சைஃப் அலிகானுக்கு கத்திக்குத்து.. நடந்த நேரத்தில் கரீனா எங்கே இருந்தாங்க? தப்பியது இப்படித்தான்
மும்பை: நடிகர் சைஃப் அலிகானின் மும்பை வீட்டில் இன்று அதிகாலையில் நடந்த கொள்ளை முயற்சியில் சைஃப் அலிகான் கத்தியால் குத்தப்பட்டார். அவர் வீட்டிற்குள் புகுந்த திருடன்.. சைஃப் அலிகானை கத்தியால் குத்தி உள்ளார்.
சைஃப் தனது வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தபோது, திருடன் ஒருவர் சயீஃப் வீட்டிற்குள் புகுந்து உள்ளார். அப்போது சைஃப் வீட்டு வேலைக்கார பெண் அந்த திருடன் உடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். வெளியே போ வெளியே போ என்று கடுமையாக வாக்குவாதம் செய்துள்ளார்.

இந்த சத்தம் கேட்டு சைஃப் எழுந்து கீழே வந்துள்ளார். இதையடுத்து சைஃப் அலிகானும் அந்த திருடன் உடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு உள்ளார். திருடனை தடுக்க சைஃப் அலிகான் முயன்று உள்ளார். இந்த வாக்கு வாதம் அதன்பின் கைகலப்பாக மாறி உள்ளது. இந்த மோதலில் அந்த திருடன் சைஃப் அலிகானை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். மறைத்து வைத்திருந்த கத்தியை சுழற்றி சரமாரியாக அந்த திருடன் தாக்கி உள்ளார். 6 முறை தாக்கிவிட்டு சைஃப் அலிகான் வீட்டில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.
என்ன நடந்தது?
இந்த சம்பவம் நடந்த போது சைஃப் அலிகான் வீட்டில் அவரின் மனைவி கரீனா கபூர் தூங்கிக்கொண்டு இருந்ததாக செய்திகள் வந்தன. ஆனால் அதில் உண்மை இல்லை. கரீனா கபூர் அப்போது வீட்டிலேயே இல்லை.
இந்த சம்பவம் நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, கரீனா கபூர் தனது சகோதரி கரிஷ்மா கபூர் மற்றும் தோழிகளான சோனம் கபூர் மற்றும் ரியா கபூர் ஆகியோருடன் வேறு இடத்தில் இருந்துள்ளார். அங்கே இவர்கள் கேர்ள்ஸ் பார்ட்டி நடத்திக்கொண்டு இருந்தனர். வீட்டில் சைஃப் அலிகான் தவிர வேறு யாரும் இல்லை.
இதனால் வேறு விதமான அசம்பாவிதங்கள் எதுவும் நடக்கவில்லை. இந்த சம்பவத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான் இன்ஸ்டாகிராமில் கரீனா கபூர் தனது பார்ட்டி பற்றி போஸ்ட் செய்து இருந்தார். கரிஷ்மா கபூர், சோனம் கபூர் மற்றும் ரியா கபூர் ஆகியோருடன் சேர்ந்த எடுத்த புகைப்படத்தைப் கரீனா கபூர் பகிர்ந்து இருந்தார். கொள்ளையடிக்கப்பட்ட நேரத்தில் கரீனா வீட்டில் இருந்தாரா இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று முதலில் செய்திகள் வந்தன.
ஆனால் கரீனா கபூர் வீட்டிலேயே இல்லை என்பது உறுதியாகி உள்ளது. சைஃப் அலி கான் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற நபர், திடீரென அவரை தாக்கியுள்ளார். சைஃப் அலி கான் இப்போது மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சூழலில், அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், கரீனா கபூர் இது தொடர்பாக முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் பொறுமையாக இருக்குமாறும், யூகங்களைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.. இந்த சம்பவம் தொடர்பாக வதந்திகளை தவிர்க்குமாறும் கரீனா கபூர் தனது போஸ்டில் குறிப்பிட்டு உள்ளார். இதுவரை வெளியான தகவலின் படி சைஃப் அலி கானுக்கு நேர்ந்த காயத்தில் 2 காயங்கள் தீவிரமானது ஆழமானது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா?












Click it and Unblock the Notifications