பணம் தரேன்.. டியூஷன் டீச்சரை கொன்னுடு.. தாயை திட்டியதால் ஆத்திரம்.. கொலை செய்ய துணிந்த 9 வயது மகன்

டியூஷன் டீச்சரை கொன்றது 12 வயது சிறுவன் என தெரியவந்துள்ளது

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கடன் கொடுக்க மறுத்த டீச்சர்.. கத்தியால் குத்திய மாணவன்-வீடியோ

    மும்பை: "பணம் தர்ரேன்.. டீச்சரை கொன்னுடுன்னு..ன்னு என் நண்பன் சொன்னான்.. அதான் கத்தியால் டீச்சரை குத்திவிட்டேன் என்று 12 வயது சிறுவன் போலீசில் சொல்லி உள்ளது அதிர்ச்சியை தந்துள்ளது

    மகாராஷ்டிரா மாநிலம் கோவண்டி பகுதியை சேர்ந்தவர் 30 வயது பெண் ஆயிஷா அஸ்லாம் ஹுசூய். திருமணமான இவர், கணவனை விட்டுபிரிந்து மகனுடன் வசித்து வருகிறார்.

    இதனால் சுற்றுவட்டார பகுதி பிள்ளைகளுக்கு டியூஷன் நடத்தி தன் வாழ்க்கையை ஓட்டி கொள்கிறார். இந்த டியூஷனில் 9 வயதுடைய 4-ம் வகுப்பு மாணவன் ஒருவன் படித்து வந்துள்ளான்.

    கடன் உதவி

    கடன் உதவி

    அந்த மாணவனின் அம்மா, டியூசன் டீச்சர் முன்பெல்லாம் கஷ்டப்படும்போது பண உதவி செய்து வந்துள்ளார் போலும். இந்நிலையில், அவசர தேவைக்காக வீட்டு செலவுக்கு அந்த சிறுவனின் அம்மா டீச்சரிடம் 2 ஆயிரம் ரூபாய் பணம் கடனாக கேட்டதாக தெரிகிறது.

    அவமானம்

    அவமானம்

    அதற்கு டீச்சர் மறுத்துள்ளதுடன், மாணவனின் அம்மாவை திட்டிவிட்டார். தன் அம்மாவை திட்டும்போது, 9 வயது மகனுக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. அத்துடன், தன் சக நண்பர்கள் முன்னாடியே அம்மாவை தரக்குறைவாக பேசவும் கொலை செய்யும் அளவுக்கு ஆத்திரம் வந்துவிட்டது.

    கத்திகுத்து

    கத்திகுத்து

    இதனிடையே வழக்கம் போல டியூசனுக்கு வந்த மாணவன், டியூஷன் முடியும் வரை அமைதியாக உட்கார்ந்திருந்துவிட்டு, கிளம்பும்போது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து டீச்சரின் வயிற்றில் சரமாரி குத்திவிட்டதாகவும், இதில் மயங்கி சரிந்த டீச்சர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாகவும் தகவல்கள் வெளியாயின. மேலும் சம்பந்தப்பட்ட மாணவனும் தலைமறைவாகி விட்டதாக சொல்லப்பட்டது.

    சிசிடிவி

    சிசிடிவி

    இந்த வழக்கினை பொறுத்தவரை, போலீசார் விசாரிக்க ஆரம்பித்ததில் இருந்தே குழப்ப நிலையே நீடித்து வருகிறது. எனினும், தீவிர விசாரணையில், மாணவனின் 14 வயது நண்பன் ஒரு மாலுக்குள் நண்பர்கள் 2 பேருடன் சுற்றி திரிவதை போலீசார் கண்டுள்ளனர். அங்கிருந்த சிசிடிவி காட்சியில் அவர்கள் 750 ரூபாய்க்கு ஃபாஸ்ட் புட் கடையில் வாங்கி சாப்பிட்டதையும், 250 ரூபாய்க்கு வீடியோ கேம் விளையாடியதையும் கண்டு அதிர்ந்தனர்.

    நண்பன்

    நண்பன்

    14 வயது சிறுவனிடம் எப்படி 1000 ரூபாய் கிடைத்திருக்கும் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்து, அவனை அழைத்து விசாரித்தனர். அப்போதுதான் அவன் சொன்ன காரணத்தை கேட்டு ஆடிப்போய்விட்டனர். டியூஷனில் தன் தாயை தரக்குறைவாக பேசிய டீச்சரை கொலை செய்ய வேண்டும் என்று 9 வயது நண்பன் கேட்டுக் கொண்டதாகவும், அதற்காக இப்போதைக்கு 1000 ரூபாயும், பிறகு 5000 ரூபாய் தருவதாகவும் மாணவன் சொன்னதாகவும், அதன்படியே டீச்சரை தான் தான் கத்தியால் குத்தி கொன்றதாகவும் தெரிவித்துள்ளான்.

    குழப்பம்

    குழப்பம்

    அதாவது நண்பனுக்காக அவனது தாயை கொன்றது இந்த 14 வயது சிறுவன்தானாம்! இதையடுத்து தொடர் விசாரணை நடந்து வருகிறது என்றாலும், உண்மையிலேயே டீச்சரை கொன்றது யார், உண்மை நிலவரம் என்ன என்பதில் இன்னமும் குழப்பம் நீடித்து வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+