநிலத்தில் தக்காளியை ரூ 38 லட்சத்திற்கு விவசாயி ஒருவர் விற்பனை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தக்காளி விலை தங்கத்தை போல் உயர்ந்துவருகிறது. ஒரு லிட்டர் பெட்ரோலை விட விலை உயர்ந்துள்ளது. இதனால் வீடுகளில் தக்காளியின் பயன்பாடு குறைந்துள்ளது. சில இடங்களில் தவிர்க்கப்பட்டும் வருகிறது.
அது போல் ஹோட்டல்களில் தக்காளி சாதம், தக்காளி ரசம், தக்காளி சட்னி, இவையெல்லாம் கிடைப்பதில்லை. இவ்வளவு ஏன் வெளிநாட்டு நிறுவனமான மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தையும் இந்த விலை உயர்வு கடுமையாக பாதித்துள்ளது. அதனால் தக்காளி சாஸ் இனி கிடையாது என அறிவித்துள்ளனர்.
இந்த விலை உயர்வு ஏழை மக்களை மட்டுமல்லாமல் பணக்காரர்களையும் பாதித்துள்ளதாகவே கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த விலை உயர்வு தன்னை பாதித்துள்ளதாக நடிகர் சுனில் ஷெட்டி தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகரான அவர் தமிழில் 12 பி, தர்பார், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தக்காளி விலையுயர்வால் தக்காளி சாப்பிடுவதை குறைத்துக் கொண்டதாக தெரிவிக்கிறார். இதுகுறித்து சுனில் ஷெட்டி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: தக்காளி விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இது எங்கள் வீட்டு கிச்சனிலும் எதிரொலிக்கிறது. இதனால் நான் அண்மைக்காலமாக தக்காளி சாப்பிடுவதை குறைத்துக் கொண்டேன்.
நான் நடிகன் என்பதால் தக்காளியின் விலை என்னை பாதிக்காது என யாரும் நினைக்க வேண்டாம். நாங்களும் இந்த விலை உயர்வு பாதிப்பை எதிர்கொள்கிறோம். நான் ஒரு ஹோட்டல் நடத்தி வருகிறேன். அந்த ஹோட்டலில் சமைக்கும் உணவின் சுவையிலும் தரத்திலும் தக்காளி விலை உயர்வு காரணமாக சமரசம் செய்ய வேண்டிய நிலை இருக்கிறது. காய்கறிளையும் பழங்களையும் உணவு செயலிகள் மூலமே ஆர்டர் செய்கிறேன். அதன் விலை தெரிந்தால் அதிர்ச்சியாவீர்கள் என சுனில் ஷெட்டி தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications