நீடா அம்பானியின் உலகின் விலை உயர்ந்த புடவை.. காஞ்சிபுரத்தில் நெய்ததாமே! யார் நெசவு செய்தது தெரியுமா?
மும்பை: அடேங்கப்பா! இந்திய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி வைத்திருக்கும் புடவைகளின் விலைகளை கேட்டால் தலையே சுற்றுகிறது!
மும்பை அண்டீலியா எனும் பிரம்மாண்ட வீட்டில் முகேஷ் அம்பானி தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த கட்டடம் உலகின் மிக விலை உயர்ந்த கட்டடமாக கருதப்படுகிறது. இந்த வீட்டை பராமரிக்க மட்டும் 600 ஊழியர்கள் பணியாற்றுகிறார்களாம். அவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி வருகிறார்கள்.

27 மாடிகளை கொண்ட 570 அடி கட்டடம் மும்பையில் கம்பீரமாக காட்சியளிக்கிறது. 2006 ஆம் ஆண்டு கட்டடப்பணிகள் தொடங்கப்பட்டு 2010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. நீடா அம்பானி மற்றும் அம்பானி குடும்பத்தினர் குறித்த தகவல்கள் அவர்கள் அணியும் உடைகள், நகைகள் குறித்தெல்லாம் மக்கள் ஆர்வத்துடன் படிப்பது வழக்கம்.
இந்திய பணக்காரர்களில் ஒருவரின் மனைவியாச்சே நீடா! அவர் அணியும் அத்தனை உடைகளும் நகைகளும் வைத்திருக்கும் அத்தனை பொருட்களும் சும்மா ஆயிரக்கணக்கு விலை கொண்டவை அல்ல. அவர் எல்லாம் லட்சம், கோடிகளை கொண்டது. அம்பானி வீட்டு விழா என்றாலே அனைவரும் நீடா அம்பானி எத்தனை கோடி, எத்தனை லட்சத்தில் புடவை அணிகிறார் என அறிந்து கொள்வதில் ஒரு ஆசை இருக்கிறது.
நீடா அம்பானி உலகின் மிக விலையுயர்ந்த புடவையை அணிந்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் கூட இடம்பெற்றிருக்கிறார். அவர் அணியும் லெஹெங்காக்கள், புடவைகளுக்கு பொருத்தமாக அவர் அணியும் ஜாக்கெட்டுகள் தனித்துவமானவை. தங்க ஜரிகை, விலை உயர்ந்த ஓவியங்கள், விலை உயர்ந்த வைரம், மரகதம் உள்ளிட்ட கற்கள் பதிக்கப்பட்டிருக்கும்.

ஆரஞ்ச் நிறத்தில் ஜர்தோஷி வேலைப்பாடுகள் செய்யப்பட்ட லெஹங்கா லட்சக்கணக்கான மதிப்பு கொண்டவை. இந்த ஆடையை அணிந்து கொண்டு நீடா பாலிவுட் நடிகைகளை விட கொள்ளை அழகில் காட்சியளித்தார். இது போல் அவரிடம் விலை மதிப்புள்ள லெஹெங்கா, புடவைகள் ஏராளம் உள்ளது. நீடா அம்பானி அணிந்திருக்கும் புடவை, பிளவுஸை பார்த்து டயமண்ட் கற்களை பதிக்காவிட்டாலும் அவரை போல் உடை அணிய பலர் விரும்புகிறார்கள். அந்த உடைகளில் விலைமதிப்புள்ள ஓவியங்கள் இருப்பதால் அது அவருக்கு ராயல் லுக்கை தருகிறது.
40 லட்சம் ரூபாய் மதிப்பில் நீடா அம்பானி வைத்திருக்கும் புடவைதான் தலைப்புச் செய்தியானது. பார்க்க சாதாரணமாக தெரியும் இந்த புடவையை சென்னை சில்க்ஸ் இயக்குநர் சிவலிங்கம் வடிவமைத்துள்ளார். காஞ்சி பட்டு, மெல்லிய தங்க ஜரிகைகள் இந்த சேலையில் பயன்படுத்தப்பட்டன. எமரால்டு, ரூபி, புஷ்பராகம், முத்து ஆகிய கற்கள் பதித்து இந்த புடவை அமைந்திருந்தது. காஞ்சிபுரத்தை சேர்ந்த 36 கைவினைஞர்கள் இணைந்து இந்த புடவையை நெய்தனர். இந்த புடவையை நெய்து முடிக்க ஓராண்டு ஆனது.
மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்த விழாவில் நீடா அம்பானி சிவப்பு மெரூன் நிறத்தில் லெஹெங்கா அணிந்திருந்தார். அது ஆடை வடிவமைப்பாளர் அபு ஜனி சந்தீப் கோஸ்லாவால் டிசைன் செய்யப்பட்டது. அந்த உடையை அவர் குஜராத் ஸ்டைலில் அணிந்திருந்தார். 5 அடுக்குகள் கொண்ட குந்தன் முத்து கற்கள் பதித்த நகையை அவர் அணிந்திருந்தார். இந்த லெஹெங்காவும் பல லட்சங்களாகும். இந்த உடையில் அவர் நடனமும் ஆடியிருந்தார். அவர் ஒரு பரதநாட்டிய கலைஞர் என்பது உங்களில் பலருக்கு தெரியாது.

மகன் ஆகாஷ் திருமணத்தின் போது நீடா அம்பானி சப்யாசாச்சி முகர்ஜி வடிவமைத்து கொடுத்த பிங்க் நிற லெஹெங்கா அணிந்திருந்தார். அதில் பல்வேறு நிறங்கள் கொண்ட ஜாக்கெட்டை அணிந்திருந்தார், அதில் சுபாரம்பம், ஆகாஷ்- ஸ்லோகா என பொறிக்கப்பட்டிருந்தது. லெஹெங்காவின் பார்டரில் விலங்குகளின் ஓவியங்கள் இருந்தன. இந்த உடைக்கு அவர் வைரம் மற்றும் எமரால்டு நகை அணிந்திருந்தார்.
அது போல் தனது மகள் இஷா அம்பானியின் திருமணத்தின் போது ஆடை வடிவமைப்பாளர் சாப்யாசாச்தி முகர்ஜி வடிவமைத்து கொடுத்த ஆடையை அணிந்திருந்தார். ஜர்தோஷி வேலைப்பாடுகள் கொண்ட சில்வர் சல்மா மற்றும் சிதாரா தப்கா வேலைகளும் இருந்தன. அது ஒரு வெல்வெட் லெஹெங்கா. அதில் பர்பிள் மற்றும் ப்ளூ நிறங்கள் இருந்தன. நீடாவின் ஒவ்வொரு உடைக்கும் ஒவ்வொரு சிறப்புகள் இருக்கும்.












Click it and Unblock the Notifications