தேவேந்திர பட்னாவிஸ் VS ஷிண்டே.. மகாராஷ்டிரா புதிய முதல்வர் டிசம்பர் 5ல் பதவியேற்பு.. யார் தெரியுமா?
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இன்னும் முதல்வர் தேர்வு செய்யப்படவில்லை. முதல்வர் பதவி மீது பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் கண்வைத்துள்ளதால் குழப்பம் நீடித்து வரும் சூழலில் புதிய முதல்வர் டிசம்பர் 5ம் தேதி பதவியேற்பார் என்ற முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் கடந்த 20ம் தேதி நடந்து முடிந்தது. அதன்பிறகு 23ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் பாஜக, சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

மொத்தம் 288 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் தனித்து ஆட்சியை பிடிக்க 145 இடங்களில் வெற்றி பெற வேண்டும். ஆனால் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை என்பது கிடைக்கவில்லை.
இருப்பினும் ‛மகாயுதி' எனும் பாஜக கூட்டணி மொத்தமாக 233 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில் ஆளும் கூட்டணியில் பாஜக மட்டும் 132 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக மாறியது. மேலும் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 57 இடங்களிலும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 41 இடங்களில் வெற்றி பெற்றது. மறுபுறம் ‛மகா விகாஸ் அகாடி' எனும் காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 14 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 20 இடங்களிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 10 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதன்மூலம் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சியை பிடிப்பது உறுதியாகி உள்ளது.
நள்ளிரவை தாண்டி நடந்த மீட்டிங்.. நேரடியாக தலையிட்ட அமித் ஷா.. மகாராஷ்டிராவில் அடுத்த முதல்வர் யார்?
இருப்பினும் பாஜகவின் ‛மகாயுதி' கூட்டணியில் புதிய முதல்வர் யார் என்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. கடந்த முறை 100க்கும் அதிக எம்எல்ஏக்கள் இருந்தும் பாஜக, சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதல்வர் பதவியை வழங்கியது. ஆனால் இந்த முறை பாஜக முதல்வர் பதவியை வைத்து கொள்ள விரும்புகிறது. அதன்படி பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வர் ஆக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் முதல்வர் பதவியை விட்டு கொடுப்பதை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா விரும்பவில்லை. இதனால் இழுபறி நீடித்து வருகிறது.
நேற்று முன்தினம் இரவில் டெல்லியில் அமித்ஷா, ஜேபி நட்டா தலைமையில் தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில் தேவேந்திர பட்னாவிஸ்க்கு முதல்வர் பதவியை கொடுக்க பாஜக மேலிடம் விரும்பியது. இதற்கு முதலில் ஏக்நாத் ஷிண்டே ஒப்புக்கொள்ளாத நிலையில் கடைசியில் ஓகே சொல்லியுள்ளார். அதோடு தங்கள் கட்சிக்கு துணை முதல்வர் பதவியையும், உள்துறையையும் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த வேளையில் ஏக்நாத் ஷிண்டேவிடம் நீங்களே துணை முதல்வராக இருக்க வேண்டும் என்று பாஜக மேலிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு அவர் யோசித்து சொல்வதாக கூறியுள்ளார். முதல்வராக இருந்த ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வர் பதவியை விரும்பவில்லை. இதனால் ஒருவேளை அவர் துணை முதல்வர் பதவியை ஏற்காவிட்டால் அவரது மகன் அல்லது தனது ஆதரவாளர் ஒருவர் துணை முதல்வராகலாம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் பாஜகவை பொறுத்தவரை ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராக பொறுப்பேற்க வைத்து கூட்டணியில் மனஸ்தாபம் இல்லை என்பதை எடுத்துக்கூற விரும்புகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஏக்நாத் ஷிண்டே, "சந்திப்பு நன்றாகவும் நேர்மறையாகவும் இருந்தது. இதுவே முதல் சந்திப்பு. அமித் ஷா மற்றும் ஜே.பி.நட்டாவுடன் ஆலோசித்தோம். மகாயுதியின் இன்னொரு கூட்டம் இருக்கும். இந்தக் கூட்டத்தில் முதல்வர் யார் என்பது குறித்து முடிவெடுக்கப்படும். இந்த சந்திப்பு மும்பையில் நடைபெறும்" என்று தெரிவித்தார். மேலும் அவர், இன்னும் ஓரிரு நாட்களில் முதல்வர் யார் என்பது அறிவிக்கப்படும்'' என்றும் கூறினார்.
அதன்பிறகு டெல்லியில் இருந்து நேற்று தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் மும்பை திரும்பினர். மும்பையில் அமைச்சரவை குறித்து 3 பேரும் விவாதிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் ஏக்நாத் ஷிண்டே திடீரென்று சாதரா மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊருக்கு சென்றார். அவர் மும்பை கூட்டத்தை புறக்கணித்து சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் ஏக்நாத் ஷிண்டே சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகவும், இதனால் அவர் சொந்த ஊர் சென்றதாகவும் சிவசேனா கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே தான் தற்போது முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது மகாராஷ்டிராவின் புதிய முதல்வர் டிசம்பர் 5ம் தேதி பொறுப்பேற்க உள்ளதாக பாஜக மற்றும் சிவசேனா கட்சியினர் தெரிவித்துள்ளனர். இந்த பதவியேற்பு விழா என்பது மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் நடைபெறும். அதற்கு முன்பாக கூட்டணி தலைவர்கள் கூடி ஆலோசித்து முதல்வர், துணை முதல்வர், புதிய அமைச்சர்களின் பெயர்களை இறுதி செய்வார்கள் என்று பாஜக, சிவசேனா கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications