மொபைல் சார்ஜர், சுத்தமான குடிநீர், வாஷ்பேஷின்.. இவையெல்லாம் ரயிலில் மட்டும்தான் கிடைக்குமா என்ன?
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பயணிகள் சொகுசு பயணம் மேற்கொள்வதற்காக பல்வேறு வசதிகள் ஆட்டோவில் பொருத்தப்பட்டுள்ளன.
இன்றைய காலகட்டத்தில் வாழ்க்கையே இயந்திரமயமாகிவிட்டது. நாம் பயன்படுத்தும் அத்தனை பொருட்களையும் சுலபமாக பயன்படுத்தும் படியாக இயந்திரங்கள் வந்துவிட்டன.
வீடுகளில் சாப்பிட்டுவிட்டு நின்றபடியே கை கழுவ வாஷ் பேஷின், மொபைல் சார்ஜர், கம்ப்யூட்டர் லேப்டாப் உள்ளிட்ட வசதிகளை நாம் எங்கு சென்றாலும் தேடி வருகிறோம். குறிப்பாக செல்போன் சார்ஜர், லேப்டாப் உள்ளிட்டவற்றை விரும்புவது வழக்கம்.

கெய்த்
வீட்டிலிருக்கும் போது சரி ஆட்டோவில் பயணம் செய்யும்போது எப்படி இந்த வசதிகளை பெற முடியும்? அதற்கு நாம் மும்பையில் உள்ள சத்யவான் கெய்த் ஆட்டோவில் பயணம் செய்ய வேண்டும்.

செடி கொடிகள்
ஆம் இவரது ஆட்டோவில் செல்போன் சார்ஜர், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கணினியை பயன்படுத்தும் வசதி, வாஷ் பேஷின், செடி கொடிகளுடன் கூடிய பசுமையான சூழல் ஆகியவை உள்ளன.
|
ஆட்டோ ரிக்ஷா
இவரது ஆட்டோவின் பின்னால் மும்பையின் முதல் வீடு அமைப்பிலான ஆட்டோ ரிக்ஷா, முழுமையான குடும்ப பொழுதுபோக்கு,மும்பையின் விருப்ப ஆட்டோ ரிக்ஷா உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.
|
சிறந்த சேவை
இதுகுறித்து சத்யவான் கெய்த் கூறுகையில், எனது ஆட்டோவில் செல்போனை சார்ஜ் போட்டுக் கொள்ளலாம். சுத்தமான குடிநீர் உள்ளது. கை அலம்ப வாஷ் பேஷின் உள்ளது. ஒரு கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்யும் மூத்த குடிமக்களுக்கு கட்டணம் கிடையாது. இதையெல்லாம் நான் செய்வதற்கு காரணம் என்னுடைய பயணிகளுக்கு சிறந்த சேவையை அளிக்க வேண்டும் என்பதற்காக என்றார் கெய்த்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!