தப்பி தவறியும் விமானத்தில் எடுத்து செல்ல கூடாத பொருட்கள்! லிஸ்ட் பெருசு.. கட்டுப்பாடு ஏன் தெரியுமா?
மும்பை: நமது நாட்டில் விமானங்களில் செல்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பல பயணிகள் விமானத்தில் செல்லும் போது சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். விமான போக்குவரத்திற்கான விதிகளை இவர்கள் சரியாகத் தெரிந்து கொள்ளாததே இதற்குக் காரணமாகும். அதன்படி விமானத்தில் நாம் எடுத்து செல்ல முடியாத விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.
இந்த காலத்தில் விமானத்தில் செல்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளுக்கு மட்டுமின்றி உள்நாட்டிலும் விமானங்களில் பயணிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

விமான பயணங்கள் என்பது பஸ், ரயில் பயணங்களைப் போல இல்லை. வானத்தில் பல நூறு கிமீ வேகத்தில் செல்வதால் விமானங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கும். விமானங்கள் இந்தளவுக்குப் பாதுகாப்பாக இருக்க இதுவே காரணமாக இருக்கிறது.
விமானங்கள்:
குறிப்பாக நாம் விமானத்தில் போகும் போது என்ன மாதிரியான பொருட்களை எடுத்துச் செல்கிறோம் என்பதற்குக் கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கிறது. அதிலும் குறிப்பாக உணவு விஷயத்தில்..! சில குறிப்பிட்ட வகை உணவுகள், காய்கறிகள், பழங்களை நிச்சயம் விமானங்களில் எடுத்துச் செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு இருக்கிறது. இவை பார்க்கக் கடுமையானது போலத் தெரிந்தாலும், விமான பாதுகாப்பை உறுதி செய்ய இதுபோன்ற கட்டுப்பாடுகள் அவசியமாகிறது.
தேங்காய் கூடாது:
அப்படி விமானங்களில் நிச்சயம் எடுத்துச் செல்லக்கூடாத உணவுப் பொருட்களில் முதன்மையாக இருப்பது தேங்காய்.. அட என்னப்பா தேங்காய் கூட எடுத்துச் செல்லக்கூடாதா என நீங்கள் கேட்கலாம். தேங்காய் எளிதாகத் தீப்பற்றக்கூடிய பொருளாகும். அதில் அதிகப்படியான எண்ணெய் உள்ள சூழலில், ஈஸியாக தீப்பற்றும். மேலும், உயரம் செல்லும் போது தேங்காய் உள்ளே உள்ள அழுத்தம் அதிகரித்து அது வெடித்துச் சிதறும் ஆபத்து இருக்கிறது. இதன் காரணமாகவே தேங்காயை எடுத்துச் செல்ல எந்தவொரு விமான நிறுவனமும் அனுமதிக்காது.
கட்டுப்பாடுகள் எப்படி:
அதாவது நமது நாட்டில் முழு தேங்காயை எந்தவொரு விமான நிறுவனமும் அனுமதிக்காது. செக் இன் லக்கேஜாக இருந்தாலும் சரி, ஹேண்ட் லக்கேஜாக இருந்தாலும் சரி முழு தேங்காய்க்கு அனுமதி இல்லை. ஒரு சில விமான நிறுவனங்கள் சிறு தேங்காய் துண்டுகளை செக் இன் லக்கேஜில் அனுமதிக்கும். விமானத்தில் ஏறும் முன்பு, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் வெப்சைட்டில் இதற்கான ரூல்ஸை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். ஆனால், இவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்துச் செல்வதற்குப் பதிலாக மொத்தமாகத் தேங்காயை எடுத்துச் செல்லாமல் இருப்பதே சிறப்பு.
மற்ற பொருட்கள்:
இது தவிரப் பாதுகாப்பு கருதி வேறு சில பொருட்களுக்கும் கூட தடை இருக்கிறது. அதன்படி, மீன்/ இறைச்சி, மிளகாய், ஊறுகாய், மிளகாய்த் தூள் உள்ளிட்ட மசாலா பொருட்களுக்கும் தடை இருக்கிறது. அதாவது தூளாக இருக்கும் எந்தவொரு மசாலா பொருட்களுக்கும் அனுமதி இல்லை.
மேலும், சில பொருட்களுக்கு அனுமதி இருக்கும் போதிலும், கட்டுப்பாடுகள் உள்ளன. அவை தேன் (அதிகபட்சம் 100 மில்லி), கூல் டிரிங்க் (சிறிய பாட்டில்கள்). மேலும், நீங்கள் தண்ணீர் உட்பட திரவங்களை எடுத்துச் செல்லவும் கட்டுப்பாடு இருக்கிறது. அதாவது சில நாடுகளில் செக்யூரிட்டி செக்கில் பாட்டிலை காலி செய்ய வேண்டும். உள்ளே சென்று விமான நிலையத்தின் இலவச நீரைப் பிடித்துக் கொள்ளலாம். வாட்டர் பாட்டிலில் ஆபத்தான ரசாயனம் எடுத்துச் செல்வதைத் தடுக்கவே இந்த விதி பின்பற்றப்படுகிறது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications