மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டிஆர்பி வழக்கு: பார்க் மாஜி சிஇஓ பார்த்தோ தாஸ்குப்தாவுக்கு உடல்நலக்குறைவு- மருத்துவமனையில் அனுமதி

Google Oneindia Tamil News

மும்பை: டி.ஆர்.பி. மோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பார்க் மாஜி சிஇஓ பார்த்தோ தாஸ்குப்தாவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவி, ரேட்டிங்கில் முறைகேட்டில் ஈடுபட்டது என்பது வழக்கு. இந்த வழக்கில் பார்க் அமைப்பின் முன்னாள் சிஇஓ பார்த்தோ தாஸ்குப்தாவும் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.

Former BARC CEO Partho Dasgupta admitted in Hospital

பார்த்தோ தாஸ்குப்தாவின் ஜாமீன் மனுவை மும்பை மெட்ரோபாலிட்டன் நீதிமன்றம் கடந்த 4-ந் தேதி தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் டிஆர்பி ரேட்டிங் மோசடி வழக்கில் மும்பை போலீசார் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

பாலகோட் வான்வழித் தாக்குதலை முன்கூட்டியே.. வாட்ஸ் ஆப்பில் விவாதித்த அர்னாப்.. ஷாக் சம்பவம்!பாலகோட் வான்வழித் தாக்குதலை முன்கூட்டியே.. வாட்ஸ் ஆப்பில் விவாதித்த அர்னாப்.. ஷாக் சம்பவம்!

அதில் பார்த்தோ தாஸ்குப்தா, அர்னாப் கோஸ்வாமி இடையேயான வாட்ஸ் அப் உரையாடல்கள் இடம்பெற்றிருந்தன. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே பார்த்தோ தாஸ்குப்தாவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

இதனையடுத்து அவரை போலீசார் மும்பை ஜெஜெ மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அவருக்கு சர்க்கரை அளவு அதிகரித்ததால் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது பார்த்தோ தாஸ்குப்தா நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

English summary
Former BARC CEO Partho Dasgupta was admitted in Hospital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X