ஒரு ரயிலையே காணோமாம்.. 90 கண்டெய்னர்களுடன் சரக்கு ரயில் மாயம் என வெளியான ஊடக தகவல்
ரயில்வே தண்டவாளம், ரயில் என்ஜின்கள் திருடப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து ரயிலே ‘அபேஸ்’ ஆகியுள்ளது.
மும்பை : நாக்பூரில் இருந்து மும்பைக்கு சுமார் 90 கண்டெய்னர்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் மாயமாகியுள்ளதாகவும் இந்த ரயிலை தேடும் பணியில் ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் ஊடகத் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் பீகாரில் 2 கி.மீ நீளமுள்ள தண்டவாளம் காணாமல் போனது ஷாக் கொடுத்த நிலையில், தற்போது ஒரு ரயிலே காணாமல் போயுள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், ரயில்வே இந்த தகவலை இன்று மறுத்துள்ளது.
இது தொடர்பாக ஆங்கில ஊடகத்தில் வெளியான தகவல் இதோ: கடந்த பிப்ரவரி 1 அன்று நாக்பூரில் இருந்து புறப்பட்ட சரக்கு ரயில், அடுத்த நான்கைந்து நாட்களுக்குள் மும்பையை அடைந்திருக்க வேண்டும். ஆனால், இப்போது 14 நாட்களாகியும் அந்த சரக்கு ரயில் மும்பைக்குச் சென்று சேரவில்லையாம்.
பல கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி பொருட்கள் நிரம்பிய கண்டெய்னர்களை ஏற்றிச் சென்ற அந்த ரயிலை அதிகாரிகளால் இதுவரை கண்டறிய முடியவில்லை.
பாதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதியாளர்கள் மற்றும் ஏஜெண்டுகளும் கண்டெய்னர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

நாக்பூர் - மும்பை
PJT1040201 என்ற எண் கொண்ட சரக்கு ரயில், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரின் MIHAN இன்லேண்ட் கண்டெய்னர் டிப்போவில் இருந்து கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி மும்பைக்கு புறப்பட்டது. இந்த ரயில் 90 கண்டெய்னர்களுடன் கிளம்பியுள்ளது. அந்த ரயில் 4 அல்லது 5 நாட்களில் மும்பையைச் சென்றடைந்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை அந்த சரக்கு ரயில் கண்டெய்னர்களுடன் மும்பை வந்து சேரவில்லை.

கண்டுபிடிக்க முடியவில்லை
கடைசியாக, அந்த சரக்கு ரயில் கசரா ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ஒம்பர்மலி ரயில் நிலையத்தைக் கடந்துள்ளது. ஆனால், FOIS அமைப்பினால் ரயிலின் தற்போதைய இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. FOIS என்பது சரக்கு போக்குவரத்து ரயில் பெட்டிகளின் இயக்கத்தை லைவாக கண்காணிப்பதற்கான கணினிமயமாக்கப்பட்ட சிஸ்டம் ஆகும்.

பாதி வழியில் மாயம்
கடந்த சில நாட்களாக அந்த ரயிலை கண்டறிய அதிகாரிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் அந்த ரயிலைப் பற்றி இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. ரயில், பாதி வழியில் காணாமல் போன நிலையில், அந்த ரயிலைக் கண்டுபிடிக்க தீவிர முயற்சியில் கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (CONCOR) மற்றும் ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

கண்டெய்னர்
"சிஸ்டத்தில் ரயிலின் இருப்பிடம் தெரியாததால் ஏதோ தொழில்நுட்பத் தவறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. அதனால், ரயில் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. கான்கோர் மற்றும் ரயில்வே அதிகாரிகள் ரயிலைக் கண்டுபிடிக்க கடுமையாக உழைத்து வருகிறார்கள். விரைவில் கண்டுபிடிப்போம் என்று நம்புகிறோம்" என CONCOR நிறுவனத்தின் தலைமை மேலாளர் சந்தோஷ் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

பல கோடி மதிப்புள்ள பொருட்கள்
காணாமல் போன அந்த ரயிலில், ஏற்றுமதி தரம் கொண்ட அரிசி, காகிதம், பிளாஸ்டிக் பொருட்கள், இரசாயனங்கள் மற்றும் பிற பொருட்களால் நிரப்பப்பட்ட 90 கன்டெய்னர்கள் உள்ளன. இது பல கோடி மதிப்புள்ளது எனக் கூறப்படுகிறது. சரக்கு ரயில் மாயமாகியிருப்பதால், இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான ஏற்றுமதியாளர்கள் மற்றும் கப்பல் ஏஜெண்ட்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் எனக் கருதப்படுகிறது. இவ்வாறு ஊடக செய்தி வெளியான நிலையில், இதை ரயில்வே இன்று மறுத்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications