Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மனைவியின் "ஒரே அடி".. பரலோகம் போன புருஷன்.. மூக்கு, வாயெல்லாம் "சிவப்பு".. உடம்பில் டிரஸ்ஸும் இல்லை

Subscribe to Oneindia Tamil

மும்பை: ஒரே குத்து விட்டார் ரேணுகா.. அதோடு பரலோகம் போய் சேர்ந்துவிட்டார் தொழிலதிபர்.. இதுகுறித்த கூடுதல் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

புனேவில் உள்ளது கங்கா சாட்டிலைட் ஹவுசிங் சொசைட்டி.. இங்கு கடந்த 24ம் தேதி, ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதனால் போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்றார்கள்.

Did Pune woman attack her Husband on fist punch and what happened actually in the Pune Incident

சடலம்: அங்கே கிடந்த ஆண் சடலத்தை பார்வையிட்டனர்.. உயிரிழந்த நபருக்கு எப்படியும் 36 வயதிருக்கும்.. அந்த நபர் யாரென்ற விசாரணையில் போலீசார் இறங்கினர். பரிதாபமாக இறந்து கிடந்தவர் பெயர் நிகில் கன்னா.. மிகப்பெரிய தொழிலதிபராக வலம்வந்தவர் என்பதை அறிந்து அதிர்ந்து போனார்கள்.

இதையடுத்து, குடும்பத்தினரிடம் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.. அப்போதுதான் மொத்த உண்மையும் வெளியே வந்தது. நிகில் கன்னாவுக்கு, 6 வருடங்களுக்கு முன்புதான் திருமணமானது.. மனைவி பெயர் ரேணுகா ஜாகர்.. இவர்கள் 2 பேருமே உயிருக்கு உயிராக காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.. கடந்த செப்டம்பர் 18ம் தேதி, மனைவி ரேணுகாவுக்கு பிறந்த நாள்.

துபாய் : இந்த முறை தன்னுடைய பிறந்தநாளை, துபாய் சென்று கொண்டாட ஆசைப்பட்டுள்ளார்.. தன்னுடைய ஆசையை நிகில் கன்னாவிடமும் சொல்லி உள்ளார்.. ஆனால், 18ம் தேதி, ரேணுகாவை துபாய் அழைத்துச்செல்ல, நிகில் கன்னாவால் முடியவில்லை..
பிறகு, கடந்த நவம்பர் 5ம் தேதி, இவர்களுக்கு திருமண நாள் வந்துள்ளது..

பிறந்தநாளுக்கு துபாய் அழைத்து செல்லாததால், இந்த திருமண நாளுக்கு, எப்படியும் தனக்கு விலையுயர்ந்த பரிசுப்பொருள் வாங்கித்தருவார் என்று ரேணுகா ஆவலுடன் காத்திருந்ததாக தெரிகிறது. ஆனால், நிகில் கன்னா எந்த பரிசையும் வாங்கி தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ரேணுகா கொதித்து போனார்.. கணவனிடம் இதை பற்றி கேட்டு, தகராறு செய்துள்ளார்.

டிசம்பர் மாதம்: தன்னால் வாங்கி தர முடியாத சூழலை நிகில் கன்னா விளக்கியும், ரேணுகா கடுமையாக சண்டை போட்டுள்ளார்.. இவர்களின் தகராறு முழுமையாக தீராத சூழலில், தன்னுடைய அண்ணன் மகளுக்கு வரும் டிசம்பர் மாதம் பிறந்தநாள் வருகிறது, அதனால், டிசம்பர் மாதம் டெல்லிக்கு செல்ல வேண்டும் என்று கணவரிடம் கேட்டுள்ளார் ரேணுகா.. ஆனால், நிகில் கன்னா, இதற்கும் சரியாக பதில் சொல்லவில்லையாம்.

இதனால், கடந்த 24ம் தேதி, மறுபடியும் தம்பதிக்குள் தகராறு வெடித்துள்ளது.. வாய்த்தகராறு முற்றிப்போய், கை கலப்பாகிவிட்டது.. அதுவும், ரேணுகா உச்சக்கட்ட ஆவேசமானார்.. தன்னுடைய கணவர் நிகில் கன்னா முகத்தில், தன் கைகளால், கடுமையாகவும், வேகமாகவும், ஆவேசமாகவும் குத்தினார்.. ஒரே குத்தில் நிலைகுலைந்து போனார் நிகில்..

பொல பொல ரத்தம்: மூக்கு, வாயிலிருந்து ரத்தம் பொலபொலவென கொட்டியது.. ரேணுகா முகத்தில் விட்ட குத்தில், தாடை உடைந்தது.. பற்கள் உடைந்து கீழே விழுந்தன.. அடுத்த சில நிமிடங்களிலேயே சுயநினைவின்றி ரத்த வெள்ளத்தில் மிதந்தார் நிகில் கன்னா.

கணவரின் கோலத்தை பார்த்து பதறிப்போன ரேணுகா, அவரை எழுப்ப முயன்றார்.. ஆனால், எழவில்லை.. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல், தன்னுடைய மாமனாருக்கு போனை போட்டார் ரேணுகா.. அவர்களின் உதவியுடன் நிகிலை மருத்துவமனையில் அனுமதித்தார்.. ஆபத்தான நிலைமையில் அனுமதித்து, சிகிச்சை ஆரம்பிக்கப்பட்ட நிலையில், கொஞ்ச நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார் நிகில் கன்னா. இவ்வளவும் விசாரணையில் தெரியவந்ததுள்ளது. இப்போது,

விசாரணை: நிகிலின் பெற்றோர் போலீசில் புகார் தரவும், ரேணுகாவிடம் விசாரணை நடத்தப்பட்டு, கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.. தற்போது ரேணுகா ஜெயிலில் உள்ளார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் சொல்லும்போது, "ரேணுகா நிகிலை கடுமையாக தாக்கும்போது, போதையில் இருந்ததாக தெரிகிறது.. அதேபோல, மழுங்கிய ஆயுதத்தால் தாக்கி இருக்கவும் வாய்ப்பிருக்கிறது.. ரேணுகா ஆவேசமாக தாக்கியதில், ரத்தம் அதிகமாக வெளிவந்து, அந்த ரத்தம் அவரது சுவாசக்குழாய்க்குள் சென்றுள்ளது.. இதுதான், நிகில் கன்னா இறப்புக்கு பிரதான காரணமாகும் என்றனர்.

ரேணுகா எப்பவுமே இப்படித்தான் கோபப்படுவாராம்.. யாராக இருந்தாலும் சண்டைக்கு போய்விடுவாராம்.. தம்பதிக்குள்ளும் இத்தனை வருடமும், மோதல் போக்குதான் இருந்து வந்துள்ளது..

மகன் டிரஸ்: இந்த சம்பவம் குறித்து, நிகிலின் அப்பா சொல்லும்போது, ரேணுகா எனக்கு போன் செய்தபோது, பதறிப்போய் வீட்டுக்குள் சென்று பார்த்தேன்.. என்னுடைய மகன், டிரஸ் எதுவுமே இல்லாமல், ரத்தத்தில் விழுந்திருந்தான்.. முதலுதவி தந்தும் பிரயோஜனம் இல்லாததால், மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றேன் என்று அழுதபடியே சொல்கிறார்.

மாமனார் புஷ்பராஜ்க்கு, ரேணுகா போன் செய்து விஷயத்தை சொன்னபோது, சீக்கிரமா கிளம்பி வீட்டுக்கு வாங்க என்று கூப்பிட்டாராம்.. புஷ்பராஜூம் உடனடியாக கிளம்பி வந்து, காரை நிறுத்தியபோது, மறுபடியும் போன் செய்தாராம் ரேணுகா.. "அவசரம், சீக்கிரம்தானே வரச்சொன்னேன்" என்று சொல்லிவிட்டு போனை கட் செய்துவிட்டாராம்.

மூக்கு காயம்: ரேணுகா குரலிலிருந்த நடுக்கம் பார்த்துதான், பதறிப்போன புஷ்பராஜ், அந்த அடுக்குமாடிக் குடியிருப்பிலிருக்கும் வீட்டுக்குள் சென்றபோதுதான் விஷயம் தெரிந்திருக்கிறது. முதலில், கணவரின் முகத்தில் குத்தியதால் இந்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் என்றார்கள். ஆனால், கனமான பொருளை கொண்டு தலையில் தாக்கியதாக சொல்கிறார்கள்.. இன்னும் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

அளவுக்கு அதிகமா ஆசைப்படற ஆம்பளையும், அளவுக்கு அதிகமாக கோபப்படுற பொம்பளையும், வாழ்க்கையில நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லைன்னு சொல்வாங்களே.. ஒருவேளை அது இதுதானோ??

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+