Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பிரபல நடிகைகள்" விபச்சாரம்.. கஸ்டமர் போல நுழைந்த போலீஸ்.. கடைசியில் இப்படி அசிங்கப்பட்டுட்டாங்களே

Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலியல் தொழிலில் ஈடுபட்ட பிரபல ஹீரோயின்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாலியல் தொழிலை சட்டரீதியாக அங்கீகரிக்க வேண்டும், பாலியல் தொழிலுக்கு வாடிக்கையாளர்களை அழைப்பதை குற்றமாக்கும் சட்டத்தை நீக்க வேண்டும், இந்த தொழிலை முறைப்படுத்த வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை பாலியல் தொழிலாளர்கள் பல காலமாகவே முன்வைத்து வருகின்றனர்.

அதேசமயம், விபச்சார தொழிலையும் கைவிடாமல் காசு பார்த்து வருகின்றனர்.. சட்டவிரோதமாக இதுபோன்று செயல்படுவோரை கண்டறிந்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளிலும் போலீசார் இறங்கி வருகிறார்கள்.. ஆடம்பர வாழ்க்கை, கையில் நிறைய காசு, போன்றவைகளுக்கு ஆசைப்பட்டு இளம்வயதிலேயே வாழ்க்கையை தொலைக்கும் இளம்பெண்களும் ஏராளம்..

Famous two actress and agent arrested in prostitution case in Pune 5 star hotel

தமிழ் நடிகைகள்: சிலர், இதெல்லாம் தெரிந்தும்கூட, இந்த தொழிலை செய்ய முன்வருகின்றனர்... அப்படித்தான் மும்பையில் ஒரு பங்களாவில் பாலியல் தொழில் நடப்பதாக சில மாதங்களுக்கு முன்பு ஒரு செய்தி வெளியானது.. உடனே போலீசாரும் மறைந்திருந்து சம்பந்தப்பட்ட பங்களாவை கண்காணித்தனர்.. அந்த பங்களாவுக்குள் சிலர், பதுங்கி பதுங்கி செல்வதையும் பார்த்தனர்.. அங்கு விபச்சாரம் நடைபெறுவதை உறுதி செய்ததுடன், திடீரென அந்த பங்களாவுக்குள் உள்ளே நுழைந்து ரெய்டு நடத்தினர்..

அதில், 2 பெண்கள் உள்ளிட்ட மொத்தம் 5 பேர் சிக்கினர்.. அதில் 2 பெண்கள் நடிகைகளாம்.. அதுவும் தமிழ் நடிகைகள்.. அதுவும் ஒருகாலத்தில் புகழ்பெற்ற ஹீரோயின்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.. தமிழ்தவிர, சில இந்திப்படங்களிலும் 2 பேரும் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளார்களாம்.. இவர்களுக்கு தற்சமயம் மார்க்கெட் இல்லை என்பதாலும், கைவசம் படம் இல்லை என்பதாலும், காசு இல்லாமல் குடும்பத்தை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதால் விபச்சாரத்திற்கு வந்துவிட்டதாக 2 பேரும் போலீசில் அழுது புலம்பி உள்ளனர்..

யார் அந்த நடிகை: எனினும், அந்த நடிகைகள் மீது வழக்கு மட்டும் பதிவு செய்துள்ள போலீசார், அவர்களது பெயரை வெளியிட போலீசார் அப்போது மறுத்துவிட்டனர்.. ஆனாலும், இந்த செய்தி அப்போது பரபரப்பாக மீடியாவில் பேசப்பட்டது.. கடந்த மாதம்கூட, விபச்சார புகாரில், புகழ்பெற்ற ஒரு போஜ்புரி நடிகை சிக்கினார். அந்த நடிகை பெயர் சுமன் குமாரி.. மும்பையின் ஆரே காலனி பகுதியில் உள்ளது ராயல் பாம் என்ற ஹோட்டலில், பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைக்கவும் அங்கு விரைந்து சென்றபோதுதான், நடிகை கையும் களவுமாக சிக்கினார்.

கடந்த 6 ஆண்டுகளாக மும்பையில் வசித்து வந்த சுமன் குமாரி, பாலியல் தொழில் புரோக்கராக பலகாலமாகவே செயல்பட்டு வந்துள்ளார்.. ஆனால் நடிகை சிக்காமல் தப்பியபடியே இருந்திருக்கிறார்.. சம்பவத்தன்று, அவரை சிக்கவைக்க போலீசாரே பிளான் செய்து, போலி கஸ்டமர்கள் ஓட்டலுக்கு அனுப்பிவைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு மாடலுக்கும் 50,000 முதல் 80,000 ரூபாய் வரை ரேட் பேசியிருக்கிறார்கள்.. அதற்கான பணத்தையும் நடிகை பெற்றுக்கொள்ளும்போதுதான், நடிகை கையும், களவுமாக பிடிபட்டார்.

வறுமையின் பிடியில் பெண்கள்: மாடல் அழகிகளில் வறுமையில் உள்ளவர்கள், திடீர் பண பிரச்சனையில் அவதிப்படுபவர்கள் யார் என்பதை அறிந்து, அவர்களுக்கு குறி வைப்பாராம் நடிகை.. அதற்கு பிறகு, இந்த தவறான தொழிலில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தி விடுவாராம். நிறைய படங்களில் நடித்து கொண்டே பணத்தை குவித்து வரும் நடிகை, இந்த தொழிலும் நிறைய காசு பார்த்துள்ளார்.. இவருக்கு வயது 24..!!

இப்போதும் அதுபோலவே நடிகைகள் 2 பேர் சிக்கி உள்ளனர்.. புனேவில் உள்ள வகாட் மாவட்டத்தில் உள்ள 5 ஸ்டார் ஓட்டலில் ஹீரோயின்களை வைத்து விபச்சார தொழில் நடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கிடைத்த தகவலையடுத்து அங்கு தீவிர கண்காணிப்பை மேற்கொண்டனர்.

கஸ்டமர்கள்: அதற்கேற்றவாறு, அந்த ஹோட்டலில் சிலரின் நடமாட்டம் சந்தேகத்தை ஏற்படுத்தியது.. எனினும், ஹோட்டலுக்குள் நுழைந்தால், அவர்கள் தப்பிவிடக்கூடும் என்பதால், அவர்களை கையும் களவுமாக சிக்க பிளான் போட்டனர்.. அதன்படி, போலீசாரே, கஸ்டமர்போல ஆன்லைனில் புரோக்கரை அஅணுகினர். அப்போது அந்த புரோக்கர் 5 நட்சத்திர ஹோட்டல் ரூமில், முன்பதிவு செய்யுமாறு தெரிவித்தார்.. அவர் சொன்னபடியே, போலீசாரும் ரூம் புக்கிங் செய்தனர்..

அதற்கு பிறகு, அந்த புரோக்கர், போஜ்புரி நடிகைகள் மற்றும் அவரது கட்டுப்பாட்டில் இருந்த பெண்களின் போட்டோக்களை அனுப்பினர். அந்த பெண்களுடன் உல்லாசமாக இருக்க இரவு என்றால் ரூ.25,000, பகல் என்றால் ரூ.15,000 என புரோக்கர் பேரம் பேசியதாக தெரிகிறது. இதையடுத்து ஹோட்டலில் விபச்சாரம் நடப்பதை உறுதி செய்த போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்து ரெய்டு நடத்தினர்.

யார் அந்த நடிகைகள்: அப்போதுதான், 2 நடிகைகள் சிக்கினார்கள். புரோக்கரும் கைதானார்.. அப்பாவி பெண்கள் சிலர் மீட்கப்பட்டு, பெண்கள் நல விடுதியில் தங்கவைக்கப்பட்டனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விபச்சாரம் செய்த இரண்டு நடிகைகளையும் புரோக்கரையும் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 ஹீரோயின்களையும் போலீசார் கைது செய்தாலும், அவர்களது பெயர்களை வெளியிட போலீசார் மறுத்துவிட்டனர். விபச்சாரத்தில் சிக்கிய 2 ஹீரோயின்களும், போஜ்புரி படங்களில் நடித்து புகழின் உச்சியில் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

யார் அந்த தலைகள்: இதனிடையே, சம்பந்தப்பட்ட நடிகைகளில் ஒருவர், வறுமை காரணமாக இந்த தொழிலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.. இவர்களுக்கு பின்னால் யார் யார் இருக்கிறார்கள் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். காரணம், சில மாடல் அழகிகளை இவர்களே இந்த தொழிலில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தியதுடன், பணம் நிறைய சம்பாதித்துள்ளனர்.. அப்படியிருந்தும், வறுமையின் பிடியில் நடிகை உள்ளதாக சொல்வதால், பின்னணியில் முக்கிய தலைவர்கள் அல்லது கேங் லீடர் யாராவது மூளையாக செயல்படுகிறார்களா? என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+