மிதக்கும் மும்பை.. கொட்டி தீர்த்த கனமழை.. சுவர் இடிந்து விழுந்ததில் 30 பேர் பரிதாப பலி..!
மும்பையில் கனமழைக்கு 30 பேர் பலியாகி உள்ளனர்
மும்பை: மும்பையில் கனமழை காரணமாக 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.. பலத்த மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவால் வீடு, சுற்றுச்சுவர்கள் இடிந்து விழுந்ததில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
Recommended Video
தற்போது கடந்த சில தினங்களாகவே மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது... குறிப்பாக இந்த 2 நாட்களாக, தொடர்ந்து விடாமல் மழை பெய்து கொண்டே இருக்கிறது..
இதனால் மும்பை நகரமே நீரில் தத்தளித்து கிடக்கிறது.. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாய் உள்ளது... இதனால் ரயில் உட்பட அனைத்து போக்குவரத்துகளுமே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து
பெரும்பாலான தண்டவாளங்கள் நீரில் மூழ்கியதால் நீண்ட தூர ரயில்கள் பல ரத்து செய்யப்பட்டுவிட்டன.. மழை வெள்ளத்தால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது... அதிலும் நேற்று முன்தினம் நள்ளிரவு, மும்பை செம்பூர் மகுல் பகுதியில் உள்ள பாரதி நகரில் சுற்றுச்சுவர் ஒன்று மண் சரிவால் இடிந்து வீடுகளின் மீது விழுந்ததில், அடுத்தடுத்து இருந்த வீடுகளும் நொறுங்கி விழுந்தன.

உயிரிழப்புகள்
இதில் 19 பேர் அங்கேயே இறந்தனர்.. காயம் அடைந்த 7 பேர் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதுபோல், விக்ரோலி புறநகர் பகுதியிலும் நேற்று மண்சரிவால் 6 குடிசை வீடுகள் இடிந்து விழுந்ததில் 10 பேர் உடல்நசுங்கி உயிரிழந்தனர்.. காயம் அடைந்த 2 பேர் சிகிச்சையில் சேர்க்கப்பட்டனர்... பாண்டூப்பில் உள்ள வனத்துறை அலுவலக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 16 வயது சிறுவன் உயிரிழிந்தான்.

நிவாரணம்
இறந்தவர்களின் குடும்பத்துக்கு, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். இதுபோல், விக்ரோலி, செம்பூர் பகுதியில் நடந்த விபத்துகளில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 பிரதமர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

பாதிப்பு
மும்பையில் பெய்த மழை காரணமாக பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்திருந்தது... நீரேற்று நிலையங்கள் மூழ்கி மோட்டார்கள் பழுதடைந்ததால் நகரின் பல பகுதிகளில் குடிநீர் வினியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications