பிராமணர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அனுராக் காஷ்யப்! பூலே திரைப்பட சர்ச்சையில் என்ன நடந்தது?
மும்பை: ‛பூலே' திரைப்படம் தொடர்பான விவகாரத்தில் பிராமணர்கள் குறித்த அவதூறாக கமெண்ட் செய்த நடிகரும், இயக்குநருமான அனுராக் காஷ்யப் மன்னிப்பு கேட்டுள்ளார். பிராமணர்கள் குறித்து அனுராக் காஷ்யப் என்ன கூறினார்? இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம் என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
இயக்குநர் ஆனந்த் மகாதேவன் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‛பூலே'. இந்த திரைப்படம் என்பது ஜோதிபா பூலே - சாவித்ரி பூலே ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டது. இவர்கள் 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த சமூக சீர்த்திருத்தவாதிகள் ஆவார்கள். இவர்கள் ஜாதி மற்றும் பாலின பாகுபாட்டை ஒழிக்கும் நோக்கில் செயல்பட்டனர்.

இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக பிரதீக் காந்தி, காதாநாயகியாக பத்ரலேகா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ஏப்ரல் 11ம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் திரைப்படம் ரிலீசாகவில்லை.
இதற்கு திடீரென எழுந்த சர்ச்சை தான் காரணம். அதாவது இந்த திரைப்படத்தில் பிராமணர் சமுதாயத்தை தவறாக சித்தரிக்கும் காட்சி, வசனங்கள் இருப்பதாக சர்ச்சை கிளம்பியது. இந்த திரைப்படத்துக்கு அகில பாரதிய பிராமண சமாஜ் மற்றும் பரஸ்ராம் ஆர்திக் விகாஸ் மகாமண்டல் உள்ளிட்ட பல அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சென்சார் போர்டு சில காட்சி மற்றும் வசனங்களை நீக்க கூறியது. இதனால் இந்த திரைப்படம் ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் வரும் 25ம் தேதி இந்த திரைப்படம் என்பது திரைக்கு வர உள்ளது.
இதுதொடர்பாக hereotherside என்ற பெயர் கொண்ட ஒருவர் சமூக வலைதள பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்தார். அதில், ‛‛பிராமணர்கள் உங்களுக்கெல்லாம் தந்தை. அவர்களுடன் நீங்கள் எவ்வளவு மோதுகிறீர்களோ அவ்வளவு எரித்து விடுவார்கள்'' என்று கூறினார். இதற்கு இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யம், ‛‛நான் பிராமணர்கள் மீது சிறுநீர் கழிப்பேன். உனக்கு எதுவும் பிரச்சனை இருக்கா?'' என்று அதில் கமெண்ட் செய்தார். இதுதொடர்பாக ஸ்கிரீன்ஷாட் சமூக வலைதளங்களில் பரவ தொடங்கியது. அனுராக் காஷ்யப்பிற்கு எதிராக பிராமணர்கள் கோபமடைந்தனர். பிராமண சமுதாயத்தை சேர்ந்தவர்களை அவர் அவமானப்படுத்திவிட்டதாக கொதித்தனர்.
மேலும் பலரும் அனுராக் காஷ்யப் மட்டுமின்றி அவரது குடும்பத்துக்கும் மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் அனுராக் காஷ்யப் திடீரென்று மன்னிப்பு கோரியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: "இது எனது மன்னிப்பு. எனது பதிவிற்காக அல்ல. நீக்கப்பட்ட ஒருவரிக்கும், வெறுப்புணர்வை ஏற்படுத்தியதற்கும் தான். சன்ஸ்கார் ராஜாக்களிடம் இருந்து மகள், குடும்பம், நண்பர்கள், உடன் பணியாற்றுவோருக்கு பலாத்காரம் மற்றும் கொலை மிரட்டல்கள் வருகிறது.
வார்த்தைகளை சொல்லியபிறகு அதனை திரும்ப எடுக்க முடியாது. நானும் கூறிய வார்த்தைகளை திரும்ப பெறமாட்டேன். ஆனால் உங்களுக்கு அவதூறு பரப்ப வேண்டும் என்றால் நேரடியாக என்னிடம் மோதுங்கள். எனது குடும்பத்தினர் உள்பட மற்றவர்களிடம் வேண்டாம். ஏனென்றால் அவர்கள் எதையும் பேசவில்லை.
மன்னிப்பை தான் நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்றால் இதுதான் என்னுடைய மன்னிப்பு. பிராமணர்களே தயவுசெய்து பெண்களை விட்டு விடுங்கள். மனுஸ்மிருதி உள்பட அனைத்து வேதங்களும் கண்ணியத்தை கற்பிக்கின்றன. நீங்கள் உண்மையில் எந்த வகையான பிராமணர்கள் என்பதை நீங்களே முடிவு எடுத்து கொள்ளுங்கள். நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications