கும்பமேளா பிரவுன் பியூட்டி மோனலிசாவுக்கு வாய்ப்பு தருவதாக கூறிய இயக்குநர் கைது! வழக்கில் ட்விஸ்ட்
மும்பை: உத்தரப்பிரதேச மாநிலம் பிரக்யராஜில் நடந்த மகா கும்பமேளாவில் மாலை விற்று பிரபலம் அடைந்த மோனலிசாவிற்கு நடிப்பதற்கு வாய்ப்பு கொடுப்பதாக கூறிய பாலிவுட் இயக்குநர் பாலியல் வன்கொடுமை புகாரில் கைது செய்யப்பட்டார்.
உத்தரப்பிரதேச மாநிலம், பிரயக்ராஜ் நகரில் கடந்த ஜனவரி மாதம் 13 ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி வரை 45 நாட்களுக்கு மகா கும்பமேளா நடந்தது. இங்கு கோடிக்கணக்கானோர் வந்து கும்பமேளாவில் நீராடி விட்டு சென்றனர்.

அங்கு நிறைய புதுமையான விஷயங்கள் வைரலாகின. அந்த வகையில் ருத்ராட்ச மாலை விற்பனை செய்தச மோனலிசா போஸ்லே பார்ப்பதற்கு சினிமா நடிகை போல் இருந்ததால் அவர் பிரபலம் அடைந்தார். கருப்பாக இருந்தாலும் அவரை பிரவுன் பியூட்டி என பலர் அழைத்தனர்.
தமிழகத்தில் நரிக்குறவர் இனத்தை போல் உத்தரப்பிரதேசத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர். இவர் வைரலான நிலையில் இவருடன் செல்பி எடுக்க நிறைய பேர் அவரை தேடி சென்றனர். மேலும் சிலர் செல்பி எடுக்கும் போது அத்துமீறலிலும் ஈடுபட்டதாக சொல்லப்பட்டது.
இதனால் அவர் கும்பமேளாவைவிட்டு ஓட்டம் பிடித்தார். இந்த நிலையில் தற்போது யூடியூப் சேனலை சொந்தமாக தொடங்கியுள்ள மோனலிசா, அதில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இதையடுத்து இவருக்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தன.
சனோஜ் மிஸ்ரா (45) என்ற இயக்குநர், மோனலிசாவுக்கு நடிகை வாய்ப்பு கொடுப்பதாக கூறியிருந்தார். எனவே விரைவில் அந்த பெண்ணை பெரிய திரையில் பார்க்கலாம் என ஆர்வமாக இருந்த அவருடைய ரசிகர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
அதாவது மோனலிசாவுக்கு வாய்ப்பு கொடுப்பதாக கூறியிருந்த சனோஜ் மிஸ்ரா, பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டார். அதாவது மும்பையில் நடிக்க வாய்ப்பு கேட்டு வந்த 28 வயது பெண்ணை நடிக்க வாய்ப்பு கொடுப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது.
அத்துடன் திருமணம் செய்து கொள்வதாக கூறி கடந்த 4 ஆண்டுகளாக அந்த பெண்ணுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும் அந்த பெண் புகாரில் தெரிவித்தார். இதனால் அந்த பெண்ணுக்கு பல முறை கருக்கலைப்பு செய்ய சனோஜ் வற்புறுத்தினாராம். ஆனாலும் தன்னை திருமணம் செய்ய மறுத்துவிட்டார் என அந்த பெண் தெரிவித்தார். இதையடுத்து மிஸ்ரா மீது டெல்லி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். தனக்கு அவர் கருக்கலைப்பு செய்ததற்கான ஆதாரங்களையும் அந்த பெண் சமர்ப்பித்துள்ளார்.
இந்த நிலையில் மிஸ்ராவை கைது செய்ய அவரை போலீஸார் தேடி வந்த நிலையில் அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து மிஸ்ராவின் செல்போன் சிக்னல் மூலம் அவரை கண்காணித்த டெல்லி போலீஸார் அவரை உ.பி. மாநிலம் காஜியாபாத்தில் வைத்து கைது செய்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக தான் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்படவில்லை என இளம்பெண் தெரிவித்துள்ளார். மிஸ்ராவுடன் வாக்குவாதத்தில் மட்டுமே ஈடுபட்டதாக தெரிவித்திருந்தார. இது பரபரப்பை ஏற்படுத்தியது.
-
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
சிதம்பரத்தில் ஷாக்! உல்லாசத்திற்கு வர மறுத்த இளம்பெண்ணை கொன்ற முதியவர் கைது! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி'












Click it and Unblock the Notifications