வாயை விட்ட கம்பீர்.. மோடியுடன் ஒப்பிட்டு காங்., எம்பி சசிதரூருக்கு சொன்ன பதிலை பாருங்க.. கொந்தளிக்கும் ரசிகர்கள்
மும்பை: நேற்று நடந்த டி20 போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியை நேரில் பார்த்த காங்கிரஸ் எம்பி சசிதரூர், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரை நேரில் சந்தித்தார். இதுதொடர்பான போட்டோவை பகிர்ந்த சசிதரூர், ‛‛பிரதமர் மோடிக்கு பிறகு இந்தியாவில் கடினமாக உழைக்கும் நபர் கவுதம் கம்பீர்'' என்று புகழ்ந்திருந்தார். இதற்கு கவுதம் கம்பீர் அளித்த பதிலால் ரசிகர்கள் கொந்தளித்து விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி நேற்று மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 238 ரன்களை குவித்தது.

அதன்பிறகு இரண்டாவது ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் தொடக்க வீரர் அபிசேக் சர்மா 35 பந்தில் 84 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டநாயகன் விருது வென்றார்.
இந்த போட்டியை காங்கிரஸ் கட்சியின் எம்பியான சசிதரூர் கிரிக்கெட் மைதானம் சென்று பார்த்தார். முன்னதாக அவர் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரும், முன்னாள் எம்பியுமான கவுதம் கம்பீரை சந்தித்து பேசினார். அப்போது இருவரும் சேர்ந்து போட்டோ எடுத்து கொண்டனர். இந்த போட்டோவை காங்கிரஸ் கட்சியின் எம்பி சசிதரூர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.
அதில், ‛‛நாக்பூரில் எனது பழைய நண்பர் கவுதம் கம்பீரை சந்தித்தேன். இந்த வேளையில் நல்ல அதேவேளையில் நேர்மறையாக உரையாடி மகிழ்ந்தோம். பிரதமர் மோடிக்கு பிறகு கவுதம் கம்பீர் கடினமான பணியை இந்தியாவில் செய்து வருகிறார்.
தினமும் லட்சக்கணக்கான மக்களால் அவர் விமர்சிக்கப்பட்டாலும் அவர் அமைதியாக , அஞ்சாமல் தனது பணியை தொடர்கிறார். அவரது அமைதி குணத்துக்கும், உறுதிக்கும், திறமையான தலைமைத்துவத்திற்கும் எனது பாராட்டுகள். இன்று முதல் அவருக்கு அனைத்து வெற்றிகளும் கிடைக்க வாழ்த்துகிறேன்'' என்று கூறியிருந்தார்.
Thanks a lot Dr @ShashiTharoor! When the dust settles, truth & logic about a coach’s supposedly “unlimited authority” will become clear. Till then I’m amused at being pitted against my own who are the very best! https://t.co/SDNzLt73v5
— Gautam Gambhir (@GautamGambhir) January 21, 2026
இதற்கு கவுதம் கம்பீர் பதிலளித்து இருந்தார். இதுபற்றி அவர், ‛‛நன்றி சசிதரூர். காற்றில் எழுந்த புழுதி அடங்குவது போல்.. ஒரு பயிற்சியாளரின் வரம்பற்ற அதிகாரம் என்று கூறப்படுவதன் பின்னணியில் உள்ள உண்மையும், தர்க்க ரீதியான வாதமும் காலப்போக்கில் தெளிவாகும். அதுவரை, எனக்கு எதிரான விமர்சனங்களை நான் வேடிக்கையாக பார்க்கிறேன்'' என்று கூறியுள்ளார்.
அதாவது அணியின் தேர்வு அல்லது முக்கிய செயல்பாடு உள்ளிட்டவற்றில் தனக்கு முழுமையான அதிகாரம் இல்லாத நிலையில், அணியின் தோல்விகளுக்கு மட்டுமே தன்னை காரணம் கூறுவதாக கவுதம் கம்பீர் மறைமுகமாக கூறியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது கம்பீர் இந்திய தேர்வு குழு மீது பழிபோடும் வகையில் இந்த பதிவை செய்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
ஏற்கனவே கவுதம் கம்பீர் தொடர்ந்து ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறார். அவரது அணி தேர்வு பற்றி ஏராளமான ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர். இப்படியான சூழலில் தான் என் சொந்த அணிக்கு எதிராக என்னை நிறுத்தி விமர்சிப்பதை வேடிக்கையாக பார்க்கிறேன் என்று கவுதம் கம்பீர் கூறியுள்ளார். இதனால் கோபமான ரசிகர்கள் கவுதம் கம்பீரை மீண்டும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணியை பொறுத்தவரை கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக வந்த பிறகு 3 வகையான கிரிக்கெட் போட்டியிலும் பல்வேறு மாற்றங்களை கொண்டுள்ளது. ரோகித் சர்மா ஓய்வை தொடர்ந்து டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டார்.
அதேபோல் ரவிச்சந்திரன் அஸ்வின், விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்டவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தனர். மேலும் டி20 உலககோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இருந்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டனான சுப்மன் கில் நீக்கப்பட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி ஒவ்வொரு தொடருக்கும் புதுபுது வீரர்கள் சேர்க்கப்படுகின்றனர். இதனால் இந்திய கிரிக்கெட் அணி இப்படி தான் இருக்கும் என்று கணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் கவுதம் கம்பீரை தொடர்ந்து ரசிகர்கள் விமர்சனம் செய்து வரும் நிலையில் தான் அவரது இந்த பதிவு தேர்வுக்குழுவை கைக்காட்டும் வகையில் உள்ளதாக ரசிகர்கள் சாடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications