விமானத்தில் சும்மா இல்லாத வாய்.. பாத்ரூமிலும் பெண் இம்சை.. காத்திருந்து கணக்கு தீர்த்த பணிப்பெண்கள்
மும்பை: விமானத்தில் போகும் போது அமைதியாக போக வேண்டும்.. தேவையின்றி சத்தம் போட்டாலா அல்லது ரகளை செய்தாலோ சும்மாவிடமாட்டார்கள்.. அப்படி அசிங்கமாக பேசி ரகளையில் ஈடுபட்ட பெண்ணுக்கு மும்பை விமான நிலையத்தில் என்னாச்சு தெரியுமா? இதை பாருங்கள்.
விமானத்தில் பயணிக்கும் போது, மிகவும் அமைதியாக செல்வது நல்லது. சிலர் பேருந்தில் போவது போன்று விமானத்தில் சிகரெட் பிடிப்பது, சரக்கு அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.. சிலர் இருக்கை சரியில்லை என்று கூறி சண்டை போடுவார்கள்.. சிலர் உணவு சரியில்லை என்று கூறி சண்டை போடுவார்கள்.

சிலர் தேவையின்றி பக்கத்தில் அமர்ந்திருக்கும் பயணிகளுடன் வம்பிழுத்து சண்டையும் போடுவார்கள்.. விமானத்தில் செல்லும் போது, அசவுகரியங்களை சுட்டிக்காட்டலாம் . அதில் எந்த தவறும் இல்லை. அதற்கு தீர்வுகளை விமானப் பணிப்பெண்கள் கண்டிப்பாக நிறைவேற்றுவார்கள். அதேநேரம் சில நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளை கூறி சண்டை போடுவதோ அல்லது விமானத்தில் ஏறியது முதல் இறங்கும் வரை கெட்ட கெட்ட வார்த்தைகளால் பேசியபடி ரகளையில் ஈடுபடுவதோ கண்டிப்பாக சிக்கலை உண்டாக்கும்.
விமானத்தில் சச்சரவில் ஈடுபடும் பயணிகள் மீது வழக்கு போடப்படும். சிலருக்கு விமானத்தில் பயணிக்க தடை கூட விதிக்கப்படும். ரொம்பவும் ஓவராக போனால் கைது நடவடிக்கையும் எடுப்பார்கள்.. மும்பை வந்த விமானத்தில் பெண் ஒருவர் ரகளையில் ஈடுபட்டதால் இப்போது சிக்கலில் சிக்கியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து மும்பைக்கு அண்மையில் இண்டிகோ விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. விமானம் வாரணாசியில் இருந்து 29 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட விமானத்தில் மொத்தம் 175 பயணிகள் இருந்தனர். இதில் பெண் பயணி ஒருவர் தனது இருக்கையை மாற்ற வேண்டும் என விமான பணிப்பெண்களிடம் கூறியுள்ளார். அவர் கேட்டபடியே விமான பணிப்பெண்கள் அவருக்கு 15-வது எண் இருக்கையை மாற்றி கொடுத்தனர். எனினும் அவர் அந்த இருக்கையையும் வேண்டாம் என்று கூறி ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
அந்த பெண் கோபத்தில் கத்திக்கொண்டே விமான கழிவறை பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு விமான பணிப்பெண்களை தகாத வார்த்தைகளால் திட்டி தீர்த்துள்ளார். ஆரம்பத்தில் அவரை விமானப் பணிப்பெண்கள் கண்டு கொள்ளாமல் இருந்தனர். எனினும் தொடர்ந்து அவர் விமான பணிபெண்களை சத்தமாக திட்டிக்கொண்டே மும்பை வரும் வரை ரகளையில் ஈடுபட்டார்.
இதையடுத்து விமானம் மும்பை வரும் வரை அமைதியாக இருந்த பணிப்பெண்கள், அந்த பெண் பயணியை போலீசில் ஒப்படைத்தனர். விமான நிலைய போலீசார் புகார் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து போலீசார், விமானத்தில் ரகளையில் ஈடுபட்ட பெண் பயணி மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications