Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"2 வயாகரா".. ஒரே நேரத்தில் மது + மாத்திரையை சாப்பிட்டு ஜாலி.. உயிரே போயிடுச்சே.. டாக்டர்கள் வார்னிங்

2 வயாகரா மாத்திரைகள் சாப்பிட்ட நபர் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை தந்து வருகிறது

Subscribe to Oneindia Tamil

மும்பை: டாக்டர்களின் அட்வைஸ் இல்லாமல், வயாக்ரா மாத்திரைகளை உட்கொள்வதால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்வது கவலையையும், அதிர்ச்சியையும் தந்து வருகிறது. இதுகுறித்து டாக்டர்கள் எச்சரிப்பது என்ன?

சில மாதங்களுக்கு முன்பு, உத்தரபிரதேச மாநிலம் பிரயக்ராஜ் என்ற பகுதியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது.. அந்த இளைஞருக்கு 28 வயதாகிறது.. கல்யாணம் ஆகி 3 மாதங்கள்தான் ஆகியிருந்தது.
ஆனால், ஆண்மை குறைபாடு இருந்ததாக உணர்ந்திருக்கிறார்.. இதனால், மனஉளைச்சலில் தவித்து, நிம்மதியில்லாமல் கஷ்டப்பட்டும் வந்துள்ளார்..

 டபுள் வயாக்ரா

டபுள் வயாக்ரா

கடைசியில் தன்னுடைய நண்பர்களின் உதவியை நாடியுள்ளார்.. அவர்களோ, வயாகரா மாத்திரைகளை எடுத்து கொள்ளுமாறு சொல்லி உள்ளனர்.. உடனே இந்த இளைஞரும் வயாகராவை வாங்கி சாப்பிட்டுள்ளார்.. தினமும் 25-30 மில்லி கிராம் வயாக்ராவை சாப்பிட்டுள்ளார்.. அதனால், எந்தவித பலனும் இல்லை என தெரிகிறது.. அதனால், மறுபடியும் நண்பர்களின் ஆலோசனையின் பேரில், வயாகரா அளவை அதிகரித்தார்.. 200 மிகி வயாகரா சாப்பிட தொடங்கினார்.. அது ஓரளவு பலனும் தந்துள்ளது.. ஆனால், தொடர்ந்து வயாகராவை சாப்பிட்டபடியே இருந்திருக்கிறார்.. இயல்பையும் தாண்டி மனைவியிடம் உறவிலும் இருந்துள்ளார்.

 ஆணுறுப்பில் வலி

ஆணுறுப்பில் வலி


நாளடைவில் அந்த இளைஞருக்கு உடல்நலக் கோளாறுகள் மெல்ல மெல்ல எட்டி பார்த்தன.. ஆனால், அப்போதும் வயாகராவை விடவில்லை.. தொடர்ந்து சாப்பிட்டார்.. திடீரென ஆணுறுப்பில் வலி ஆரம்பித்தது.. இறுதியில், விறைப்புத்தன்மையில் கொண்டு வந்துவிட்டுவிட்டது. வலியும் நிற்கவில்லை.. இதனால் பயந்து போன இளைஞர், டாக்டரிடம் ஓடினார்.. உடனடியாக ஆபரேஷனும் செய்யப்பட்டது.. ஆனால், அந்த வலியை மட்டும் குணப்படுத்த முடிந்ததே தவிர, விறைப்புத்தன்மை குறையவில்லை.. இனி எப்போதுமே குறையாதாம்.. வாழ்நாள் முழுவதும் அப்படியேதான் இருக்கும் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டனர்..

அட்வைஸ்கள்

அட்வைஸ்கள்

எனவே, விறைப்புத் தன்மை வெளியே தெரியாமல் இருக்க, இறுக்கமான துணியையும் அணிய வேண்டிய நிலைமைக்கு அந்த இளைஞர் ஆளாகி உள்ளார்.. உடல்நலக்கோளாறு என்றாலும், டாக்டரிடமும் போகாமல், சரியான அட்வைஸும் இல்லாமல், தன்னிச்சையாக வயாகராவை சாப்பிட்டு, வாழ்க்கையை தொலைத்த இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மற்றொரு பக்கம் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயமும் உயர்ந்து வருகிறது.. கடந்த மாதம் டெல்லியில், வயாகரா பயன்படுத்திய 40 வயது நபர் மாரடைப்பால் உயிரிழந்திழக்கிறார்.. இப்போதும் ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது.

 ஹோட்டல் ரூம் ஜாலி

ஹோட்டல் ரூம் ஜாலி

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரை சேர்ந்த இளைஞருக்கு 41 வயதாகிறது.. இவர் தன்னுடைய பெண் தோழியுடன் அங்கிருக்கும் ஹோட்டல் ஒன்றில் ரூம் எடுத்து தங்கியுள்ளார்.. பிறகு, ஓட்டலை விட்டு வெளியே வந்து, மதுபானம் வாங்கி கொண்டு, 2 வயாகரா மத்திரைகளையும் வாங்கி கொண்டு, மறுபடியும் ஹோட்டலுக்கு சென்றிருந்தார்.. பிறகு மது அருந்திக்கொண்டே, தான் வாங்கி வந்த 2 வயாகரா மாத்திரைகளையும் சாப்பிட்டுள்ளார்.. அதாவது, வயாக்ராபிராண்டின் சில்டெனாபில் எனப்படும் அந்த மாத்திரைகளை எடுத்துக் கொண்டுள்ளார்.. பிறகு, மறுநாள் காலை வாந்தியெடுத்துள்ளார்... தொடர்ந்து வாந்தி எடுத்துக் கொண்டேயிருக்கவும், அவரது உடல்நிலை மோசமடைந்தது.

 மோசம் மோசம்

மோசம் மோசம்

இதை அடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சைபலனின்றி அவர் இறந்துவிட்டார்.. உடனடியாக அவரது உடல் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டதில், அவரது உடலில் இருந்து டாக்டர்கள் 300 கிராம் உறைந்த இரத்தத்தையும், ஆல்கஹால் மற்றும் மருந்துகளின் கலவையையும் கண்டறிந்துள்ளனர். விடிகாலையில் வாந்தி வர துவங்கியபோதே, அந்த பெண், டாக்டரிடம் போகலாம் என்று அழைத்தாராம்.. ஆனால் இந்த நபர்தான், வேண்டாம் என்று மறுத்திருக்கிறார்.. இப்படியெல்லாம் அடிக்கடி தனக்கு வாந்தி வரும் என்று சொல்லி உள்ளார்.. நேரம் ஆக ஆக நிலைமை மோசமடையவும்தான், அந்த பெண் கட்டாயப்படுத்தி அழைத்து சென்றிருக்கிறார்.. வழியிலேயே உயிர்பிரிந்துள்ளது..

 ரத்தக்கட்டிகள்

ரத்தக்கட்டிகள்

மூளைக்கு போதிய அளவு ஆக்சிஜன் செல்லாததே உயிரிழப்புக்குக் காரணம் என்கிறார்கள் டாக்டர்கள்.. காரணம், அந்த நபருக்கு இதற்கு முன்பு எந்தவித உடல் கோளாறும் இருந்தது கிடையாது. அதோடு அவர் இதுவரை எந்த ஆபரேஷனும் செய்து கொண்டதில்லை.. ஆனால், ரத்த அழுத்தம் மட்டும் இருந்துள்ளது.. நேற்றைய தினம், ரத்தத்துடன் வயாகரா கலந்து ரத்தக்கட்டி ஏற்பட்டிருக்கிறது. ரத்தக்கட்டி காரணமாக, உடலுக்குள் ஆக்சிஜன் செல்ல முடியவில்லை. ஏற்கெனவே இருந்த அதிகப்படியான ரத்த அழுத்தமும் சேர்ந்துகொண்டதால் உயிரிழப்பு நேரிட்டுள்ளது.

 தலா 50 MG

தலா 50 MG

இதுகுறித்து டாக்டர்கள் சொல்லும்போது, "எந்தவொரு இணை நோயும் இல்லாத 41 வயது ஆண் ஒருவர், இரவில் மதுவுடன் 2 மாத்திரைகள் சில்டெனாபில் (தலா 50 மிகி) சாப்பிட்டுள்ளார்.. மறுநாள் காலையில் அவருக்கு எதிர்பாராத உடல்நிலை பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இருப்பினும், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.. மருத்துவ ஆலோசனையின்றி வயாகரா போன்ற மாத்திரைகளை எடுத்துக் கொள்ளக் கூடாது.. அது மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி உயிரிழப்பைக் கூட ஏற்படுத்தும் என்பதற்கு இதுவே உதாரணம்" என்கிறார்கள்.

2 வயாகரா

2 வயாகரா

இதனிடையே, நடந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தியிருக்கிறார்கள்.. இறந்து போன நபர் ஒரு தொழிலதிபராம்.. பெண்ணுடன் ஹோட்டல் ரூமில் தங்கியிருந்தது தெரிந்ததுமே, அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.. இருவரும் நெருக்கமாக இருந்தபோதுதான், அந்த தொழிலதிபர் 2 வயாகரா மாத்திரைகள் எடுத்துக்கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.. மேலும், 2 பேருமே ஒன்றாக தண்ணி அடித்திருக்கிறார்கள்..

டபுள் வயாகரா

டபுள் வயாகரா

இருவரும் நெருக்கமாக இருந்தபோதுதான், அவருக்கு மயக்கமும் ஏற்பட்டு சரிந்து விழுந்திருக்கிறார். இந்த விசாரணையின்போதே, போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டும் வந்துள்ளது.. அதில், மது மற்றும் வயாகரா மருந்து கலவையால் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு தொழிலதிபர் இறந்ததாகவும் உறுதியானது... இதற்கு பிறகே, அந்த பெண்ணை போலீசார் விடுதலை செய்துள்ளனர்.. அத்துடன் விசாரணையும் தொடர்ந்து நடக்கிறது.. இந்த சம்பவத்தின் பரபரப்பு இன்னும் அடங்கவில்லை என்றாலும், இதுகுறித்து மருத்துவர்கள் தந்துள்ள அட்வைஸ்களை, பலரும் சோஷியல் மீடியாவில் பொதுநலன்கருதி ஷேர் செய்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+