மும்பையை திக்குமுக்காட செய்யும் கனமழை.. சாலைகளில் வெள்ளம்.. விமானங்கள் ரத்து.. போக்குவரத்து பாதிப்பு
Recommended Video
மும்பை: மும்பையில் கொட்டித்தீர்க்கும் கனமழையால் விமான சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கனமழை பெய்து வருகிறது. அந்தேரி, கொலபா, சியான், செம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறாது.
தொடர்ந்து கொட்டித் தீர்க்கும் கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டது.

விமானங்கள் ரத்து
வானிலை மிக மோசமாக இருந்ததால் மும்பையில் இருந்து புறப்படும் விமானங்கள் அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. இந்நிலையில் விடாமல் பெய்யும் கனமழையால் மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கனமழை தொடரும்
கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அடுத்த 4 மணி நேரத்திற்கு மும்பை அதன் சுற்றுப்புறப்பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மக்களுக்கு எச்சரிக்கை
தொடர் மழை காரணமாக மும்பை போலீசாரும் மும்பை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதாவது இரவு முழுவதும் இடைவிடாது பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெளியே வரவேண்டாம்
தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதியில் மக்கள் வெளியே வர வேண்டாம். கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் பொதுமக்கள் கடல் அருகே செல்ல வேண்டாம் என்றும் மும்பை போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications