பெண்ணில் கருவுக்குள் துடித்த கரு.. ஸ்கேனை பார்த்து அதிர்ந்து போன மருத்துவர்கள்! 5 லட்சத்தில் அதிசயம்
மும்பை: மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் 32 வயது கர்ப்பிணிப் பெண் கருவுற்றிருந்த நிலையில், அவரது வயிற்றில் இருந்த கருவுக்குள் மற்றொரு கரு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது தாயும், கருவும் நலமாக இருக்கும் நிலையில், 5 லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே இப்படி நிகழும் என்றும், உலகம் முழுவதும் 200 கேஸ்கள் மட்டுமே பதிவாகியுள்ளது என்கின்றனர் மகப்பேறியல் நிபுணர்கள்.
மகாராஷ்டிரா மாநிலம் சுல்தானா மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயதான பெண் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருத்தரித்திருக்கிறார். தற்போது 35 வார கர்ப்பிணியாக இருக்கும் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு சென்று இருக்கிறார்.

புல்தானா மாவட்ட அரசு மகளிர் மருத்துவமனையில் அவருக்கு சோனோகிராஃபி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்போது மிகவும் அரிய வகை கரு குறைபாடான கருவுக்குள் கரு இருப்பது தெரிய வந்திருக்கிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ நிபுணான டாக்டர் பிரசாத் அகர்வால் உடனடியாக தீவிரமாக ஆய்வு செய்து அந்த பெண்ணை பாதுகாப்பான பிரசவத்திற்காக அருகே இருக்கும் சதிரபதி சாம்பாஜி நகர் மருத்துவமனைக்கு பரிந்துரைத்துள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள அவர்," கருவில் கரு என்பது அரிதான நிகழ்வுகளில் ஒன்றாகும். 5 லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே இது போன்ற பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
உலகம் முழுவதிலும் இதுபோன்ற சுமார் 200 வழக்குகள் மட்டுமே பதிவாகி இருக்கிறது. அதுவும் பிரசவத்திற்கு பிறகு தான் இந்த பிரச்சினை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை 10 முதல் 15 வழக்குகள் மட்டுமே இவ்வாறாக பதிவாகி இருக்கிறது என்கிறார். மேலும் 35 வாரங்கள் வரை அந்த பெண்ணின் வயிற்றில் கரு வளர்ந்திருந்த நிலையில் அந்த கருவின் கருவுக்குள் எலும்புகள் மற்றும் கரு போன்ற அமைப்பு இருப்பதை நான் கவனித்தேன். அதிர்ஷ்டவசமாக இதுகுறித்து ஆராய்ந்ததில் அது சாதாரண விஷயம் அல்ல என தோன்றியது. இதை எடுத்து உடனடியாக ஆய்வு செய்தபோது தான் கருவில் கரு இருப்பது தெரிய வந்தது. பிற மருத்துவர்களிடம் செகண்ட் ஒபீனியன் கேட்டு உறுதி செய்துள்ளோம்" என்றார்.
கருவுக்குள் கரு வளர்வது ஆங்கிலத்தில் என fetus-in-fetu அழைக்கப்படுகிறது பொதுவாக கருப்பைக்குள் வளரும் கருவானது தொப்புள் கொடி மூலம் கருப்பை சுவற்றுடனும், கருவோடும் இணைக்கப்பட்டிருக்கும். ஆனால் சில சமயங்களில் கருமுட்டைக்குள் சென்ற விந்தணுக்கள் ஒன்று போதிய அளவு செயல்படாமல் இருக்கும்போது ஒரு கரு நன்றாக வளர்ந்து விடும். பிறகு அரைகுறை வளர்ச்சியுடன் இருக்கும் விந்தணு கருவாக உருவாகிறது.
இது குழந்தையின் குடல் பகுதியில் இருந்து தொப்புள்கொடி மூலம் இரத்த ஓட்டத்தை பெறுகிறது. முழுமையாக இல்லாவிடினும் சிறிதளவிலான வளர்ச்சி ஏற்கனவே கருவில் இருக்கும் குழந்தையின் உறுப்புகளை சிதைக்க வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக லேப்ரோஸ்கோபி உதவியுடன் நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் அந்த சிசுவை வெளியே எடுக்கலாம். இது போன்ற குறைபாடுகள் 1800 காலகட்டத்திலேயே பிரிட்டிஷ் மருத்துவ கவுன்சிலால் கண்டறியப்பட்டு இருக்கிறது. இந்தியா, இந்தோனேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இது போன்ற சம்பவங்கள் 15-க்கும் மேற்பட்ட முறை கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications